< Salmos 85 >
1 Al Vencedor: A los hijos de Coré. Salmo. Fuiste propicio a tu tierra, oh SEÑOR; volviste la cautividad de Jacob.
௧கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
2 Perdonaste la iniquidad de tu pueblo; cubriste todos los pecados de ellos. (Selah)
௨உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)
3 Quitaste toda tu saña; te volviste de la ira de tu furor.
௩உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
4 Vuélvenos, oh Dios, salud nuestra, y haz cesar tu ira de sobre nosotros.
௪எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.
5 ¿Estarás enojado contra nosotros para siempre? ¿Extenderás tu ira de generación en generación?
௫என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?
6 ¿No volverás tú a darnos vida, y tu pueblo se alegrará en ti?
௬உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
7 Muéstranos, oh SEÑOR, tu misericordia, y danos tu salud.
௭யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
8 Escucharé lo que hablará Dios el SEÑOR; porque hablará paz a su pueblo y a sus santos, para que no se conviertan otra vez a la locura.
௮கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; அவர் தம்முடைய மக்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.
9 Ciertamente cercana está su salud a los que le temen; para que habite la gloria en nuestra tierra.
௯நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
10 La misericordia y la verdad se encontraron; la justicia y la paz se besaron.
௧0கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
11 La verdad reverdecerá de la tierra; y la justicia mirará desde los cielos.
௧௧சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
12 El SEÑOR dará también el bien; y nuestra tierra dará su fruto.
௧௨யெகோவா நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.
13 La justicia irá delante de él; y pondrá sus pasos en camino.
௧௩நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.