< Jeremías 49 >
1 De los hijos de Amón. Yahvé dice: “¿No tiene Israel hijos? ¿No tiene heredero? ¿Por qué entonces Malcam posee a Gad, y su pueblo habita en sus ciudades?
௧அம்மோன் மக்களைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்குச் சந்ததி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதின் மக்கள் இவன் பட்டணங்களில் ஏன் குடியிருக்கவேண்டும்?
2 Por lo tanto, he aquí que los días vienen,” dice Yahvé, “que haré que se oiga una alarma de guerra contra Rabá de los hijos de Amón, y se convertirá en un montón desolado, y sus hijas serán quemadas con fuego; entonces Israel poseerá a los que lo poseyeron”. dice Yahvé.
௨ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் மக்களின் பட்டணமாகிய ரப்பாவில் போரின் ஆர்ப்பரிப்பைக் கேட்கச்செய்வேன்; அது பாழான மண்மேடாகும்; அதை சுற்றியுள்ள ஊர்களும் நெருப்பால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டவர்களின் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் என்று யெகோவா சொல்லுகிறார்.
3 “¡Llora, Hesbón, porque Hai ha sido arrasada! ¡Llorad, hijas de Rabá! Vístete de tela de saco. Lamentar, y correr de un lado a otro entre las vallas; porque Malcam irá al cautiverio, sus sacerdotes y sus príncipes juntos.
௩எஸ்போனே, அலறு; ஆயி அழிக்கப்பட்டது; ரப்பாவின் மகள்களே, ஓலமிடுங்கள்; சணலாடையை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள்; அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களுடனும் அதின் பிரபுக்களுடனும் சிறைப்பட்டுப்போவான்.
4 ¿Por qué te jactas en los valles, tu valle fluyente, hija reincidente? Confiaste en sus tesoros, diciendo: “¿Quién vendrá a mí?
௪எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின ஒழுக்கம் கெட்ட மகளே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமைபாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்குக் கரைந்து போகிறது.
5 He aquí que traeré un terror sobre ti”. dice el Señor, Yahvé de los Ejércitos, “de todos los que te rodean. Todos ustedes serán expulsados por completo, y no habrá nadie que reúna a los fugitivos.
௫இதோ, உன் சுற்றியுள்ள அனைவராலும் உன்மேல் பயத்தை வரச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியிலே துரத்தப்படுவீர்கள்; ஓடுகிறவர்களை திரும்பச் சேர்ப்பார் ஒருவருமில்லை.
6 “Pero después revertiré el cautiverio de los hijos de Amón”. dice Yahvé.
௬அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
7 De Edom, dice el Señor de los Ejércitos: “¿Ya no hay sabiduría en Teman? ¿Ha perecido el consejo de los prudentes? ¿Ha desaparecido su sabiduría?
௭ஏதோமைக்குறித்துச் சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தேமானில் இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ?
8 ¡Huye! ¡Vuelve! Morad en las profundidades, habitantes de Dedán; porque traeré sobre él la calamidad de Esaú cuando lo visite.
௮தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்கும் காலத்தில் அவன் ஆபத்தை அவன்மேல் வரச்செய்வேன்.
9 Si los recolectores de uva vinieran a ti, ¿no dejarían algunas uvas espigadas? Si los ladrones vinieran de noche, ¿no robarían hasta tener suficiente?
௯திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தார்கள் என்றால், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வைக்கமாட்டார்களோ? இரவில் திருடர் வந்தார்கள் என்றால், தங்களுக்குப் போதுமென்கிறவரை கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?
10 Pero yo he desnudado a Esaú, He descubierto sus lugares secretos, y no podrá esconderse. Su descendencia es destruida, con sus hermanos y sus vecinos; y ya no existe.
௧0நானோ ஏசாவை வெறுமையாக்கி, அவன் ஒளித்துக்கொள்ளமுடியாமல் அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திவிடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இருக்கமாட்டான்.
11 Deja a tus hijos sin padre. Los conservaré vivos. Que sus viudas confíen en mí”.
௧௧திக்கற்றவர்களாகப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிருடன் காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.
12 Porque Yahvé dice: “He aquí que aquellos a quienes no correspondía beber del cáliz, ciertamente beberán; ¿y tú eres el que en conjunto quedará impune? No quedarás impune, sino que ciertamente beberás.
௧௨யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகாதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் கண்டிப்பாகக் குடிப்பாய்.
13 Porque he jurado por mí mismo — dice el Señor — que Bosra se convertirá en un asombro, en un oprobio, en una ruina y en una maldición. Todas sus ciudades serán desechos perpetuos”.
௧௩போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்திரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு வாக்குக்கொடுத்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
14 He oído noticias de Yahvé, y se envía un embajador entre las naciones, diciendo: “¡Reúnanse! ¡Vengan contra ella! Levántate a la batalla”.
௧௪நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து, போர் செய்கிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, தேசங்களிடத்தில் பிரதிநிதியை அனுப்புகிற செய்தியைக் யெகோவாவிடத்தில் கேள்விப்பட்டேன்.
15 “Porque he aquí que te he hecho pequeño entre las naciones, y despreciado entre los hombres.
௧௫இதோ, உன்னை மக்களுக்குள்ளே சிறியதும், மனிதருக்குள்ளே அசட்டை செய்யப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார்.
16 En cuanto a tu terror, el orgullo de tu corazón te ha engañado, Oh, tú que habitas en las hendiduras de la roca, que mantienen la altura de la colina, aunque deberías hacer tu nido tan alto como el del águila, Te haré bajar de allí”, dice Yahvé.
௧௬கன்மலை வெடிப்புகளில் குடியிருந்து, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கியது; நீ கழுகைப்போல உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
17 “Edom se convertirá en un asombro. Todos los que pasen por allí se quedarán asombrados, y silbará todas sus plagas.
௧௭அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளைப்பார்த்து அதிர்ந்து சத்தம் போடுவான்.
18 Como en el derrocamiento de Sodoma y Gomorra y sus ciudades vecinas”, dice Yahvé, “ningún hombre habitará allí, ni ningún hijo de hombre vivirá en ella.
௧௮சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்; அங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை, அதில் ஒரு மனுமக்களும் தங்குவதில்லை.
19 “He aquí que subirá como un león desde la soberbia del Jordán contra la fuerte morada; porque de repente haré que huyan de ella, y quien sea elegido, Lo nombraré por encima. Porque ¿quién es como yo? ¿Quién me designará una hora? ¿Quién es el pastor que estará delante de mí?”
௧௯இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவதுபோல் பலவானுடைய தாபரத்திற்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியில் அங்கேயிருந்து ஓடிவரச்செய்வேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமமானவன் யார்? எனக்கு எதிராக நிற்கிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
20 Escucha, pues, el consejo de Yahvé, que ha tomado contra Edom, y sus propósitos que se ha propuesto contra los habitantes de Temán: Seguramente los arrastrarán, los pequeños del rebaño. Seguramente hará que su morada quede desolada sobre ellos.
௨0ஆகையால் யெகோவா ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்து இழுப்பார்கள், அவர்கள் இருக்கிற இருப்பிடங்களை அவர் மெய்யாகவே அழிப்பார்
21 La tierra tiembla con el ruido de su caída; hay un grito, el ruido que se oye en el Mar Rojo.
௨௧அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினால் பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரம்வரை கேட்கப்படும்.
22 He aquí que subirá y volará como el águila, y extendió sus alas contra Bozra. El corazón de los hombres poderosos de Edom en ese día será como el corazón de una mujer en sus dolores.
௨௨இதோ, ஒருவன் கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் இறக்கைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளில் ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற பெண்ணின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.
23 de Damasco: “Hamat y Arpad están confundidos, porque han escuchado malas noticias. Se han derretido. Hay dolor en el mar. No puede estar tranquilo.
௨௩தமஸ்குவைக்குறித்துச் சொல்வது: ஆமாத்தும் அர்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டதினால் கரைந்துபோகிறார்கள்; கடலோரங்களில் வருத்தமுண்டு; அதற்கு அமைதலில்லை.
24 Damasco se ha debilitado, se gira para huir, y el temblor se ha apoderado de ella. La angustia y las penas se han apoderado de ella, como la de una mujer con dolores de parto.
௨௪தமஸ்கு சோர்ந்துபோகும், பின்வாங்கி ஓடிப்போகும்; பயம் அதைப் பிடித்தது; பிரசவ பெண்ணைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.
25 Cómo no está abandonada la ciudad de la alabanza, ¿la ciudad de mi alegría?
௨௫சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் காப்பாற்றப்படாமல் போனதே!
26 Por eso sus jóvenes caerán en sus calles, y todos los hombres de guerra serán silenciados en ese día”. dice el Señor de los Ejércitos.
௨௬ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, போர் வீரர்கள் எல்லோரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
27 “Encenderé un fuego en el muro de Damasco, y devorará los palacios de Ben Hadad”.
௨௭தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரண்மனைகளை எரிக்கும் என்கிறார்.
28 De Cedar y de los reinos de Hazor, que Nabucodonosor, rey de Babilonia, hirió, dice Yahvé: “Levántate, sube a Kedar, y destruir a los hijos del este.
௨௮பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் ஆத்சோருடைய இராஜ்ஜியங்களையும் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசை மக்களை அழியுங்கள்.
29 Tomarán sus tiendas y sus rebaños. se llevarán para sí sus cortinas, todos sus barcos y sus camellos; y les gritarán: “¡Terror por todos lados!
௨௯அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எங்கும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.
30 ¡Huye! ¡Vaya por donde vaya! Morad en las profundidades, habitantes de Hazor”, dice Yahvé; “porque Nabucodonosor, rey de Babilonia, ha tomado consejo contra ti, y ha concebido un propósito contra ti.
௩0ஆத்சோரின் குடிகளே, ஓடி, தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களை அழிக்கத் திட்டமிட்டிருக்கிறான்.
31 ¡Levántate! Sube a una nación que esté tranquila, que habita sin cuidado”, dice Yahvé; “que no tiene ni puertas ni barrotes, que mora solo.
௩௧பயமில்லாமல் அலட்சியமாகக் குடியிருக்கிற தேசங்களுக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
32 Sus camellos serán un botín, y la multitud de su ganado un botín. Esparciré a todos los vientos a los que se les corten las comisuras de la barba; y traeré su calamidad por todos lados”. dice Yahvé.
௩௨அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடுமாடுகளின் ஏராளம் சூறையாகும்; நான் அவர்களை எல்லாத் திசைகளின் கடைசி மூலைகளில் இருக்கிறவர்களிடத்திற்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
33 Hazor será una morada de chacales, una desolación para siempre. Ningún hombre habitará allí, ni ningún hijo de hombre vivirá en ella”.
௩௩ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனிதனும் அதில் தங்குவதுமில்லையென்கிறார்.
34 Palabra de Yahvé que vino al profeta Jeremías sobre Elam, al principio del reinado de Sedequías, rey de Judá, diciendo:
௩௪யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ஆட்சியின் துவக்கத்தில், ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:
35 “Dice Yahvé de los Ejércitos: ‘He aquí que voy a romper el arco de Elam, el jefe de su poderío.
௩௫சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய முதன்மையான வல்லமையை முறித்துப்போட்டு,
36 Traeré sobre Elam los cuatro vientos de las cuatro partes del cielo, y los dispersará hacia todos esos vientos. No habrá nación a la que no lleguen los desterrados de Elam.
௩௬வானத்தின் நான்கு திசைகளிலுமிருந்து நான்கு காற்றுகளை ஏலாமின்மேல் வரச்செய்து, அவர்களை இந்த எல்லாத்திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் எல்லா தேசங்களிலும் சிதறப்படுவார்கள்.
37 Haré que Elam quede consternado ante sus enemigos, y ante los que buscan su vida. Traeré el mal sobre ellos, hasta mi feroz ira’, dice Yahvé; y enviaré la espada tras ellos, hasta que los haya consumido.
௩௭நான் ஏலாமியரை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகவும், அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கச்செய்து, என் கோபத்தின் கடுமையாகிய தீங்கை அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அழிக்கும்வரை பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
38 Yo pondré mi trono en Elam, y destruiré desde allí al rey y a los príncipes’, dice Yahvé.
௩௮என் சிங்காசனத்தை ஏலாமில் வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
39 ‘Pero sucederá en los últimos días que revertiré el cautiverio de Elam’, dice Yahvé”.
௩௯ஆனாலும் கடைசி நாட்களில் நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.