< Четвертая книга Царств 10 >
1 И Ахааву беша седмьдесят сынове во Самарии. И написа писание Ииуй и посла в Самарию ко князем Самарийским и к старейшинам и ко кормителем сынов Ахаавлих, глаголя:
௧ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது மகன்கள் இருந்ததால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பர்களிடத்திற்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்திற்கும் கடிதங்களை எழுதியனுப்பினான்.
2 и ныне егда приидет писание сие к вам, и с вами сынове господина вашего, и с вами колесницы и кони, и грады тверды и оружия:
௨அதில்: உங்கள் எஜமானுடைய மகன்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், பாதுகாப்பான பட்டணமும் ஆயுதங்களும் உங்களுக்கு இருக்கிறதே.
3 и узрите благаго и праваго в сынех господина вашего, и поставите его на престоле отца его, и да воюете о доме господина вашего.
௩இப்போதும் இந்தக் கடிதம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் எஜமானுடைய மகன்களில் உத்தமமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் எஜமானுடைய குடும்பத்துக்காக போர்செய்யுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
4 И убояшася зело и реша: се, два царя не возмогоста стати противу лицу его, и како мы станем?
௪அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.
5 И послаша иже над домом и иже над градом, и старейшины, и кормителе ко Ииую, глаголголюще: отроцы мы твои, и елика аще речеши к нам, сотворим: не воцарим мужа, благое пред очима твоима сотворим.
௫ஆகையால் அரண்மனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பர்களும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரர்களும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்கு நலமானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.
6 И написа к ним Ииуй писание второе, глаголя: аще вы мои и гласа моего вы послушаете, возмите главы мужей сынов господина вашего и принесите ко мне, якоже час утро, во Иезраель. И бе сынов царевых седмьдесят мужей, сии началницы града вскормиша их.
௬அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் கடிதத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என்னோடு சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய மகன்களின் தலைகளைத் துண்டித்து, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. ராஜாவின் மகன்களாகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனிதர்களோடு இருந்தார்கள்.
7 И бысть егда прииде к ним писание, и взяша сыны царевы и заклаша их седмьдесят мужей, и возложиша главы их в кошницы и послаша их к нему во Иезраель.
௭இந்த கடிதம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் மகன்களாகிய எழுபது பேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
8 И прииде вестник, и возвести ему, глаголя: принесоша главы сынов царевых. И рече: положите я в два холма при вратех града до заутра.
௮அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலம்வரை அவைகளை பட்டணத்து நுழைவாயிலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.
9 И бысть заутра, и изыде и ста во вратех града, и рече ко всем людем: праведни вы: се, аз есмь, обратихся на господина моего и убих его: и кто порази всех сих?
௯மறுநாள் காலமே அவன் வெளியேவந்து நின்று, சகல மக்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் எஜமானுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லோரையும் கொன்றவன் யார்?
10 Видите убо, яко не падет от глагола Господня на землю, егоже глагола Господь на дом Ахаавль: и Господь сотвори, елика глагола рукою раба Своего Илии.
௧0ஆதலால் யெகோவா ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன யெகோவாவுடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்; யெகோவா தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.
11 И изби Ииуй всех оставшихся в дому Ахаавли во Иезраели, и вся вельможы его, и знаемыя его, и жерцы его, яко не остатися его останку.
௧௧யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச் சேர்ந்த மனிதர்களையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடி, யெகூ கொன்றுபோட்டான்.
12 И воста и иде в Самарию сам, в Вефакад пастырский при пути.
௧௨பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டு ரோமம் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்திற்கு வந்தபோது,
13 И Ииуй обрете братию Охозии царя Иудина и рече: кто вы? И реша: братия Охозиины мы, и снидохом поздравити сыны царевы и сыны обладающия.
௧௩யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரர்களை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்கள்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜாத்தியின் பிள்ளைகளையும் நலம் விசாரிப்பதற்குப் போகிறோம் என்றார்கள்.
14 И рече: поимите я живы. И взяша их живых, и заклаша их в Вефакаде, четыредесять два мужа: и не остави мужа от них.
௧௪அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டுபேர்களாகிய அவர்களை ஆட்டு ரோமம் கத்தரிக்கிற கிணற்றின் அருகில் வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.
15 И иде оттуду, и обрете Ионадава сына Рихавля на пути во сретение себе, и благослови его. И рече к нему Ииуй: аще есть сердце твое с сердцем моим право, якоже сердце мое с сердцем твоим? И рече Ионадав: есть. И рече Ииуй: и аще есть, даждь руку твою. И даде руку свою. И возведе его к себе на колесницу
௧௫அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் மகனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாக இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாக இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
16 и рече к нему: гряди со мною и виждь, внегда ревновати мне по Господе саваофе. И посади его на колесницу свою.
௧௬நீ என்னோடே கூடவந்து யேகோவாக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவனுடைய இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
17 И вниде в Самарию, и изби всех оставшихся Ахаавлих в Самарии, дондеже истребити ему по глаголу Господню, егоже глагола ко Илии.
௧௭அவன் சமாரியாவுக்கு வந்தபோது, யெகோவா எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரும் அழியும்வரை கொன்றுபோட்டான்.
18 И собра Ииуй вся люди и рече к ним: Ахаав поработа Ваалу мало, Ииуй же поработает ему много:
௧௮பின்பு யெகூ மக்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
19 и ныне вся пророки Вааловы, вся рабы его и жерцы его призовите ко мне, муж да не потаится, яко жертва велика Ваалу: и всяк иже потаится, не будет жив. И Ииуй сотвори лестию, да погубит рабы Вааловы.
௧௯இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரர்களையும், அவனுடைய சகல ஆசாரியர்களையும் என்னிடத்தில் வரவழையுங்கள்; ஒருவனும் விடுபடக்கூடாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரர்களை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாகச் செய்தான்.
20 И рече Ииуй: освятите жертву Ваалу и служение. И проповедаша.
௨0பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பு நாளை நியமியுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே நியமித்தார்கள்.
21 И посла Ииуй во весь Израиль и рече, глаголя: и ныне вси раби Вааловы, и вси жерцы его, и вси пророцы его, да никтоже останется, яко жертву велику творю: иже останется, не будет жив и приидоша вси раби Вааловы, и вси жерцы его, и вси пророцы его: не остася муж, иже не прииде: и внидоша во храм Ваалов, и наполнися храм Ваалов от края да края.
௨௧யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினதால், பாகாலின் பணிவிடைக்காரர்கள் எல்லோரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததால் பாகாலின் கோவில் நான்குபுறமும் நிறைந்திருந்தது.
22 И рече Ииуй к сущым над домом одежд: изнесите одежды всем рабом Вааловым. И изнесе им ризохранитель.
௨௨அப்பொழுது அவன், ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரர்கள் அனைவருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு ஆடைகளை எடுத்துக்கொண்டுவந்தான்.
23 И вниде Ииуй и Ионадав сын Рихавль в храмину Ваалову и рече рабом Вааловым: испытайте и видите, аще есть с вами от рабов Господних, и вышлите всех рабов Господних обретшихся тамо. И бысть якоже глагола Ииуй, яко не бе от рабов Господних, но токмо едини раби Вааловы.
௨௩பின்பு யெகூ: ரேகாபின் மகனாகிய யோனதாபோடுகூடப் பாகாலின் கோவிலுக்குள் சென்று, பாகாலின் பணிவிடைக்காரர்களை நோக்கி: பாகாலின் ஊழியக்காரர்களைத் தவிர யெகோவாவின் ஊழியக்காரர்களில் ஒருவரும் இங்கே உங்களோடு இருக்காமல் கவனமாகப் பாருங்கள் என்றான்.
24 И вниде сотворити жертвы и всесожжения и Ииуй постави себе вне осмьдесят мужей и рече: муж иже аще угонзет от мужей, ихже аз извожду в руки вашя, душа его вместо души его.
௨௪அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனிதர்களில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
25 И бысть егда сконча творяй всесожжения, и рече Ииуй предтекущым и тристатом: вшедше избийте их, да не изыдет от них муж. И избиша их острием меча и повергоша предтекущии и тристаты, и идоша даже до града храма Ваалова:
௨௫சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ வீரர்களையும் அவர்களின் தலைவர்களையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் வீரர்களும் அவர்களின் தலைவர்களும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகாலின் கோவிலைச் சேர்ந்த இடமெங்கும் போய்,
26 и изнесоша кумир Ваалов и сожгоша его:
௨௬கோவிலின் சிலைகளை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
27 и разбиша кумиры Вааловы, и низвергоша дом Ваалов, и определиша его на афедрон даже до дне сего.
௨௭சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல கழிப்பிடமாக்கினார்கள்.
28 И погуби Ииуй храм Ваалов от Израиля.
௨௮இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இல்லாமல் அழித்துப்போட்டான்.
29 Обаче от грехов Иеровоама сына Наватова, иже введе в грех Израиля, не отступи Ииуй от последования их: юницы златыя, яже в Вефили и в Дане.
௨௯ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டுவிலகவில்லை.
30 И рече Господь ко Ииую: за сия, елика ублажил еси сотворити правое пред очима Моима, и вся елика по сердцу Моему сотворил еси дому Ахаавлю, сынове твои до четвертаго рода сядут на престоле во Израили.
௩0யெகோவா யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாகச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்திற்குச் செய்ததால், உன் மகன்கள் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நான்கு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.
31 И Ииуй не сохрани ходити в законе Господни всем сердцем своим: не отступи от грехов Иеровоама сына Наватова, иже в грех введе Израиля.
௩௧ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.
32 Во дни оны нача Господь посецати во Израили: и порази их Азаил во всех пределех Израилевых,
௩௨அந்நாட்கள்முதல் யெகோவா இஸ்ரவேலைக் குறைந்துபோகச் செய்தார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் தோற்கடித்து,
33 от Иордана на восток солнца, всю землю Галаадску и Гаддииску, и Рувимову и Манассиину, от Ароира, иже есть при устии потока Арнонска, и Галаад и Васан.
௩௩யோர்தான் நதி துவங்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்கு அருகிலுள்ள ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காத்தியர்கள், ரூபனியர்கள், மனாசேயர்கள் இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் தோற்கடித்தான்.
34 И прочая словес Ииуевых, и вся яже сотвори, и вся сила его, и совещания, яже совеща, не се ли, сия написана в книзе словес дний царей Израилевых?
௩௪யெகூவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவனுடைய அனைத்து வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
35 И успе Ииуй со отцы своими, и погребоша его в Самарии. И воцарися Иоахаз сын его вместо его.
௩௫யெகூ இறந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
36 И дний бяше, в няже Ииуй царствова над Израилем в Самарии, двадесять осмь лет.
௩௬யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்த நாட்கள் இருபத்தெட்டு வருடங்கள்.