< Isaías 28 >
1 ¡Ay de la corona de orgullo de los borrachos de Efraín, y de la flor marchita de su gloriosa belleza, que está en la cabeza del fértil valle de los que se dejan vencer por el vino!
௧எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் பூவே!
2 He aquí que el Señor tiene uno que es poderoso y fuerte. Como una tormenta de granizo, una tormenta destructora, y como una tormenta de aguas poderosas que se desbordan, los arrojará a la tierra con su mano.
௨இதோ, திறமையும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புயல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
3 La corona de orgullo de los borrachos de Efraín será pisoteada.
௩எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும்.
4 La flor marchita de su gloriosa belleza, que está en la cabeza del valle fértil, será como el higo de primera maduración antes del verano, que alguien recoge y come en cuanto lo ve.
௪செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய பூ, பருவகாலத்திற்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
5 En ese día, el Señor de los Ejércitos se convertirá en una corona de gloria y en una diadema de belleza para el resto de su pueblo,
௫அக்காலத்திலே சேனைகளின் யெகோவா தமது மக்களில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,
6 y en un espíritu de justicia para el que se sienta a juzgar, y en fuerza para los que hacen retroceder la batalla en la puerta.
௬நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், போரை அதின் வாசல்வரை திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.
7 También se tambalean con el vino, y se tambalean con la bebida fuerte. El sacerdote y el profeta se tambalean con la bebida fuerte. El vino se los tragó. Se tambalean con la bebida fuerte. Se equivocan en la visión. Tropiezan en el juicio.
௭ஆனாலும் இவர்களும் திராட்சைரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிவிலகிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சைரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிவிலகி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்.
8 Porque todas las mesas están completamente llenas de vómito e inmundicia.
௮உணவு உண்ணும் இடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
9 ¿A quién le enseñará el conocimiento? ¿A quiénes les explicará el mensaje? ¿A los que han sido destetados de la leche y sacados de los pechos?
௯அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கச்செய்யப்பட்டவர்களுக்குமே.
10 Porque es precepto sobre precepto, precepto sobre precepto; línea sobre línea, línea sobre línea; aquí un poco, allí un poco.
௧0கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
11 Pero hablará a esta nación de labios tartamudos y en otra lengua,
௧௧பரியாச உதடுகளினாலும் அந்நிய மொழியினாலும் இந்த மக்களுடன் பேசுவார்.
12 a la que dijo: “Este es el lugar de descanso. Da descanso al cansado” y “Este es el refrigerio”; pero no quisieron escuchar.
௧௨இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறச்செய்யும் இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களிடம் அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
13 Por lo tanto, la palabra de Yahvé será para ellos precepto sobre precepto, precepto sobre precepto; línea sobre línea, línea sobre línea; aquí un poco, allí un poco; para que vayan, caigan de espaldas, sean quebrantados, atrapados y tomados.
௧௩ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், யெகோவாவுடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
14 Escuchen, pues, la palabra de Yahvé, burlones, que gobiernan a este pueblo en Jerusalén:
௧௪ஆகையால் எருசலேமிலுள்ள இந்தமக்களை ஆளுகிற நிந்தனைக்காரரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
15 “Porque ustedes han dicho: ‘Hemos hecho un pacto con la muerte, y estamos de acuerdo con el Seol. Cuando pase el azote desbordante, no vendrá a nosotros; porque hemos hecho de la mentira nuestro refugio, y nos hemos escondido bajo la mentira.’” (Sheol )
௧௫நீங்கள்: மரணத்தோடு உடன்படிக்கையையும், பாதாளத்தோடு ஒப்பந்தமும் செய்தோம்; வாதை பெருவெள்ளமாகப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. (Sheol )
16 Por eso dice el Señor Yahvé: “He aquí que pongo en Sión como fundamento una piedra, una piedra probada, una piedra angular preciosa de fundamento seguro. El que crea no actuará precipitadamente.
௧௬ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது சோதனை செய்யப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறமாட்டான்.
17 Haré que la justicia sea la línea de medida, y la rectitud la línea de plomada. El granizo barrerá el refugio de la mentira, y las aguas desbordarán el escondite.
௧௭நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை பெருவெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்.
18 Tu pacto con la muerte será anulado, y tu acuerdo con el Seol no se mantendrá. Cuando pase el azote desbordante, entonces serás pisoteado por él. (Sheol )
௧௮நீங்கள் மரணத்துடன் செய்த உடன்படிக்கை வீணாகி, நீங்கள் பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின் கீழ் மிதிக்கப்படுவீர்கள். (Sheol )
19 Todas las veces que pase, te apresará; porque de mañana a mañana pasará, de día y de noche; y no será más que terror entender el mensaje”.
௧௯அது புரண்டுவந்த உடனே உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது அனுதினமும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிச் சொல்லப்படும் செய்தியைக் கேட்கும்போதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
20 Porque el lecho es demasiado corto para extenderse, y la manta es demasiado estrecha para envolverse en ella.
௨0கால் நீட்டப் படுக்கையின் நீளம்போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.
21 Porque Yahvé se levantará como en el monte Perazim. Se enfurecerá como en el valle de Gabaón; para hacer su obra, su insólita obra, y llevar a cabo su acto, su extraordinario acto.
௨௧யெகோவா தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
22 Ahora, pues, no sean burlones, para que no se fortalezcan sus ataduras; porque he oído un decreto de destrucción de parte del Señor, Yahvé de los Ejércitos, sobre toda la tierra.
௨௨இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம் செய்யாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் தீர்மானிக்கப்பட்ட அழிவின் செய்தியைச் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
23 ¡Escuchen y oigan mi voz! ¡Escuchen, y oigan mi discurso!
௨௩செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
24 ¿Acaso el que ara para sembrar lo hace continuamente? ¿Acaso no revuelve la tierra y rompe los terrones?
௨௪உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?
25 Cuando ha nivelado su superficie, ¿no planta el eneldo y esparce la semilla de comino, y coloca el trigo en hileras, la cebada en el lugar señalado y la escanda en su sitio?
௨௫அவன் அதை மேலாக பரப்பினபின்பு, அதற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?
26 Porque su Dios le instruye en el recto juicio y le enseña.
௨௬அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துவிக்கிறார்.
27 Porque el eneldo no se trilla con instrumento afilado, ni se hace girar una rueda de carro sobre el comino; sino que el eneldo se golpea con un palo, y el comino con una vara.
௨௭உளுந்து இரும்புக்கோலாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டியின் உருளை சுற்றவிடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.
28 La harina de pan debe ser molida, por lo que no siempre estará trillando. Aunque pase la rueda de su carro de trillar sobre ella, sus caballos no la muelen.
௨௮அப்பத்திற்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டியின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.
29 Esto también sale de Yahvé de los Ejércitos, que es maravilloso en el consejo, y excelente en la sabiduría.
௨௯இதுவும் சேனைகளின் யெகோவாவாலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.