< Књига пророка Захарије 3 >

1 После ми показа Исуса, поглавара свештеничког, који стајаше пред анђелом Господњим, и Сотону, који му стајаше с десне стране да га пре.
அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் யெகோவாவுடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதம் செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.
2 А Господ рече сотони: Господ да те укори, Сотоно, Господ да те укори који изабра Јерусалим. Није ли Он главња истргнута из огња?
அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
3 А Исус беше обучен у хаљине прљаве, и стајаше пред анђелом.
யோசுவாவோ என்றால் அழுக்கு உடை அணிந்தவனாகத் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
4 А он проговори и рече онима који стајаху пред њим: Скините с њега те прљаве хаљине. И рече му: Види, узех с тебе безакоње твоје, и обукох ти нове хаљине.
அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு உடைகளைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிடத்திலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த உடையை உடுத்தினேன் என்றார்.
5 И рекох му: Нека му метну чисту капу на главу. И метнуше му чисту капу на главу, и обукоше му хаљине; а анђео Господњи стајаше.
அவன் தலையின்மேல் சுத்தமான தலைப்பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான தலைப்பாகையை அவன் தலையின்மேல் வைத்து, அவனுக்கு ஆடைகளை உடுத்தினார்கள்; யெகோவாவுடைய தூதன் அங்கே நின்றார்.
6 И анђео Господњи засведочи Исусу говорећи:
யெகோவாவுடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:
7 Овако вели Господ над војскама: Ако узидеш мојим путевима, и ако уздржиш шта сам наредио да се држи, тада ћеш ти судити дому мом и чуваћеш тремове моје, и даћу ти да ходаш међу овима што стоје.
சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் ஆலய வளாகங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.
8 Чуј Исусе, поглавару свештенички, ти и другови твоји што седе пред тобом, јер су ти људи чудо: ево ја ћу довести слугу свог, клицу.
இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழர்களும் கேட்கட்டும்; இவர்கள் அடையாளமாயிருக்கிற மனிதர்கள்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரச்செய்வேன்.
9 Јер гле, камен који метнух пред Исуса, на том је једном камену седам очију; гле, ја ћу га отесати, говори Господ над војскама, и узећу безакоње те земље у један дан.
இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
10 У тај дан, говори Господ над војскама, зваћете сваки ближњег свог под винову лозу и под смокву.
௧0அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சைச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.

< Књига пророка Захарије 3 >