< Salmos 140 >
1 Al Vencedor: Salmo de David. Líbrame, oh SEÑOR, del hombre malo; de varón de violencia me guarde.
௧இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
2 Los cuales pensaron males en el corazón, cada día urden contiendas.
௨அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
3 Aguzaron su lengua como la serpiente; veneno de áspid hay debajo de sus labios. (Selah)
௩பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
4 Guárdame, oh SEÑOR, de manos del impío, del varón de violencia me guarde; que han pensado trastornar mis pasos.
௪யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்; அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
5 Me han escondido lazo y cuerdas los soberbios; han tendido red; en el lugar de la senda me han puesto lazos. (Selah)
௫பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
6 He dicho al SEÑOR: Dios mío eres tú; escucha, oh SEÑOR, la voz de mis ruegos.
௬நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.
7 Oh DIOS el Señor, fortaleza de mi salud, cubre mi cabeza el día de las armas.
௭ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.
8 No des, oh SEÑOR, al impío sus deseos; no saques adelante su pensamiento, para que no se ensoberbezca. (Selah)
௮யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
9 En cuanto a la cabeza de los que me cercan, la perversidad de sus labios la cubra.
௯என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
10 Caigan sobre ellos brasas; en el fuego los haga caer, en profundos hoyos de donde no salgan.
௧0நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
11 El varón de lengua maligna no será firme en la tierra; el mal cazará al varón de violencia para derribarle.
௧௧பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
12 Yo sé que hará el SEÑOR el juicio del pobre, el juicio de los menesterosos.
௧௨சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன்.
13 Ciertamente los justos alabarán tu Nombre; los rectos morarán en tu presencia.
௧௩நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.