< Psalmi 138 >

1 Davidova. Slavil te bodem iz vsega srca svojega; v pričo oblastev bodem ti prepeval.
தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; “தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன்.
2 Priklanjal se bodem proti svetišču svetosti tvoje, in slavil ime tvoje, zavoljo milosti tvoje in zavoljo tvoje zvestobe; ker poveličuješ z vsem imenom svojim govor svoj.
நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து, உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும், உமது பெயரைத் துதிப்பேன்; ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாக உமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர்.
3 Kateri dan sem vpil, tisti dan si me uslišal; storil si, da me je povzdignila v srci mojem moč.
நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்; நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர்.
4 Slavili te bodo, Gospod, vsi kralji zemeljski, ko bodo slišali govor tvojih ust.
யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும்.
5 In peli bodo s potov Gospodovih, da je velika slava Gospodova.
யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
6 Dasì je vzvišen Gospod, vendar gleda na nizkega; dasi visok, spoznava iz daljave.
யெகோவா உயர்ந்தவராக இருந்தும், தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்; ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார்.
7 Ako hodim po sredi stiske, ohraniš me živega; v obraz sovražnikov mojih iztegneš roko svojo, in desnica tvoja me ohrani.
துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும், நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர். என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்; உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர்.
8 Gospod naj doprinese zame; Gospod, milost tvoja je vekomaj; od rok svojih dél ne odjenjaj!
யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்; யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது; உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.

< Psalmi 138 >