< Псалтирь 121 >
1 Возведох очи мои в горы, отнюдуже приидет помощь моя.
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன். எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
2 Помощь моя от Господа, сотворшаго небо и землю.
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே, எனக்கு உதவி வரும்.
3 Не даждь во смятение ноги твоея, ниже воздремлет храняй тя:
அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்; உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
4 се, не воздремлет, ниже уснет храняй Израиля.
இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர், உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5 Господь сохранит тя, Господь покров твой на руку десную твою.
யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
6 Во дни солнце не ожжет тебе, ниже луна нощию.
பகலில் சூரியனோ, இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
7 Господь сохранит тя от всякаго зла, сохранит душу твою Господь:
யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்; அவர் உன் வாழ்வைக் காப்பார்.
8 Господь сохранит вхождение твое и исхождение твое, отныне и до века.
யெகோவா உன் போக்கையும் வரத்தையும் இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.