< Псалтирь 126 >

1 Внегда возвратити Господу плен Сионь, быхом яко утешени.
ஆரோகண பாடல். சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
2 Тогда исполнишася радости уста наша, и язык наш веселия: тогда рекут во языцех: возвеличил есть Господь сотворити с ними.
அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
3 Возвеличил есть Господь сотворити с нами: быхом веселящеся.
யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
4 Возврати, Господи, пленение наше, яко потоки югом.
யெகோவாவே, தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
5 Сеющии слезами, радостию пожнут.
கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
6 Ходящии хождаху и плакахуся, метающе семена своя: грядуще же приидут радостию, вземлюще рукояти своя.
அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.

< Псалтирь 126 >