< Salmos 75 >

1 Para el director del coro. Un Salmo de Asaf. Según la canción “No destruyas”. Una canción. Te agradecemos, oh Dios, porque estás junto a nosotros. Toda la gente habla sobre tus maravillas.
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது.
2 Dios dice: “Cuando decida el momento, juzgaré con justicia.
நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன்.
3 Cuando la tierra tiemble, así como sus habitantes, yo la mantendré firme. (Selah)
பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)
4 A los que se jactan dije: ‘¡No se jacten!’ Le dije a los malvados: ‘¡Dejen el orgullo!’
வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன்.
5 No, no sean arrogantes y orgullosos, insultando al cielo”.
உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள்.
6 Porque nadie, ni en el este o en el oeste, o incluso en el desierto debe pensar de sí mismo con justicia.
கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.
7 Dios es el que decide quién se levantará y quién caerá.
தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
8 Porque el Señor tiene una copa en su mano, llena de vino espumoso mezclado con especias. Él vierte el vino, y todos los malvados lo beberán, hasta la última gota.
கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து ஊற்றுகிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
9 Pero yo hablaré de ti para siempre. Cantaré alabanzas al Dios de Jacob.
நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன்.
10 Porque Dios dice: “Quebraré el poder de los malvados, pero aumentaré el poder de los justos”.
௧0துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

< Salmos 75 >