< 1 Krönikeboken 2 >
1 Desse äro Israels barn: Ruben, Simeon, Levi, Juda, Isaschar, Sebulon,
இஸ்ரயேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2 Dan, Joseph, BenJamin, Naphthali, Gad, Asser.
தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
3 Juda barn äro: Er, Onan, Sela; de tre vordo honom födde af Sua dotter den Cananeiskon. Men Er, den förste Juda son, var arg för Herranom, derföre drap han honom.
யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூவரும் சூவாவின் மகளான கானானிய பெண்ணின் மகன்கள். யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவன் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவனாய் இருந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.
4 Men Thamar hans sonahustru födde honom Perez och Serah, så att all Juda barn voro fem.
யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.
5 Perez barn äro: Hezron och Hamul.
பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.
6 Men Serah barn äro: Simri, Ethan, Heman, Chalcol, Dara. Desse tillhopa äro fem.
சேராவின் மகன்கள்: சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
7 Charmi barn äro: Achar, hvilken bedröfvade Israel, då han förtog sig på det tillspillogifvet var.
கர்மீயின் மகன்: ஆகார், இவன் யெகோவாவுக்கென விலக்கப்பட்ட பொருட்களை எடுத்ததால், இஸ்ரயேலுக்குக் கேட்டை உண்டுபண்ணினான்.
8 Ethans barn äro: Asaria.
ஏத்தானின் மகன்: அசரியா.
9 Hezrons barn, som honom födde äro: Jerahmeel, Ram, Chelubai.
எஸ்ரோனின் மகன்கள்: யெராமியேல், ராம், காலேப்.
10 Ram födde Amminadab; Amminadab födde Nahesson, den Förstan för Juda barn.
ராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் யூதா மக்களுக்குத் தலைவனாக இருந்த நகசோனின் தகப்பன்.
11 Nahesson födde Salma; Salma födde Boas.
நகசோன் சல்மாவின் தகப்பன், சல்மா போவாஸின் தகப்பன்,
12 Boas födde Obed; Obed födde Isai;
போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத் ஈசாயின் தகப்பன்.
13 Isai födde sin första son Eliab, AbiNadab den andre, Simea den tredje,
ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: மூத்த மகன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சிமெயா,
14 Nethaneel den fjerde, Raddai den femte,
நான்காவது மகன் நெதனெயேல், ஐந்தாவது மகன் ரதாயி,
15 Ozem den sjette, David den sjunde.
ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.
16 Och deras systrar voro: ZeruJa och Abigail. ZeruJa barn äro: Abisai, Joab, Asahel, de tre.
அவர்களின் சகோதரிகள் செருயாள், அபிகாயில். செருயாளின் மூன்று மகன்கள் அபிசாய், யோவாப், ஆசகேல் என்பவர்கள்.
17 Men Abigail födde Amasa; och Amasa fader var Jether, en Ismaelit.
அபிகாயில் அமாசாயின் தாய்; அமாசாவின் தகப்பன் இஸ்மயேலியனாகிய யெத்தேர் என்பவன்.
18 Caleb, Nezrons son, födde med den qvinnone Asuba och med Jerigoth; och desse äro hennes barn; Jeser, Sobab och Ardon.
எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் எனப்பட்ட தன் மனைவியாகிய அசுபாளின்மூலம் பெற்ற மகன்கள்: ஏசேர், ஷோபாப், அர்தோன்.
19 Då Asuba blef död, tog Caleb Ephrath; hon födde honom Hur.
அசுபாள் இறந்தபின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு ஊர் என்பவனைப் பெற்றாள்.
20 Hur födde Uri; Uri födde Bezaleel.
ஊர் ஊரியின் தகப்பன், ஊரி பெசலெயேலின் தகப்பன்.
21 Derefter besof Hezron Machirs dotter, Gileads faders; och han tog henne, då han var sextio åra gammal; och hon födde honom Segub.
பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள்.
22 Segub födde Jair; han hade tre och tjugu städer i Gileads land.
செகூப் யாவீரின் தகப்பன்; இவன் கீலேயாத்திலே இருபத்துமூன்று பட்டணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
23 Och han tog utaf de samma Gesur och Aram, Jairs byar; dertill Kenath med dess döttrar, sextio städer. Desse äro alle Machirs barn, Gileads faders.
ஆனால் கேசூர், ஆராம் என்பவர்கள் யாவீரின் கிராமங்களையும், கேனாத்தையும் அதைச் சூழ்ந்திருந்த குடியிருப்புகளான அறுபது ஊர்களையும் கைப்பற்றினார்கள். இவர்கள் எல்லோரும் கீலேயாத்தின் தகப்பனான மாகீரின் சந்ததிகள்.
24 Efter Hezrons död i CalebEphrata lefde Hezron sina hustru Abia; hon födde honom Ashur, Thekoa fader.
எஸ்ரோன் காலேபின் ஊரான எப்பிராத்தாவில் இறந்தபின், அவனுடைய மனைவி அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தலைவனான அசூரைப் பெற்றாள்.
25 Jerahmeel, Hezrons förste son, hade barn; den förste Ram, Buna, Oren och Ozem, och Ahia.
எஸ்ரோனின் முதற்பேறான யெராமியேலின் மகன்கள்: முதற்பேறானவன் ராம், மற்றவர்கள் பூனா, ஓரேன், ஓத்சேம், அகியா.
26 Och Jerahmeel hade ännu ena andra hustru, som het Atarah; hon är Onams moder.
யெராமியேலுக்கு அத்தாராள் என்னும் வேறோரு மனைவியும் இருந்தாள்; இவள் ஓனாம் என்பவனின் தாய்.
27 Rams barn, Jerahmeels första sons, äro: Maaz, Jamin och Eker.
யெராமியேலின் முதற்பேறானவனான ராமின் மகன்கள்: மாஸ், யாமின், எக்கேர்.
28 Men Onam hade barn: Sammai och Jada. Sammai barn äro: Nadab och Abisur.
ஓனாமின் மகன்கள்: சம்மாய், யாதா. சம்மாயின் மகன்கள்: நாதாப், அபிசூர்.
29 Men Abisurs hustru het Abihail; hon födde honom Ahban och Molid.
அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல். அவள் அவனுக்கு அக்பான், மோளித் என்பவர்களைப் பெற்றாள்.
30 Nadabs barn äro: Seled och Appaim; och Seled blef död barnlös.
நாதாபின் மகன்கள்: சேலேத், அப்பாயிம். சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
31 Appaims barn äro: Jisei. Jisei barn äro: Sesan. Sesans barn äro: Ahlai.
அப்பாயிமின் மகன்: இஷி, அவன் சேசானின் தகப்பன், சேசான் அக்லாயின் தகப்பன்.
32 Jada barn, Sammai broders, äro: Jether och Jonathan; men Jether blef död barnlös.
சம்மாயின் சகோதரனான யாதாவின் மகன்கள்: யெத்தெர், யோனத்தான். யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
33 Men Jonathans barn äro: Peleth och Sasa. Det äro Jerahmeels barn.
யோனத்தானின் மகன்கள்: பெலெத், சாசா. இவர்கள் யெராமியேலின் சந்ததிகள்.
34 Men Sesan hade inga söner, utan döttrar. Och Sesan hade en Egyptisk tjenare, han het Jarha.
சேசானுக்கு மகன்கள் இல்லை; மகள்கள் மட்டுமே இருந்தார்கள். சேசானுக்கு எகிப்தைச் சேர்ந்த யர்கா என்னும் வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
35 Och Sesan gaf Jarha, sinom tjenare, sina dotter till hustru; hon födde honom Attai.
சேசான் தனது மகளை அவனுடைய வேலைக்காரனாகிய யர்காவுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அவர்களுக்கு அத்தாயி என்ற மகன் இருந்தான்.
36 Attai födde Nathan; Nathan födde Sabad.
அத்தாயி நாத்தானின் தகப்பன்; நாத்தான் சாபாதின் தகப்பன்.
37 Sabad födde Ephlal; Ephlal födde Obed;
சாபாத் எப்லாலின் தகப்பன்; எப்லால் ஓபேத்தின் தகப்பன்.
38 Obed födde Jehu; Jehu födde Asaria;
ஓபேத் ஏகூவின் தகப்பன்; ஏகூ அசரியாவின் தகப்பன்.
39 Asaria födde Helez; Helez födde Elasa;
அசரியா ஏலேஸின் தகப்பன்; ஏலேஸ் எலெயாசாவின் தகப்பன்.
40 Elasa födde Sismai; Sismai födde Sallum;
எலெயாசா சிஸ்மாயின் தகப்பன். சிஸ்மாய் சல்லூமின் தகப்பன்.
41 Sallum födde Jekamia; Jekamia födde Elisama.
சல்லூம் எக்கமியாவின் தகப்பன்; எக்கமியா எலிஷாமாவின் தகப்பன்.
42 Calebs barn, Jerahmeels broders, äro: Mesa, hans förste son; han är Siphs fader, och Maresa barn, Hebrons faders.
யெராமியேலின் சகோதரனான காலேபின் மகன்கள்: சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பேறானவனும், எப்ரோனின் தகப்பனாகிய மரேஷாவின் மகன்களுமே.
43 Hebrons barn äro: Korah, Thappuah, Rekem och Serna.
எப்ரோனின் மகன்கள்: கோராகு, தப்புவா, ரெகெம், செமா.
44 Men Serna födde Raham, Jorkeams fader; Rekem födde Sammai.
செமா ரேகேமின் தகப்பன்; ரேகேம் யோர்க்கேயாமின் தகப்பனான ரெக்கேமின் தகப்பன். ரெகெம் சம்மாயின் தகப்பன்.
45 Sammai son het Maon; och Maon var Bethzurs fader.
சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
46 Men Epha, Calebs frilla, födde Haran, Moza och Gases. Haran födde Gases.
காலேபின் மறுமனையாட்டி எப்பா என்பவள் ஆரான், மோசா, காசேஸ் என்பவர்களின் தாய். ஆரான் காசேஸின் தகப்பன்.
47 Men Jahdai barn äro: Regem, Jotham, Gesan, Pelet, Epha och Saaph.
யாதாயின் மகன்கள்: ரேகேம், யோதாம், கேசான், பெலெத், எப்பா, சாகாப்.
48 Men Maacha, Calebs frilla, födde Seber och Thirhana;
காலேபின் மறுமனையாட்டி மாக்காள் என்பவள் சேபேர், திர்கானா ஆகியோரின் தாய்.
49 Och födde desslikes Saaph, Madmanna foder, och Seva, Machbena fader, och Gibea fader. Achsa var Calebs dotter.
அதோடு அவள் மத்மன்னாவின் தகப்பன் சாகாபையும், மக்பேனாவினதும் கிபியாவினதும் தகப்பனான சேவாவையும் பெற்றாள். அக்சாள் என்பவள் காலேபின் மகள்.
50 Desse voro Calebs barn, Hurs den förste sonens af Ephrata: Sobal, KiriathJearims fader,
இவர்கள் எல்லோரும் காலேபின் சந்ததிகளாவர். எப்ராத்தாளின் முதற்பேறானவனான ஊரின் மகன்கள்: கீரியாத்யாரீமின் தகப்பனான சோபால்,
51 Salma, BethLehems fader, Hareph, BethGaders fader.
பெத்லெகேமின் தகப்பனான சல்மா, பெத்காதேரின் தகப்பனான ஆரேப்.
52 Och Sobal, KiriathJearims fader, hade söner; han såg halfva Manuhoth.
கீரியாத்யாரீமின் தகப்பனான சோபாலின் சந்ததிகளாவன: ஆரோயேயும், மெனுகோத்தியரின் அரைப்பகுதியினரும்.
53 Men de slägter i KiriathJearim voro: de Jithriter, Puthiter, Sumathiter och Misraiter. Utaf dessom äro utkomne de Zorgathiter och Esthaoliter.
கீரியாத்யாரீமின் குடும்பங்களாவன: இத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோரே. இவர்களில் இருந்தே சோராத்தியர், எஸ்தாவோலியர் ஆகிய சந்ததிகள் வந்தனர்.
54 Salma barn äro: BethLehem och de Netophathiter, kronorna till Joabs hus, och hälften af de Manathiter af den Zorgiten.
சல்மாவின் சந்ததிகள்: பெத்லெகேமியர், நெத்தோபாத்தியர், அதரோத் பெத்யோவாப்பியர், மானாத்தியரின் அரைப்பகுதியினர், சோரியர் ஆகியோரே.
55 Och de skrifvares slägter, som i Jabez bodde, äro: de Thirathiter, Simathiter, Suchathiter. Det äro de Kiniter, som komne äro af Hamath, BethRechabs fader.
அத்துடன் யாபேஸில் குடியிருந்த எழுத்தாளரின் வம்சங்கள்: திராத்தியர், சிமாத்தியர், சுக்காத்தியர். இவர்கள் ஆமாத்திலிருந்து வந்த ரேகாப்பின் தகப்பனின் சந்ததியான கேனியர்.