< Числа 13 >

1 И рече Господь к Моисею, глаголя:
யெகோவா மோசேயை நோக்கி:
2 посли от себе мужы, и да соглядают землю Ханаанску, юже Аз даю сыном Израилевым во одержание: мужа единаго от племене, по сонмом отечеств их, да послеши их всякаго старейшину от них.
“நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதர்களை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய மனிதனை அனுப்பவேண்டும் என்றார்.
3 И посла я Моисей от пустыни Фарани глаголголом Господним: вси мужи старейшины сынов Израилевых сии, и сия имена их:
மோசே யெகோவாவுடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள்.
4 от племене Рувимля Самуил сын Закхуров:
அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா.
5 от племене Симеоня Сафат сын Сурин:
சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத்.
6 от племене Иудина Халев сын Иефонниин:
யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப்.
7 от племене Иссахаря Игал сын Иосифль:
இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால்.
8 от племене Ефремля Авсис сын Навин:
எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா.
9 от племене Вениаминя Фалтий сын Рафуов:
பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி.
10 от племене Завулоня Гудиил сын Судин:
௧0செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல்.
11 от племене Иосифля сынов Манассииных Гадди сын Сусин:
௧௧யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி.
12 от племене Данова Амиил сын Гамалин:
௧௨தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல்.
13 от племене Асирова Сафур сын Михаиль:
௧௩ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர்.
14 от племене Неффалимля Навий сын Савинь:
௧௪நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி.
15 от племене Гадова Гудиил сын Махииль.
௧௫காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல்.
16 Сия имена мужей, ихже посла Моисей соглядати землю: и прозва Моисей Авсиа сына Навина Иисус.
௧௬தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
17 И посла я Моисей от пустыни Фарани соглядати земли Ханаанския, и рече к ним: взыдите пустынею сею, и взыдете на гору.
௧௭அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
18 И узрите землю, какова есть, и люди седящыя на ней, аще сильни суть, или немощни, мало ли их есть, или много?
௧௮தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,
19 И какова земля, на нейже сии седят, добра ли есть, или зла? И какови гради, в нихже живут сии, ограждени ли суть, или не ограждени?
௧௯அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,
20 И какова земля, изюбилна ли, или не изюбилна? Суть ли на ней древеса, или ни? И укрепившеся, возмите от плодов земли. Дние же бяху весенни, предваряющии ягоды.
௨0நிலம் எப்படிப்பட்டது அது வளமானதோ வளமில்லாததோ என்றும்; அதில் மரங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியம்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சைச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாக இருந்தது.
21 И шедше соглядаша землю от пустыни Син даже да Роова, до входов Емаф.
௨௧அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
22 И идоша по пустыни, и приидоша до Хеврона: и тамо (живяше) Ахиман и Сессий и Феламин, роды Енаковы: и Хеврон создася седмию леты прежде Танина (града) Египетскаго.
௨௨தெற்கேயும் சென்று, எபிரோன்வரை போனார்கள்; அங்கே ஏனாக்கின் மகன்களாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருடங்களுக்குமுன்னே கட்டப்பட்டது.
23 И приидоша до дебри Гроздныя, и соглядаша ю: и урезаша оттуду ветвь, и грозд винограда един на ней, и воздвигоша ю на жердь, и от шипков, и от смоквей.
௨௩பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதுளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
24 И место оно назваша дебрь Гроздная, грозда ради, егоже урезаша оттуду сынове Израилтестии.
௨௪இஸ்ரவேல் மக்கள் அங்கே அறுத்த திராட்சைக்குலையினால், அந்த இடம் எஸ்கோல்பள்ளத்தாக்கு எனப்பட்டது.
25 И возвратишася оттуду, соглядавше землю по четыредесяти днех.
௨௫அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள்.
26 И ходивше приидоша к Моисею и Аарону и ко всему сонму сынов Израилевых в пустыню Фараню в Кадис: и поведаша им слово и всему сонму, и показаша им плод земный.,
௨௬அவர்கள் பாரான் வனாந்திரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் செய்தியை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
27 и поведаша ему, и рекоша: ходихом на землю, на нюже посылал еси нас, на землю кипящую млеком и медом, и сий плод ея:
௨௭அவர்கள் மோசேயை நோக்கி: “நீர் எங்களை அனுப்பின தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.
28 кроме яко людие сильни зело, иже на ней живут, и гради утверждени ограждением велицы зело, и род Енаков видехом тамо:
௨௮ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற மக்கள் பலவான்கள்; பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாக இருக்கிறது; அங்கே ஏனாக்கின் மகன்களையும் கண்டோம்.
29 и Амалик живет в земли к югу: и Хеттей и Евей, и Иевусей и Аморрей живут в горах: и Хананей живет при мори и при Иордане реце.
௨௯அமலேக்கியர்கள் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியர்களும், எபூசியர்களும், எமோரியர்களும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர்கள் மத்திய தரைக் கடல் அருகிலும் யோர்தானுக்கு அருகில் குடியிருக்கிறார்கள்” என்றார்கள்.
30 И утиши Халев люди пред Моисеом, и рече ему: никакоже, на восходя взыдем и приимем ю в наследие, яко сильни есмы преодолети им.
௩0அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம்” என்றான்.
31 И человецы ходившии с ним рекоша: не идем, яко не можем изыти противу языку (сему), яко крепльший есть паче нас.
௩௧அவனோடுகூடப் போய்வந்த மனிதர்களோ: “நாம் போய் அந்த மக்களோடு எதிர்க்க நம்மாலே முடியாது; அவர்கள் நம்மைவிட பலவான்கள் என்றார்கள்.
32 И изнесоша ужас земли, юже соглядаша, к сыном Израилевым, глаголюще: землю юже проидохом соглядающе, земля есть поядающи живущыя на ней, и вси люди, ихже видехом на ней, мужи превысоцыи:
௩௨“நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன்னுடைய குடிகளை தாங்களே உண்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட மக்கள் எல்லோரும் மிகவும் பெரிய ஆட்கள்.
33 и тамо видехом исполины, сыны Енаковы, и бехом пред ними яко прузи, и тако бехом пред ними.
௩௩அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் மகன்களாகிய இராட்சதர்களையும் கண்டோம்; நாங்கள் எங்களுடைய பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்களுடைய பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் மக்களுக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

< Числа 13 >