< Amos 7 >
1 Tako mi je Gospod Bog pokazal in glej, oblikoval je kobilice v začetku poganjanja otave in glej, to je bila otava po kraljevih košnjah.
௧யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
2 Pripetilo se je, ko so končale z objedanjem trave dežele, da sem nato rekel: »Oh Gospod Bog, odpusti, rotim te. Po kom bo Jakob vstal? Kajti majhen je.«
௨அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: யெகோவாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுமையடைந்தான் என்றேன்.
3 Gospod se je zaradi tega pokesal. »To ne bo, « govori Gospod.
௩யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
4 Tako mi je Gospod Bog pokazal in glej, Gospod Bog je klical k pričkanju z ognjem in ta je požrl veliko globino in pojedel del.
௪யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தோன்றினார்; அது மகா ஆழத்தை விழுங்கியது, அதில் ஒரு பங்கை விழுங்கி முடித்தது.
5 Potem sem rekel: »Oh Gospod Bog, odnehaj, rotim te. Po kom bo Jakob vstal? Kajti majhen je.«
௫அப்பொழுது நான்: யெகோவாகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் மிகச் சிறியதானான் என்றேன்.
6 Gospod se je zaradi tega pokesal: »Tudi to se ne bo zgodilo, « govori Gospod Bog.
௬யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
7 Zato mi je pokazal in glej, Gospod je stal na zidu, narejenem s svinčnico, s svinčnico v svoji roki.
௭பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
8 Gospod mi je rekel: »Amos, kaj vidiš?« Rekel sem: »Svinčnico.« Potem je Gospod rekel: »Glej, postavil bom svinčnico v sredo svojega ljudstva Izraela. Ne bom več ponovno šel mimo njega
௮யெகோவா என்னை நோக்கி: ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
9 in Izakovi visoki kraji bodo zapuščeni in Izraelova svetišča bodo opustošena in z mečem se bom dvignil zoper Jerobeámovo hišo.«
௯ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் அழிக்கவும்படும்; நான் யெரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாகப் வாளோடு எழும்பிவருவேன் என்றார்.
10 Potem je Amacjá, duhovnik iz Betela, poslal k Jerobeámu, Izraelovemu kralju, rekoč: »Amos se je zarotil zoper tebe v sredi Izraelove hiše. Dežela ni zmožna prenesti vseh njegovih besed.
௧0அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்கிறான்; தேசம் அவனுடைய வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.
11 Kajti tako govori Amos: ›Jerobeám bo umrl pod mečem in Izrael bo zagotovo iz svoje lastne dežele odveden v ujetništvo.‹«
௧௧யெரொபெயாம் வாளால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.
12 Amacjá je prav tako rekel Amosu: »Oh ti videc, pojdi, pobegni proč v Judovo deželo in tam jej kruh in tam prerokuj,
௧௨அமத்சியா ஆமோஸை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்திற்கு ஓடிப்போ, அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
13 toda ne prerokuj ponovno pri Betelu, kajti to je kraljeva kapela in to je kraljevi dvor.«
௧௩பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக இருக்கிறது என்றான்.
14 Potem je Amos odgovoril in rekel Amacjáju: »Jaz nisem bil nikakršen prerok niti nisem bil prerokov sin, temveč sem bil črednik in obiralec sadu egiptovske smokve
௧௪ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக இருந்தேன்.
15 in Gospod me je vzel, medtem ko sem sledil tropu in Gospod mi je rekel: ›Pojdi, prerokuj mojemu ljudstvu Izraelu.
௧௫ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் யெகோவா அழைத்து, நீ போய் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று யெகோவா சொன்னார்.
16 Zdaj torej poslušaj Gospodovo besedo: ›Praviš: ›Ne prerokuj zoper Izrael in ne kapljaj svoje besede zoper Izakovo hišo.‹
௧௬இப்போதும், நீ யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தினருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
17 Zato tako govori Gospod: ›Tvoja žena bo pocestnica v mestu in tvoji sinovi in tvoje hčere bodo padli pod mečem in tvoja dežela bo razdeljena z vrvico, ti pa boš umrl v oskrunjeni deželi, in Izrael bo zagotovo odšel v ujetništvo, iz svoje dežele.‹«
௧௭இதனால் உன்னுடைய மனைவி நகரத்தில் விபசாரியாவாள்; உன்னுடைய மகன்களும் உன்னுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்; உன்னுடைய வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவென்றால் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.