< Psalmi 4 >
1 Načelniku godbe na strune; psalm Davidov. Ko te kličem, usliši me, Bog pravice moje; v stiski dal si mi prostora; milosten mi bodi in poslušaj molitev mojo.
கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். நீதியுள்ள என் இறைவனே, நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும்.
2 Sinovi človeški, doklej bodi slava moja v nečast? ljubili bodete ničnost? hodili za lažjo?
மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்?
3 Spoznajte vendar, da si je Gospod posebe odbral njega, katerega prijazno sprejema; da bode uslišal Gospod, ko ga bodem zaklical.
யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார்.
4 Prestrašite se in ne grešite; mislite v srci svojem, na ležišči svojem in mirujte!
நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள்.
5 Darujte daritve pravice, in zaupanje imejte v Gospoda.
நீதியான பலிகளைச் செலுத்தி, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்.
6 Mnogi govoré: O da bi vživali dobro! Dvigni nad nas svetlobo obličja svojega, Gospod!
“எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும்.
7 Vlij radost v srce moje, večjo nego o času, ko spravljajo žito svoje in vino svoje obilno.
தானியமும் புதுத் திராட்சை இரசமும் நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர்.
8 V miru ležem in zdajci zaspim; ker ti sam, Gospod, daješ, da prebivam brez skrbi.
நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; ஏனெனில் யெகோவாவே, நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.