< 2 Mosebok 3 >
1 Men Mose vaktade sins svärs Jethro får, Prestens i Midian; och han dref fåren bak in i öknena, och kom till Guds berg Horeb.
௧மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய ஓரேப்வரை வந்தான்.
2 Och Herrans Ängel syntes honom uti en brinnande låga utu buskanom. Och han såg, att busken brann af elden, och vardt dock icke förtärd.
௨அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
3 Och sade: Jag vill gå dit, och bese denna stora synena, hvi busken icke uppbrinner.
௩அப்பொழுது மோசே: “இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன்” என்றான்.
4 Då Herren såg, att han gick åstad till att se, kallade Gud honom utu buskanom, och sade: Mose, Mose. Han svarade: Här är jag.
௪அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான்.
5 Han sade: Träd icke hit, drag dina skor af dina fötter; ty rummet, der du står uppå, är ett heligt land.
௫அப்பொழுது அவர்: “இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார்.
6 Och han sade ytterligare: Jag är dins faders Gud, Abrahams Gud, Isaacs Gud och Jacobs Gud. Och Mose skylde sitt ansigte; ty han fruktade se uppå Gud.
௬பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான்.
7 Och Herren sade: Jag hafver sett mins folks jämmer uti Egypten, och jag hafver hört deras rop öfver dem, som drifva dem; jag hafver förnummit deras vedermödo;
௭அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.
8 Och är nederstigen till att frälsa dem utu de Egyptiers våld; och föra dem utu det landet, in uti ett godt och vidt land, som flytandes är med mjölk och hannog, såsom är på den platsen, som de Cananeer, Hetheer, Amoreer, Phereseer, Heveer och Jebuseer bo.
௮அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
9 Så efter nu Israels barnas rop är kommet före mig, och jag dertill hafver skådat deras tvång, der de Egyptier dem med betvinga;
௯இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.
10 Så gack nu, jag vill sända dig till Pharao, att du skall föra mitt folk Israels barn utur Egypten.
௧0நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா” என்றார்.
11 Mose sade till Gud: Ho är jag, att jag gå skulle till Pharao, och föra Israels barn utur Egypten?
௧௧அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.
12 Han sade: Jag vill vara med dig, och detta skall vara dig för ett tecken, att jag hafver sändt dig; då du hafver fört mitt folk utur Egypten, skolen I offra Gudi på desso bergena.
௧௨அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.
13 Mose sade till Gud: Si, när jag kommer till Israels barn, och säger till dem: Edra fäders Gud hafver sändt mig till eder; och de säga till mig: Hvad är hans namn? hvad skall jag säga dem?
௧௩அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான்.
14 Sade Gud till Mose: Jag skall vara den jag vara skall; och sade: Så skall du säga till Israels barn: Jag skall varat, han hafver sändt mig till eder.
௧௪அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார்.
15 Och Gud sade ytterligare till Mose: Så skall du säga till Israels barn: Herren, edra fäders Gud, Abrahams Gud, Isaacs Gud och Jacobs Gud, hafver sändt mig till eder: Detta Namnet är mig evinnerliga; det skall vara min åminnelse ifrå barn och till barnabarn.
௧௫மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம்.
16 Derföre gack åstad, och församla de äldsta af Israel, och säg till dem: Herren, edra fäders Gud, hafver synts mig, Abrahams Gud, Isaacs Gud och Jacobs Gud, och sagt: Jag hafver sökt eder, och sett hvad eder vederfaret är uti Egypten;
௧௬நீ போய், இஸ்ரவேலின் மூப்பர்களைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா எனக்கு தரிசனமாகி, உங்களை நிச்சயமாக சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,
17 Och hafver sagt: Jag skall föra eder utu den Egyptiska jämmeren in uti de Cananeers, Hetheers, Amoreers, Phereseers, Heveers och Jebuseers land, uti det land, der mjölk och hannog uti flyter.
௧௭நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுடைய தேசத்திற்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்று சொல்.
18 Och då de höra dina röst, skall du och de äldste af Israel gå in till Konungen i Egypten, och säga till honom: Herren, de Ebreers Gud, hafver kallat oss. Så låt oss nu gå tre dagsresor in uti öknena, till att offra Herranom vårom Gud.
௧௮அவர்கள் உன்னுடைய வார்த்தையை கேட்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் எகிப்தின் ராஜாவினிடம் போய்: எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணம்போய், எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
19 Men jag vet, att Konungen i Egypten icke skall låta eder fara, utan genom stark under.
௧௯ஆனாலும், எகிப்து ராஜா என்னுடைய கையின் வல்லமையைக் கண்டாலொழிய, உங்களைப் போகவிடமாட்டான் என்று நான் அறிவேன்.
20 Ty jag skall uträcka mina hand, och slå Egypten med allahanda under, som jag derinne göra skall; sedan skall han låta fara eder.
௨0ஆகையால், நான் என்னுடைய கையை நீட்டி, எகிப்தின் நடுவில் நான் செய்யும் எல்லாவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின்பு அவன் உங்களைப் போகவிடுவான்.
21 Och jag vill gifva desso folkena nåde för de Egyptier, att när I utfaren, skolen I icke utgå med tomma händer;
௨௧அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை.
22 Utan hvar och en qvinna skall bedas af hennes grannqvinno och värdinno silfver och gyldene tyg, och kläder; dem skolen I lägga på edra söner och döttrar, och blotta de Egyptier.
௨௨ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார்.