< Salmos 119 >
1 ALEF Bienaventurado los perfectos de camino; los que andan en la ley del SEÑOR.
௧ஆலெப். யெகோவாவுடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள்.
2 Bienaventurados los que guardan sus testimonios, y con todo el corazón le buscan.
௨அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
3 Pues los que no hacen iniquidad, andan en sus caminos.
௩அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
4 Tú encargaste tus mandamientos, que sean muy guardados.
௪உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி நீர் கற்றுக்கொடுத்தீர்.
5 ¡Deseo que fuesen ordenados mis caminos a guardar tus estatutos!
௫உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும்.
6 Entonces no sería yo avergonzado, cuando mirase en todos tus mandamientos.
௬நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
7 Te alabaré con rectitud de corazón, cuando aprendiere los juicios de tu justicia.
௭உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
8 Tus estatutos guardaré, no me dejes enteramente.
௮உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும். பேத்.
9 BET ¿Con qué limpiará el joven su camino? Cuando guardare tu palabra.
௯வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே.
10 Con todo mi corazón te he buscado, no me dejes errar de tus mandamientos.
௧0என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.
11 En mi corazón he guardado tus dichos, para no pecar contra ti.
௧௧நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.
12 Bendito tú, oh SEÑOR, enséñame tus estatutos.
௧௨யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
13 Con mis labios he contado todos los juicios de tu boca.
௧௩உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
14 En el camino de tus testimonios me he gozado, como sobre toda riqueza.
௧௪திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன்.
15 En tus mandamientos meditaré, y consideraré tus caminos.
௧௫உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன்.
16 En tus estatutos me recrearé, no me olvidaré de tus palabras.
௧௬உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.
17 GUIMEL Haz este bien a tu siervo que viva, y guarde tu palabra.
௧௭உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
18 Destapa mis ojos, y miraré las maravillas de tu ley.
௧௮உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும்.
19 Advenedizo soy yo en la tierra, no encubras de mí tus mandamientos.
௧௯பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும்.
20 Quebrantada está mi alma de desear tus juicios todo el tiempo.
௨0உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது.
21 Reprendiste a los soberbios, malditos los que yerran de tus mandamientos.
௨௧உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
22 Aparta de mí, oprobio y menosprecio; porque tus testimonios he guardado.
௨௨நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன்.
23 Príncipes también se sentaron y hablaron contra mí, hablando tu siervo según tus estatutos.
௨௩அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
24 Pues tus testimonios son mis deleites, y mis consejeros.
௨௪உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது. டாலெத்.
25 DALET Se apegó con el polvo mi alma, vivifícame según tu palabra.
௨௫என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
26 Mis caminos te conté, y me has respondido; enséñame tus estatutos.
௨௬என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
27 Hazme entender el camino de tus mandamientos, y meditaré de tus maravillas.
௨௭உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
28 Se deshace mi alma de ansiedad, confírmame según tu palabra.
௨௮துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
29 Aparta de mí, camino de mentira; y de tu ley hazme misericordia.
௨௯பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
30 Escogí el camino de la verdad; he puesto tus juicios delante de mí.
௩0மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
31 Me he allegado a tus testimonios; oh SEÑOR, no me avergüences.
௩௧உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.
32 Por el camino de tus mandamientos correré, cuando ensanchares mi corazón.
௩௨நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். எ.
33 HE Enséñame, oh SEÑOR, el camino de tus estatutos, y lo guardaré hasta el fin.
௩௩யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
34 Dame entendimiento, y guardaré tu ley; y la cumpliré de todo corazón.
௩௪எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
35 Guíame por la senda de tus mandamientos, porque en ella tengo mi voluntad.
௩௫உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாக இருக்கிறேன்.
36 Inclina mi corazón a tus testimonios, y no a la avaricia.
௩௬என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும்.
37 Aparta mis ojos, que no vean la vanidad; avívame en tu camino.
௩௭மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
38 Confirma tu palabra a tu siervo, que te teme.
௩௮உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
39 Quita de mí el oprobio que he temido, porque buenos son tus juicios.
௩௯நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
40 He aquí yo he codiciado tus mandamientos, vivifícame en tu justicia.
௪0இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். வௌ.
41 VAU Y venga a mí tu misericordia, oh SEÑOR; tu salud, conforme a tu dicho.
௪௧யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
42 Y daré por respuesta a mi avergonzador, que en tu palabra he confiado.
௪௨அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
43 Y no quites de mi boca en ningún tiempo la palabra de verdad; porque a tu juicio espero.
௪௩சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
44 Y guardaré tu ley siempre, de siglo a siglo.
௪௪நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
45 Y andaré en libertad, porque busqué tus mandamientos.
௪௫நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், அகலமான பாதையில் நடப்பேன்.
46 Y hablaré de tus testimonios delante de los reyes, y no me avergonzaré.
௪௬நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
47 Y me deleitaré en tus mandamientos, que he amado.
௪௭நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன்.
48 Alzaré asimismo mis manos a tus mandamientos que amé; y meditaré en tus estatutos.
௪௮நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். சாயீன்.
49 ZAIN Acuérdate de la palabra dada a tu siervo, en la cual me has hecho esperar.
௪௯நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
50 Esta es mi consolación en mi aflicción, porque tu dicho me vivificó.
௫0அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது.
51 Los soberbios se burlaron mucho de mí, mas no me he apartado de tu ley.
௫௧பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
52 Me acordé, oh SEÑOR, de tus juicios antiguos, y me consolé.
௫௨யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
53 Horror se apoderó de mí, a causa de los impíos que dejan tu ley.
௫௩உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது.
54 Canciones me son tus estatutos en la casa de mis peregrinaciones.
௫௪நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது.
55 Me acordé en la noche de tu Nombre, oh SEÑOR, y guardé tu ley.
௫௫யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
56 Esto tuve, porque guardaba tus mandamientos.
௫௬நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், இது எனக்குக் கிடைத்தது. ஹெத்.
57 CHET Mi porción, oh SEÑOR, dije, será guardar tus palabras.
௫௭யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
58 Tu presencia supliqué de todo corazón, ten misericordia de mí según tu palabra.
௫௮முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும்.
59 Consideré mis caminos, y torné mis pies a tus testimonios.
௫௯என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
60 Me apresuré, y no me retardé en guardar tus mandamientos.
௬0உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதிக்காமல் விரைந்தேன்.
61 Compañía de impíos me han robado, mas no me he olvidado de tu ley.
௬௧துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
62 A medianoche me levantaré a alabarte sobre los juicios de tu justicia.
௬௨உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன்.
63 Compañero soy yo a todos los que te temieren, y guardaren tus mandamientos.
௬௩உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.
64 De tu misericordia, oh SEÑOR, está llena la tierra; tus estatutos me enseñan.
௬௪யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். தேத்.
65 TET Bien has hecho con tu siervo, oh SEÑOR, conforme a tu palabra.
௬௫யெகோவாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாக நடத்தினீர்.
66 Bondad de sentido y sabiduría me enseña; porque tus mandamientos he creído.
௬௬உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன்.
67 Antes que fuera humillado, yo erraba; mas ahora tu dicho guardo.
௬௭நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
68 Bueno eres tú, y bienhechor; enséñame tus estatutos.
௬௮தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
69 Sobre mí fabricaron mentira los soberbios, mas yo guardaré de todo corazón tus mandamientos.
௬௯பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
70 Se engrosó el corazón de ellos como sebo; mas yo en tu ley me he deleitado.
௭0அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்.
71 Bueno me es haber sido humillado, para que aprenda tus estatutos.
௭௧நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
72 Mejor me es la ley de tu boca, que millares de oro y plata.
௭௨அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம். யோட்.
73 YOD Tus manos me hicieron y me formaron; hazme entender, y aprenderé tus mandamientos.
௭௩உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கினது; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
74 Los que te temen, me verán, y se alegrarán; porque en tu palabra he esperado.
௭௪நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
75 Conozco, oh SEÑOR, que tus juicios son la misma justicia, y que en fidelidad me afligiste.
௭௫யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
76 Sea ahora tu misericordia para consolarme, conforme a lo que has dicho a tu siervo.
௭௬நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, உமது கிருபை என்னைத் தேற்றட்டும்.
77 Vengan a mí tus misericordias, y viva; porque tu ley es mi deleite.
௭௭நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
78 Sean avergonzados los soberbios, porque sin causa me han calumniado; pero yo, meditaré en tus mandamientos.
௭௮பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
79 Tórnense a mí los que te temen y conocen tus testimonios.
௭௯உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும்.
80 Sea mi corazón perfecto en tus estatutos; para que no sea yo avergonzado.
௮0நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும். கப்.
81 CAF Desfalleció de deseo mi alma por tu salud, esperando a tu palabra.
௮௧உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
82 Desfallecieron mis ojos por tu dicho, diciendo: ¿Cuándo me consolarás?
௮௨எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
83 Porque estoy como el odre al humo; mas no he olvidado tus estatutos.
௮௩புகையிலுள்ள தோல்பை போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
84 ¿Cuántos son los días de tu siervo? ¿Cuándo harás juicio contra los que me persiguen?
௮௪உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்?
85 Los soberbios me han cavado hoyos; mas no obran según tu ley.
௮௫உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
86 Todos tus mandamientos son la misma verdad; sin causa me persiguen; ayúdame.
௮௬உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு உதவி செய்யும்.
87 Casi me han consumido por tierra; mas yo no he dejado tus mandamientos.
௮௭அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
88 Conforme a tu misericordia vivifícame, y guardaré los testimonios de tu boca.
௮௮உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன். லாமேட்.
89 LAMED Para siempre, oh SEÑOR, permanece tu palabra en los cielos.
௮௯யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
90 Por generación y generación es tu verdad; tú afirmaste la tierra, y persevera.
௯0உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
91 Por tu ordenación perseveran hasta hoy; porque todas ellas son tus siervos.
௯௧உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; அனைத்தும் உம்மைச் சேவிக்கும்.
92 Si tu ley no hubiese sido mi delicia, ya hubiera perecido en mi aflicción.
௯௨உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
93 Nunca jamás me olvidaré de tus mandamientos; porque con ellos me has vivificado.
௯௩நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
94 Tuyo soy yo, guárdame; porque he buscado tus mandamientos.
௯௪நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
95 Los impíos me han aguardado para destruirme; mas yo entenderé en tus testimonios.
௯௫துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
96 A toda perfección he visto fin; amplio sobremanera es tu mandamiento.
௯௬நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா பெரிது. மேம்.
97 MEM ¡Cuánto he amado tu ley! Todo el día es ella mi meditación.
௯௭உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.
98 Me has hecho más sabio que mis enemigos con tus mandamientos; porque me son eternos.
௯௮நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
99 Más que todos mis enseñadores he entendido; porque tus testimonios han sido mi meditación.
௯௯உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
100 He entendido más que los ancianos, porque he guardado tus mandamientos.
௧00உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன்.
101 De todo mal camino detuve mis pies, para guardar tu palabra.
௧0௧உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன்.
102 De tus juicios no me aparté; porque tú me enseñaste.
௧0௨நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன்.
103 ¡Cuán dulces han sido a mi paladar tus dichos! Más que la miel a mi boca.
௧0௩உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் இனிமையானதாக இருக்கும்.
104 De tus mandamientos he adquirido entendimiento; por tanto he aborrecido todo camino de mentira.
௧0௪உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். நூன்.
105 NUN Lámpara es a mis pies tu palabra, y lumbre a mi camino.
௧0௫உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.
106 Juré y ratifiqué el guardar los juicios de tu justicia.
௧0௬உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
107 Afligido estoy en gran manera; oh SEÑOR, vivifícame conforme a tu palabra.
௧0௭நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
108 Te ruego, oh SEÑOR, que te sean agradables los sacrificios voluntarios de mi boca; y enséñame tus juicios.
௧0௮யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
109 De continuo está mi alma en mi mano; mas no me he olvidado de tu ley.
௧0௯என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன்.
110 Me pusieron lazo los impíos; pero yo no me desvié de tus mandamientos.
௧௧0துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன்.
111 Por heredad he tomado tus testimonios para siempre; porque son el gozo de mi corazón.
௧௧௧உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி.
112 Mi corazón incliné a poner por obra tus estatutos de continuo, hasta el fin.
௧௧௨முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். சாமெக்.
113 SAMEC Los pensamientos vanos aborrezco; y tu ley he amado.
௧௧௩வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
114 Mi escondedero y mi escudo eres tú; a tu palabra he esperado.
௧௧௪என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
115 Apartaos de mí los malignos, porque guardaré los mandamientos de mi Dios.
௧௧௫பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
116 Susténtame conforme a tu palabra, y viviré; y no me frustres de mi esperanza.
௧௧௬நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும்.
117 Sosténme, y seré salvo; y me deleitaré siempre en tus estatutos.
௧௧௭என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன்.
118 Atropellaste a todos los que yerran de tus estatutos; porque su engaño es mentira.
௧௧௮உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது.
119 Como escorias hiciste deshacer a todos los impíos de la tierra; por tanto yo he amado tus testimonios.
௧௧௯பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
120 Mi carne se ha estremecido por temor de ti; y de tus juicios tengo miedo.
௧௨0உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். ஆயின்.
121 AYIN Juicio y justicia he hecho; no me dejes a mis opresores.
௧௨௧நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும்.
122 Responde por tu siervo para bien; no me hagan violencia los soberbios.
௧௨௨உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும்.
123 Mis ojos desfallecieron por tu salud, y por el dicho de tu justicia.
௧௨௩உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
124 Haz con tu siervo según tu misericordia, y enséñame tus estatutos.
௧௨௪உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
125 Tu siervo soy yo, dame entendimiento; para que sepa tus testimonios.
௧௨௫நான் உமது ஊழியன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
126 Tiempo es de actuar, oh SEÑOR; han disipado tu ley.
௧௨௬நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.
127 Por eso he amado tus mandamientos más que el oro, y más que oro muy puro.
௧௨௭ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
128 Por eso todos los mandamientos de todas las cosas estimé rectos; aborrecí todo camino de mentira.
௧௨௮எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன். பே.
129 PE Maravillosos son tus testimonios; por tanto los ha guardado mi alma.
௧௨௯உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
130 La exposición de tus palabras alumbra; hace entender a los simples.
௧௩0உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
131 Mi boca abrí y suspiré; porque deseaba tus mandamientos.
௧௩௧உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
132 Mírame, y ten misericordia de mí, como acostumbras con los que aman tu Nombre.
௧௩௨உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
133 Ordena mis pasos con tu palabra; y ninguna iniquidad se enseñoree de mí.
௧௩௩உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும்.
134 Redímeme de la violencia de los hombres; y guardaré tus mandamientos.
௧௩௪மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
135 Haz que tu rostro resplandezca sobre tu siervo; y enséñame tus estatutos.
௧௩௫உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
136 Ríos de agua descendieron de mis ojos, porque no guardaban tu ley.
௧௩௬உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே.
137 TSADE Justo eres tú, oh SEÑOR, y rectos tus juicios.
௧௩௭யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
138 Encargaste la justicia es a saber tus testimonios, y tu verdad.
௧௩௮நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
139 Mi celo me ha consumido; porque mis enemigos se olvidaron de tus palabras.
௧௩௯என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது.
140 Sumamente pura es tu palabra; y tu siervo la ama.
௧௪0உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
141 Pequeño soy yo y desechado; mas no me he olvidado de tus mandamientos.
௧௪௧நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
142 Tu justicia es justicia eterna, y tu ley la misma verdad.
௧௪௨உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
143 Aflicción y angustia me hallaron; mas tus mandamientos fueron mis deleites.
௧௪௩துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி.
144 Justicia eterna son tus testimonios; dame entendimiento, y viviré.
௧௪௪உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். கோப்.
145 COF Clamé con todo mi corazón; respóndeme, SEÑOR, y guardaré tus estatutos.
௧௪௫முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
146 Clamé a ti; sálvame, y guardaré tus testimonios.
௧௪௬உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
147 Me anticipé al alba, y clamé; esperé en tu palabra.
௧௪௭அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
148 Se anticiparon mis ojos a las vigilias de la noche, para meditar en tus dichos.
௧௪௮உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும்.
149 Oye mi voz conforme a tu misericordia, oh SEÑOR; vivifícame conforme a tu juicio.
௧௪௯உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.
150 Se acercaron a la maldad los que me persiguen; se alejaron de tu ley.
௧௫0தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள்.
151 Cercano estás tú, oh SEÑOR; y todos tus mandamientos son la misma verdad.
௧௫௧யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
152 Hace ya mucho que he entendido de tus testimonios, que para siempre los fundaste.
௧௫௨நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன். ரேஷ்.
153 RESH Mira mi aflicción, y líbrame; porque de tu ley no me he olvidado.
௧௫௩என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறக்கமாட்டேன்.
154 Aboga mi causa, y redímeme; vivifícame con tu dicho.
௧௫௪எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
155 Lejos está de los impíos la salud; porque no buscan tus estatutos.
௧௫௫இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள்.
156 Muchas son tus misericordias, oh SEÑOR; vivifícame conforme a tus juicios.
௧௫௬யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
157 Muchos son mis perseguidores y mis enemigos; mas de tus testimonios no me he apartado.
௧௫௭என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன்.
158 Veía a los prevaricadores, y me carcomía; porque no guardaban tus palabras.
௧௫௮உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாக இருந்தது.
159 Mira, oh SEÑOR, que amo tus mandamientos; vivifícame conforme a tu misericordia.
௧௫௯இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
160 El principio de tu palabra es la misma verdad; y eterno es todo juicio de tu justicia.
௧௬0உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். ஷீன்.
161 SIN Príncipes me han perseguido sin causa; mas mi corazón tuvo miedo de tus palabras.
௧௬௧அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
162 Me gozo sobre tu dicho, como el que halla muchos despojos.
௧௬௨மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன்.
163 La mentira aborrezco y abomino; tu ley amo.
௧௬௩பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
164 Siete veces al día te alabo sobre los juicios de tu justicia.
௧௬௪உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165 Mucha paz tienen los que aman tu ley; y no hay para ellos tropiezo.
௧௬௫உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு தடைகள் இல்லை.
166 Tu salud he esperado, oh SEÑOR; y tus mandamientos he puesto por obra.
௧௬௬யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
167 Mi alma ha guardado tus testimonios, y los he amado en gran manera.
௧௬௭என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
168 He guardado tus mandamientos, y tus testimonios; porque todos mis caminos están delante de ti.
௧௬௮உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. தெள.
169 TAU Acérquese mi clamor delante de ti, oh SEÑOR; dame entendimiento conforme a tu palabra.
௧௬௯யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
170 Venga mi oración delante de ti; líbrame conforme a tu dicho.
௧௭0என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
171 Mis labios rebosarán alabanza, cuando me enseñares tus estatutos.
௧௭௧உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும்.
172 Hablará mi lengua tus dichos; porque todos tus mandamientos son la misma justicia.
௧௭௨உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
173 Sea tu mano en mi socorro; porque tus mandamientos he escogido.
௧௭௩நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும்.
174 He deseado tu salud, oh SEÑOR; y tu ley es mi delicia.
௧௭௪யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
175 Viva mi alma y alábale; y tus juicios me ayuden.
௧௭௫என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும்.
176 Yo me perdí como oveja extraviada; busca a tu siervo; porque no me he olvidado de tus mandamientos.
௧௭௬காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.