< Psalmi 61 >
1 Sliši moj klic, oh Bog, prisluhni moji molitvi.
௧நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.
2 Od konca zemlje bom klical k tebi, ko je moje srce preplavljeno. Vôdi me k skali, ki je višja kakor jaz.
௨என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
3 Kajti zame si bil zatočišče in močna trdnjava pred sovražnikom.
௩நீர் எனக்கு அடைக்கலமும், எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.
4 V tvojem šotorskem svetišču bom ostal na veke. Zaupal bom v skrivališče tvojih peruti. (Sela)
௪நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)
5 Kajti ti, oh Bog, si uslišal moje zaobljube; dal si mi dediščino tistih, ki se bojijo tvojega imena.
௫தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
6 Kralju boš podaljšal življenje in njegova leta kakor mnoge rodove.
௬ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
7 Pred Bogom bo on ostal na veke. O pripravi usmiljenje in resnico, ki ga lahko varuje.
௭அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
8 Tako bom na veke prepeval hvalo tvojemu imenu, da bom lahko dnevno opravljal svoje zaobljube.
௮இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.