< Jeremías 4 >
1 Si vuelves, oh Israel, dice el Señor, vuélvete a mí; y si apartaras tus abominaciones de delante de mí, no serás expulsado de mi presencia.
௧இஸ்ரவேல், நீ திரும்புகிறதற்கு மனமிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையிலிருந்து அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை.
2 Y harás tu juramento, por el Señor vivo, de buena fe, sabiduría y justicia; y las naciones serán bendecidas en el, y en él se gloriarán.
௨நீ உண்மையுடனும், நியாயத்தோடும், நீதியுடனும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; அந்நியமக்களும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
3 Porque esto es lo que el Señor dice a los hombres de Judá y a Jerusalén: Cultiva tu tierra no trabajada, ya no siembres entre las espinas.
௩யூதா மக்களுடனும், எருசலேம் மக்களுடனும் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.
4 Somete a una circuncisión del corazón, hombres de Judá y de la gente de Jerusalén; o mi ira saldrá como fuego, quemándose para que nadie pueda apagarla, a causa de la maldad de tus obras.
௪யூதா மனிதர்களே, எருசலேமின் குடிமக்களே, உங்கள் செயல்களுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல எழும்பி, அணைப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் யெகோவாவாக்கென்று உங்களை. முற்றிலுமாய் அர்ப்பணியுங்கள்.
5 Declara abiertamente en Judá, pública en Jerusalén y di: “Toquen el cuerno en la tierra; clamen en voz alta: Vengan juntos, y entremos en las ciudades amuralladas”.
௫தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கச்செய்யுங்கள்; நாம் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்துசேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்.
6 Levanta una bandera para una señal a Sión; vete en vuelo para que puedas estar seguro, no esperes más, porque te enviaré el mal del norte y una gran destrucción.
௬சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள்; நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா அழிவையும் வரச்செய்கிறேன்.
7 Un león ha subido de su lugar secreto en el bosque, y uno que destruye a las naciones está en camino; él ha salido de su lugar, para hacer que tu tierra sea una desolación, para que tus ciudades se conviertan en ruinas, sin que ningún hombre viva en ellas.
௭உன் தேசத்தைப் பாழாக்கிவிடுவதற்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, தேசங்களை அழிக்கிறவன் தன் இடத்திலிருந்து புறப்பட்டுவருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.
8 Para esto, vístanse de cilicio, con llanto y clamor: porque la ira ardiente del Señor no se ha apartado de nosotros.
௮இதினிமித்தம் சணல் ஆடையை அணிந்துகொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; யெகோவாவுடைய கடுங்கோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
9 Y acontecerá en aquel día, dice el Señor, que el corazón del rey estará muerto en él, y los corazones de los gobernantes; y los sacerdotes serán vencidos por el temor, y los profetas quedarán espantados.
௯அந்நாளில் ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் சோர்ந்துபோகும்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
10 Entonces dije: ¡Ah, Señor Dios! tus palabras no fueron ciertas cuando dijiste a este pueblo y a Jerusalén: Tendrás paz; Cuando la espada está al cuello.
௧0அப்பொழுது நான்: ஆ! யெகோவாவாகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், உண்மையாகவே இந்த மக்களுக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரச்செய்தீர்; பட்டயம் ஜீவன்வரை எட்டுகிறதே என்றேன்.
11 En ese momento se le dirá a este pueblo y a Jerusalén: Un viento ardiente de las colinas abiertas en el desierto sopla sobre la hija de mi pueblo, no para separar o limpiar el grano;
௧௧வனாந்திரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் மக்களாகிய மகளுக்கு நேராக வீசும் என்று அக்காலத்தில் இந்த மக்களுடனும் எருசலேமுடனும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.
12 Vendrá un viento completamente fuerte para esto; y ahora daré mi decisión contra ellos.
௧௨இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களுடன் நியாயம் பேசுவேன்.
13 Mira, él subirá como las nubes, y sus carruajes de guerra como el viento de tormenta; sus caballos son más rápidos que las águilas. El dolor es nuestro, porque la destrucción ha venido sobre nosotros.
௧௩இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போல் இருக்கிறது; அவனுடைய குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ, நாம் பாழாக்கப்படுகிறோமே.
14 Oh Jerusalén, limpia tu corazón del mal, para que puedas tener la salvación. ¿Cuánto tiempo tienen los propósitos del mal tendrán su lugar de descanso en ti?
௧௪எருசலேமே, நீ காப்பாற்றப்படுவதற்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பு நீங்கக் கழுவு; எதுவரை அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்தில் தங்கும்.
15 Porque una voz suena desde Dan, que da el mal desde las colinas de Efraín:
௧௫தாண் பட்டணத்திலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்செய்கிறது.
16 Haga que esto venga a la mente de las naciones, haga una declaración abierta contra Jerusalén, que los atacantes vienen de un país lejano y sus voces sonarán contra los pueblos de Judá.
௧௬தேசங்களுக்கு அதை நீங்கள் பிரபலப்படுத்துங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
17 Como guardianes de un campo, están contra ella por todos lados; Porque se ha rebelado contra mí, dice el Señor.
௧௭அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகம் செய்தது என்று யெகோவா சொல்லுகிறார்.
18 Tus caminos y tus acciones han hecho que estas cosas vengan sobre ti; este es tu pecado; Verdaderamente es amargo, penetrara en tu corazón.
௧௮உன் நடக்கையும் உன் செயல்களுமே இவைகளை உனக்கு சம்பவிக்கச்செய்தன; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயம்வரை எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
19 ¡Mi alma, mi alma! Me duele hasta lo más profundo de mi corazón; mi corazón está turbado en mí; No puedo estar tranquilo, porque el sonido del cuerno, la nota de la guerra, ha llegado a mis oídos.
௧௯என் குடல்கள், என் குடல்களே வலிக்கிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமைதலாக இருக்கமுடியாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், போரின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
20 Quebrantamiento sobre quebrantamiento; toda la tierra se ha destruido; de repente, mis tiendas, de inmediato mis cortinas, se han destruido.
௨0நாசத்திற்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; திடீரென்று என் கூடாரங்களும், ஒரு நிமிடத்தில் என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
21 ¿Cuánto tiempo seguiré viendo la bandera y escuchando el sonido del cuerno de guerra?
௨௧நான் எதுவரைக்கும் யுத்தத்தின் கொடியைக் கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன்.
22 Porque mi pueblo es necio, no me conocen; son hijos ignorantes, sin entendimiento, todos ellos, son sabios en el mal, pero no tienen conocimiento de hacer el bien.
௨௨என் மக்களோ அறிவில்லாதவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.
23 Mirando la tierra, vi que era inútil y sin forma; y a los cielos, que no tenían luz.
௨௩பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
24 Al mirar las montañas, los vi temblar, y todas las colinas se movieron.
௨௪மலைகளைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.
25 Mirando, vi que no había hombre, y todas las aves del cielo habían huido.
௨௫பின்னும் நான் பார்க்கும்போது, மனிதனில்லை; ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
26 Mirando, vi que el campo fértil era un desperdicio, y todas sus ciudades fueron derribadas ante el Señor y ante su ira ardiente.
௨௬மேலும் நான் பார்க்கும்போது, யெகோவாவாலும், அவருடைய கடுங்கோபத்தாலும் பயிர்நிலம் வனாந்திரமானது; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோனது.
27 Porque esto es lo que el Señor ha dicho: Toda la tierra será una desolación; Pero no haré una destrucción completa.
௨௭தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
28 La tierra llorará por esto, y los cielos en lo alto serán negros; porque lo he dicho, y no volveré de allí; Es mi propósito, y no será cambiado.
௨௮இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போகும்; நான் அதைச் சொன்னேன், அதைத் தீர்மானம்செய்தேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
29 Toda la tierra está en vuelo debido al ruido de los jinetes y los arqueros; se han refugiado en el bosque y en las rocas; cada ciudad ha sido abandonada, ni un hombre vive en ellas.
௨௯குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினால் எல்லா ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனிதனும் அவைகளில் குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.
30 Y tú, desolada, ¿qué harás? A pesar de que estás vestida de rojo, aunque te haces hermosa con ornamentos de oro, aunque te embellezcas los ojos con pintura, en vano te embelleces; Tus amantes te desprecian, tienen planes contra tu vida.
௩0பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் அணிந்தாலும், பொன் ஆபரணங்களால் உன்னை அலங்கரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; ஆசைநாயகர்கள் உன்னை அசட்டைசெய்து, உன் உயிரை வாங்கத் தேடுவார்கள்.
31 Una voz ha llegado a mis oídos como la voz de una mujer en dolores de parto, el dolor de alguien que dio a luz a su primer hijo, la voz de la hija de Sión, luchando por respirar, extendiendo sus manos, diciendo: ¡Ahora el dolor es mío! porque mi fuerza se ha ido de mí a causa de los asesinos.
௩௧கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்முறை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், மகளாகிய சீயோனின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ, கொலைபாதகர்களால் என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.