< Salmos 27 >

1 Por David. Yahvé es mi luz y mi salvación. ¿A quién debo temer? Yahvé es la fuerza de mi vida. ¿De quién debo tener miedo?
தாவீதின் பாடல். யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், யாருக்கு பயப்படுவேன்?
2 Cuando los malhechores vinieron a mí para devorar mi carne, incluso mis adversarios y mis enemigos, tropezaron y cayeron.
என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க, என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.
3 Aunque un ejército acampe contra mí, mi corazón no temerá. Aunque la guerra se levante contra mí, incluso entonces me sentiré confiado.
எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.
4 Una cosa he pedido a Yahvé, que buscaré: para que habite en la casa de Yahvé todos los días de mi vida, para ver la belleza de Yahvé, y a indagar en su templo.
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
5 Porque en el día de la angustia, me guardará en secreto en su pabellón. En el lugar secreto de su tabernáculo, me esconderá. Me levantará sobre una roca.
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
6 Ahora mi cabeza se alzará por encima de mis enemigos que me rodean. Ofreceré sacrificios de alegría en su tienda. Cantaré, sí, cantaré alabanzas a Yahvé.
இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு, யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன்.
7 Escucha, Yahvé, cuando clamo con mi voz. Ten también piedad de mí y respóndeme.
யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும்.
8 Cuando dijiste: “Busca mi rostro” mi corazón te dijo: “Buscaré tu rostro, Yahvé”.
என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது.
9 No me ocultes tu rostro. No apartes a tu siervo con rabia. Has sido mi ayuda. No me abandones, ni me abandones, Dios de mi salvación.
உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்; நீரே எனக்கு உதவி செய்பவர்; என்னுடைய இரட்சிப்பின் தேவனே, என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும்.
10 Cuando mi padre y mi madre me abandonan, entonces Yahvé me llevará arriba.
௧0என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
11 Enséñame tu camino, Yahvé. Guíame por un camino recto, a causa de mis enemigos.
௧௧யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும்.
12 No me entregues al deseo de mis adversarios, porque se han levantado falsos testigos contra mí, como exhalar crueldad.
௧௨என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள்.
13 Sigo confiando en ello: Veré la bondad de Yahvé en la tierra de los vivos.
௧௩நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன்.
14 Espera a Yahvé. Sé fuerte, y deja que tu corazón tenga valor. Sí, espera a Yahvé.
௧௪யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.

< Salmos 27 >