< Книга пророка Иезекииля 39 >
1 И ты, сыне человечь, прорцы на Гога и рцы: сия глаголет Адонаи Господь: се, Аз на тя, Гог, князя Рос, Мосоха и Фовеля,
௧இப்போதும் மனிதகுமாரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், மேசேக் தூபால் இனத்தார்களின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்.
2 и соберу тя и наставлю тя, и возведу тя от конца севера и возведу тя на горы Израилевы:
௨நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரச்செய்து,
3 и исторгну лук твой от руки твоея левыя и стрелы твоя от руки твоея десныя,
௩உன்னுடைய வில்லை உன்னுடைய இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன்னுடைய அம்புகளை வலது கையிலிருந்து விழச்செய்வேன்.
4 и поражу тя на горах Израилевых, и падеши ты и вси иже окрест тебе, и языцы иже с тобою отдадятся во множество птиц всякому парящему, и всем зверем польным дах тя на изядение:
௪நீயும் உன்னுடைய எல்லா படைகளும் உன்னுடன் இருக்கிற மக்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; பிணந்தின்னுகிற எல்லாவித பறவைகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன்.
5 на лицы поля падеши, яко Аз глаголах, глаголет Адонаи Господь.
௫திறந்த வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
6 И пущу огнь на Магога, и населятся острови с миром,
௬நான் மாகோகிடத்திலும் தீவுகளில் அலட்சியமாகக் குடியிருக்கிறவர்களிடத்திலும் நெருப்பை அனுப்புவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
7 и уведят, яко Аз есмь Господь, и имя Мое святое вестно будет среде людий Моих Израиля, и не осквернится имя Мое святое ктому, и уведят вси языцы, яко Аз есмь Господь Святый среде Израиля.
௭இந்தவிதமாக நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் நடுவிலே என்னுடைய பரிசுத்த பெயரைத் தெரிவிப்பேன்; என்னுடைய பரிசுத்த பெயரை இனிப் பரிசுத்தக் குலைச்சலாக்கவிடமாட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய யெகோவா என்று அந்நியமக்கள் அறிந்துகொள்வார்கள்.
8 Се, приспе, и увеси, яко будет, глаголет Адонаи Господь: се есть день, о немже глаголах,
௮இதோ, அது வந்து, அது நடந்தது என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே.
9 и изыдут живущии во градех Израилевых, и пожгут оружие, и щиты и копия, и луки и стрелы, и жезлы ручныя и сулицы, и раждегут ими огнь седмь лет:
௯இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியேபோய், பெரிய கேடகங்களும், சிறியகேடகங்களும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழு வருடம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.
10 и не возмут древес с поля, ни изсекут от дубравы, но оружием раждегут огнь, и пленят пленившыя их и расхитят расхитивших я, глаголет Адонаи Господь.
௧0அவர்கள் வெளியிலிருந்து விறகு கொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
11 И будет, в той день дам Гогу место нарочито, гроб во Израили, многопогребателно, пришедших на восток моря, и заградят устие дебри и погребут тамо Гога и все множество его, и прозовется та дебрь: многопогребателное Гога.
௧௧அந்த நாளில் இஸ்ரவேல் தேசத்திலே கடலுக்குக் கிழக்கே வழிபோக்கரர்களின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற இடமாக கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகச்செய்யும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் படையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள்.
12 И закопают я дом Израилев, да очистится земля в седмь месяц,
௧௨இஸ்ரவேல் மக்கள், தேசத்தைச் சுத்தம்செய்யும்படி அவர்களைப் புதைத்துமுடிக்க ஏழு மாதங்கள் ஆகும்.
13 и погребут я вси людие земли, и будет им именито, в оньже день прославлюся, глаголет Адонаи Господь.
௧௩தேசத்தின் மக்களெல்லோரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்த நாளிலே அது அவர்களுக்குக் புகழ்ச்சியாக இருக்கும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
14 И мужей всегда поставят обходити всю землю, еже погребсти оставшихся на лицы земли и очистити ю по седми месяцех, и взыщут опасно.
௧௪தேசத்தைச் சுத்தம்செய்வதற்காக அதில் கிடக்கும் மற்ற பிரேதங்களைப் புதைக்கும்படி எப்பொழுதும் தேசத்தில் சுற்றித்திரியும் மனிதர்களையும், சுற்றித்திரிகிறவர்களுடன் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழு மாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள்.
15 Всяк проходяй землю и узревый кость человечу сотворит у нея знамение, дондеже погребут ю погребающии в дебри, многопогребателнем Гогове.
௧௫தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனிதனின் எலும்பைக் காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்கும்வரை அதின் அருகிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான்.
16 Ибо имя месту (прозовется) Падение многопогребателное: и очистится земля.
௧௬அந்த நகரத்திற்கு ஆமோனா என்று பெயரிடப்படும்; இந்தவிதமாக தேசத்தைச் சுத்தம் செய்வார்கள்.
17 И ты, сыне человечь, рцы: сия глаголет Адонаи Господь: рцы всяцей птице парящей и ко всякому зверю селному: соберитеся и приидите от всех окрестных его на заколение Мое, еже заклах вам, заклание велие на горах Израилевых, ядите мяса и пийте кровь:
௧௭மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ எல்லாவித பறவைகளையும் வெளியில் இருக்கிற எல்லா மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாகக் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்திற்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, இறைச்சியைச் சாப்பிட்டு இரத்தம் குடியுங்கள்.
18 мяса исполинов изясте и кровь князей земных испиете, овны и телцы, и козлы и волы тучнии вси:
௧௮நீங்கள் பராக்கிரமசாலிகளின் இறைச்சியைச் சாப்பிட்டு பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லோரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமமானவர்கள்.
19 и да ясте тук до сытости и испиете кровь до пиянства от заклания Моего, еже заклах вам:
௧௯நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகும்வரை கொழுப்பைச் சாப்பிட்டு, வெறியாகும்வரை இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
20 и насытитеся от трапезы Моея, от коня и всадника, исполина и всякаго мужа воинскаго, глаголет Адонаи Господь.
௨0இந்தவிதமாக என்னுடைய பந்தியிலே குதிரைகளையும், இரதவீரர்களையும், பலசாலிகளையும், எல்லா போர்வீரர்களையும் சாப்பிட்டு, திருப்தியாவீர்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.
21 И дам славу Мою в вас, и узрят вси языцы суд Мой, егоже сотворих, и руку Мою, юже наведох на ня,
௨௧இந்த விதமாக என்னுடைய மகிமையை நான் அந்நியதேசங்களுக்குள்ளே விளங்கச்செய்வேன்; நான் செய்த என்னுடைய நியாயத்தையும் அவர்கள்மேல் நான் வைத்த என்னுடைய கையையும் எல்லா தேசங்களும் காண்பார்கள்.
22 и увесть дом Израилев, яко Аз есмь Господь Бог их от сего дне и в прочыя.
௨௨அன்றுமுதல் என்றும் நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று இஸ்ரவேல் மக்கள் அறிந்துகொள்வார்கள்.
23 И уведят вси языцы, яко грехов ради своих пленени быша дом Израилев, понеже отвергошася Мене, и отвратих лице Мое от них и предах я в руце врагов их, и падоша мечем вси:
௨௩இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது அந்நியதேசத்தார் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், என்னுடைய முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் வாளால் விழுந்தார்கள்.
24 по нечистотам их и по беззаконием их сотворих им и отвратих лице Мое от них.
௨௪அவர்களுடைய அசுத்தத்திற்கு ஏற்றபடி, அவர்களுடைய மீறுதல்களுக்கு ஏற்றபடி, நான் அவர்களுக்குச் செய்து, என்னுடைய முகத்தை அவர்களுக்கு மறைத்தேன்.
25 Того ради сия глаголет Адонаи Господь: ныне возвращу пленение Иаковле и помилую дом Израилев, и возревную имене ради Моего святаго:
௨௫ஆதலால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:
26 и возмут безчестие свое и всякую неправду свою, еюже неправдоваша, егда вселятся на земли своей с миром и не будет устрашающаго,
௨௬அவர்கள் தங்களுடைய அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாகத் தங்களுடைய தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாகத் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து முடித்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்திற்கும் இரங்கி, என்னுடைய பரிசுத்தப் பெயருக்காக வைராக்கியமாக இருப்பேன்.
27 внегда возвращу я от язык и соберу я от стран языческих и освящуся в них пред языки:
௨௭நான் அவர்களை மக்கள் கூட்டங்களிலிருந்து திரும்பிவரச்செய்து, அவர்களுடைய எதிரிகளின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,
28 и уведят, яко Аз есмь Господь Бог их, внегда явлюся им во языцех и соберу я на землю их и не оставлю от них тамо ктому:
௨௮தங்களை அந்நியதேசங்களிடத்தில் சிறைப்பட்டுப்போகச்செய்த நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்களுடைய சொந்ததேசத்திலே திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தேன் என்பதினால், நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
29 и не отвращу лица Моего ктому от них, зане излиях ярость Мою на дом Израилев, глаголет Адонаи Господь.
௨௯நான் இஸ்ரவேல் மக்கள்மேல் என்னுடைய ஆவியை ஊற்றினதினால் என்னுடைய முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.