< Psalmi 126 >

1 Ko je Gospod ponovno obrnil ujetništvo Siona, smo bili podobni tem, ki sanjajo.
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது, நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
2 Tedaj so bila naša usta napolnjena s smehom in naš jezik s petjem. Tedaj so med pogani govorili: » Gospod je zanje storil velike stvari.«
எங்கள் வாய்கள் சிரிப்பினாலும், எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன. அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்” என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது.
3 Gospod je za nas storil velike stvari, česar smo veseli.
யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்; அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம்.
4 Ponovno obrni naše ujetništvo, oh Gospod, kakor vodotoke na jugu.
யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல, எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும்.
5 Tisti, ki sejejo s solzami, bodo želi z veseljem.
கண்ணீருடன் விதைக்கிறவர்கள், மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள்.
6 Kdor hodi naprej in joka in prinaša dragoceno seme, bo brez dvoma ponovno prišel z veseljem, nesoč svoje snope s seboj.
விதைப்பதற்கான விதைகளை அழுதுகொண்டு சுமந்து போகிறவன், மகிழ்ச்சியின் பாடல்களுடன் கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.

< Psalmi 126 >