< Левит 14 >
1 И рече Господь к Моисею, глаголя:
௧பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
2 сей закон прокаженному, в оньже день аще очистится, и приведется к жерцу:
௨“தொழுநோயாளியினுடைய சுத்திகரிப்பின் நாட்களில் அவனுக்குரிய விதிமுறைகள் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும்.
3 и да изыдет жрец вне полка, и узрит жрец, и се, исцеле язва прокажения от прокаженнаго:
௩ஆசாரியன் முகாமிற்கு வெளியே போய்; அவனுடைய தொழுநோய் சுகமாகிவிட்டது என்று கண்டால்,
4 и повелит жрец, да возмутся очищенному два птичища жива чиста и древо кедрово, и соскана червленица и иссоп:
௪சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடுவானாக.
5 и повелит жрец, да заколют птичище едино в сосуд глинян, над водою живою,
௫பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லச்சொல்லி,
6 и живое птичище да возмет, и древо кедрово и соскану червленицу и иссоп, и да омочит их и птичище живое в крови закланаго птичища над водою живою:
௬உயிருள்ள குருவியையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே நனைத்து,
7 и да воскропит на очистившагося от прокажения седмижды, и чист будет: и да отпустит птичище живое на поле:
௭தொழுநோய் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல் ஏழுமுறை தெளித்து, அவனைச் சுத்தம்செய்து, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடுவானாக.
8 и да исперет очистивыйся ризы своя и да острижет вся власы своя и да измыется водою, и чист будет: и по сих да внидет в полк и да пребудет вне дому своего седмь дний.
௮சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தன் முடி முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாவதற்காக தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்கு வந்து, தன் கூடாரத்திற்கு வெளியே ஏழுநாட்கள் தங்கி,
9 И будет в день седмый, обриются вси власы его, глава его и брада и брови, и всяк влас его да обриется: и да измыет ризы своя, и да омыется тело его водою, и чист будет.
௯ஏழாம் நாளிலே தன் தலையையும், தாடியையும், புருவங்களையும் தன்னுடைய முடிமுழுவதையும் சிரைத்து, தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.
10 И в день осмый да возмет два агнца единолетна непорочна и овцу едину единолетну непорочну, и три десятины муки пшеничны на жертву смешаныя с елеем и меру елеа едину:
௧0“எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒருவயதுடைய பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், உணவுபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஒரு ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன்.
11 и да поставит жрец очищаяй человека очищаемаго и сия пред Господем, у дверий скинии свидения:
௧௧சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அப்பொருட்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன்.
12 и возмет жрец агнца единаго и приведет его преступления ради, и чашу елеа, и отлучит я жрец во отлучение пред Господем:
௧௨பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
13 и заколют агнца на месте идеже закалают всесожжения и яже греха ради, на месте святе: есть бо еже греха ради, якоже и преступления ради есть жерцу: святая святых суть:
௧௩பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
14 и возмет жрец от крове яже преступления ради, и возложит жрец на обушие уха очищаемаго деснаго, и на край руки его десныя, и на край ноги его десныя:
௧௪அந்த குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசுவானாக.
15 и взем жрец от чаши елеа, возлиет на руку левую свою:
௧௫பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
16 и да омочит жрец перст свой десный в елей, иже есть в руце его левей, и да воскропит от елеа перстом седмижды пред Господем:
௧௬தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலை நனைத்து, தன் விரலினால் ஏழுமுறை அந்த எண்ணெயில் எடுத்து, யெகோவாவுடைய சந்நிதியில் தெளித்து,
17 оставшийся же елей, иже в руце его, да возложит жрец на обушие уха очищаемаго деснаго, и на край руки его десныя, и на край ноги его десныя, на место крове яже преступления ради:
௧௭தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், ஏற்கனவே பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி,
18 оставшийся же елей, иже в руце жерца, да возложит жрец на главу очищенному: и помолится о нем жрец пред Господем:
௧௮தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய தலையிலே ஊற்றி யெகோவாவுடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
19 и сотворит жрец еже греха ради, и помолится жрец от очищающемся от греха своего: и по сем заколет жрец всесожжение:
௧௯ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்கதகனபலியைக் கொன்று,
20 и вознесет жрец всесожжение и жертву на олтарь пред Господем, и помолится о нем жрец, и очистится.
௨0சர்வாங்கதகனபலியையும் உணவுபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாக இருப்பான்.
21 Аще же убог есть, и рука его не достигнет, да возмет агнца единолетнаго единаго, в оньже преступил на отлучение, яко помолитися о нем, и десятину муки пшеничны смешаны с елеем в жертву, и чашу елеа едину,
௨௧“அவன் இவ்விதம் செய்யமுடியாத ஏழையாக இருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், உணவுபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும்,
22 и два горличища, или два птенца голубина, елика обрете рука его, и да будет един греха ради, и другий во всесожжение:
௨௨தன் தகுதிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி,
23 и да принесет я в день осмый, во еже очистити его, к жерцу, пред двери скинии свидения пред Господа:
௨௩தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவருவானாக.
24 и взем жрец агнца иже преступления ради, и чашу елеа, возложит я возложение пред Господем,
௨௪அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் உணவுபலியாக அசைவாட்டி,
25 и заколет агнца иже преступления ради, и возмет жрец от крове яже преступления ради, и возложит на обушие уха очищаемаго деснаго, и на край руки его десныя, и на край ноги его десныя:
௨௫குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,
26 и от елеа возлиет жрец на руку свою левую,
௨௬அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் ஊற்றி
27 и воскропит жрец перстом своим десным от елеа, иже в руце его левей, седмижды пред Господем:
௨௭தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலை நனைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளித்து,
28 и возложит жрец от елеа сущаго в руце его на обушие уха очищаемаго деснаго, и на краи руки его десныя, и на край ноги его десныя, на месте крове яже преступления ради:
௨௮தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,
29 оставшееся же от елеа, еже есть в руце жерца, да возложит на главу очистившемуся: и помолится о нем жрец пред Господем,
௨௯தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
30 и сотворит едину от горлиц, или от птенцев голубиных, якоже обрете рука его,
௩0பின்பு, அவன் தன் பெலத்திற்கும் தகுதிக்கும் தக்கதாக காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
31 едину греха ради, и другую во всесожжение с жертвою: и помолится жрец о очищаемем пред Господем.
௩௧அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, உணவுபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
32 Сей закон в немже есть язва прокажения, и не обретающему рукою во очищение свое.
௩௨தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கமுடியாத தொழுநோயாளியைக் குறித்த விதிமுறைகள் இதுவே என்றார்.
33 И рече Господь к Моисею и Аарону, глаголя:
௩௩பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
34 егда внидете в землю Ханаанску, юже Аз даю вам в притяжание, и дам язву прокажения в домех земли притяжанныя вам:
௩௪“நான் உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் சொந்தமான தேசத்தில் ஒரு வீட்டிலே பூசணத்தை நான் வரச்செய்தால்,
35 и приидет, егоже дом, и повесть жерцу глаголя: аки язва является в дому моем.
௩௫அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
36 И повелит жрец испразднити сосуды дому, прежде неже внити жерцу видети язву, и да не будут нечиста вся яже в дому. По сих же внидет жрец соглядати дом:
௩௬அப்பொழுது வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டுப்படாதபடி, ஆசாரியன் அந்தப் பூசணத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை காலிசெய்துவைக்கச் சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,
37 и узрит жрец язву, и се, язва на стенах дому удолия зеленеющаяся или червленеющаяся, и обличие их худее стен:
௩௭அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால்,
38 изшед жрец из дому к дверем дому, и отлучит жрец дом на седмь дний.
௩௮ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
39 И возвратится жрец в седмый день, и узрит дом, и се, разсыпася язва по стенам дому:
௩௯ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, பூசணம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
40 и повелит жрец, да изимут камение, на нихже есть язва, и да изнесут е вон из града на место нечисто:
௪0பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
41 и да постружут извнутри дом окрест, и изсыплют персть состроганую вне града на место нечисто:
௪௧வீட்டின் உட்புறம் சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,
42 и да возмут камение ино острогано, и вложат я вместо камения: и персть ину да возмут, и помажут дом.
௪௨வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
43 Аще же паки найдет язва, и явится в дому но изнесении камения и по острогании дому и по помазании,
௪௩“கற்களைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, புதிதாகப் பூசினபின்பும், அந்தப் பூசணம் மீண்டும் வீட்டில் வந்ததானால்,
44 и внидет жрец, и узрит аще разсыпася язва в дому, прокажение пребывающее есть в дому, нечист есть:
௪௪ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; பூசணம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற பூசணம்; அது தீட்டாயிருக்கும்.
45 и разорят дом, и древа его и камение его и всю персть дому изнесут вне града, на место нечисто.
௪௫ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கற்களையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.
46 И входяй в дом вся дни, в няже есть отлучен, нечист будет до вечера:
௪௬வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
47 и спяй в дому да исперет ризы своя и нечист будет до вечера: и ядый в дому да исперет ризы своя и нечист будет до вечера.
௪௭அந்த வீட்டிலே உறங்கியவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்.
48 Аще же пришедый внидет жрец, и увидит: и се, разсыпанием не разсыпася язва в дому но помазании дому, да очистит жрец дом, яко исцеле язва:
௪௮“ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தப் பூசணம் படரவில்லை என்று கண்டானேயாகில், பூசணம் நீங்கிவிட்டதால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்மானிக்கக்கடவன்.
49 и возмет очистити дом, два птичища жива чиста и древо кедрово, и соскану червленицу и иссоп:
௪௯அப்பொழுது வீட்டைச் சுத்திகரிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,
50 и да заколет птичище едино в сосуд глинян над водою живою:
௫0ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,
51 и возмет древо кедрово и соскание червленое, и иссоп и птичище живое, и да омочит е в кровь птичища закланаго над водою живою, и да окропит ими в дому седмижды:
௫௧கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் நனைத்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளித்து,
52 и очистит дом кровию птичищною и водою живою, и птичищем живым и древом кедровым, и иссопом и сосканою червленицею:
௫௨குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டைச் சுத்திகரித்து,
53 и да отпустит птичище живое вне града на поле и помолится о доме, и чист будет.
௫௩உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும்”.
54 Сей закон о всякой язве прокажения и вреда,
௫௪இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,
55 и прокажения ризы и дому,
௫௫உடைப் பூசணத்திற்கும், வீட்டுப்பூசணத்திற்கும்,
56 и струпа, и знамения, и блещащагося,
௫௬தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.
57 и поведати в оньже день нечисто, и в оньже день очистится: сей закон прокажения.
௫௭தொழுநோய் மற்றும் பூசணம், எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்கு தொழுநோய்க்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.