< Псалтирь 80 >
1 В конец, о изменшихся, свидение Асафу, псалом. Пасый Израиля вонми: наставляяй яко овча Иосифа, седяй на Херувимех, явися:
௧எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் பாடல். இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும்.
2 пред Ефремом и Вениамином и Манассием воздвигни силу Твою, и прииди во еже спасти нас.
௨எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களைக் காப்பாற்ற வந்தருளும்.
3 Боже, обрати ны, и просвети лице Твое, и спасемся.
௩தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
4 Господи Боже сил, доколе гневаешися на молитву раб Твоих?
௪சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
5 Напитаеши нас хлебом слезным, и напоиши нас слезами в меру.
௫கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
6 Положил еси нас в пререкание соседом нашым, и врази наши подражниша ны.
௬எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள்.
7 Господи Боже сил, обрати ны, и просвети лице Твое, и спасемся.
௭சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
8 Виноград из Египта пренесл еси: изгнал еси языки, и насадил еси и:
௮நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து, தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
9 путесотворил еси пред ним, и насадил еси корения его, и исполни землю.
௯அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
10 Покры горы сень его, и ветвия его кедры Божия:
௧0அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது.
11 простре розги его до моря, и даже до рек отрасли его.
௧௧அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும், தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது.
12 Вскую низложил еси оплот его, и оымают и вси мимоходящии путем?
௧௨இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
13 Озоба и вепрь от дубравы, и уединенный дивий пояде и.
௧௩காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
14 Боже сил, обратися убо, и призри с небесе и виждь, и посети виноград сей:
௧௪சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்;
15 и соверши и, егоже насади десница Твоя, и на сына человеческаго, егоже укрепил еси Себе.
௧௫உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும்.
16 Пожжен огнем и раскопан: от запрещения лица Твоего погибнут.
௧௬அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.
17 Да будет рука Твоя на мужа десницы Твоея и на сына человеческаго, егоже укрепил еси Себе,
௧௭உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக.
18 и не отступим от Тебе: оживиши ны, и имя Твое призовем.
௧௮அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம்.
19 Господи Боже сил, обрати ны, и просвети лице Твое, и спасемся.
௧௯சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.