< Jonás 3 >
1 Luego el Señor le habló a Jonás por segunda vez:
௧இரண்டாவதுமுறை யெகோவாவுடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:
2 “Ve de inmediato a la gran ciudad de Nínive, y anúnciales el mensaje que te doy”.
௨நீ எழுந்து பெரிய நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு எதிராகப் பிரசங்கம் செய் என்றார்.
3 Y Jonás hizo lo que Dios le dijo. Y se dirigió a Nínive, una ciudad que era tan grande, que se necesitaban tres días para atravesarla de a pie.
௩யோனா எழுந்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்று நாட்கள் நடை பிரயாண தூரமும் விஸ்தாரமான மகா பெரிய நகரமாக இருந்தது.
4 Jonás entró a la ciudad caminando por un día, y gritaba: “¡En cuarenta días Nínive será destruida!”
௪யோனா நகரத்தில் நுழைந்து, ஒரு நாள் பிரயாணம்செய்து: இன்னும் நாற்பதுநாட்களில் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போகும் என்று கூறினான்.
5 Y el pueblo de Nínive creyó en Dios. Anunciaron ayuno, y todos los habitantes, desde el más grande hasta el más pequeño, se vistieron de silicio.
௫அப்பொழுது நினிவேயிலுள்ள மக்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம் செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் சாக்கு உடையை அணிந்துகொண்டார்கள்.
6 Cuando las noticias llegaron al rey de Nínive, éste se levantó de su trono, se quitó la túnica, se vistió de silicio y se sentó en cenizas.
௬இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன்னுடைய சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் அணிந்திருந்த அங்கியைக் கழற்றிப்போட்டு, சாக்கு உடையை அணிந்துகொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.
7 Entonces el rey y los nobles emitieron un mensaje a todo el pueblo de Nínive: “Ninguna persona, animal, rebaño de ovejas o bueyes comerá ni beberá nada.
௭மேலும் ராஜா, தானும் தன்னுடைய ஆலோசகர்களும் தீர்மானித்த கட்டளையாக, நினிவே எங்கும் மனிதர்களும் மிருகங்களும், மாடுகளும், ஆடுகளும் ஒன்றும் ருசிபார்க்காமலிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருக்கவும்,
8 Cada persona y animal deberá vestir de silicio. Todos deben orar con sinceridad a Dios, renunciar a su maldad, y abandonar la violencia.
௮மனிதர்களும் மிருகங்களும் சணலினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி அதிக சத்தமாகக் கூப்பிடவும், அவரவர்கள் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும்விட்டுத் திரும்பவும்வேண்டும்.
9 ¿Quién sabrá si Dios cambia de parecer y se arrepiente? De pronto decida no destruirnos con su ira”.
௯யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனமிரங்கி, தம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று சொல்லச்சொன்னான்.
10 Y Dios vio lo que habían hecho, y que abandonaron sus malos caminos, y cambió de parecer, y no llevó a cabo la destrucción que había anunciado.
௧0அவர்கள் தங்களுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய செயல்களைப்பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனமிரங்கி, அதைச் செய்யாமல் இருந்தார்.