< Псалми 50 >

1 Бог над боговима, Господ, говори и дозива земљу од истока сунчаног до запада.
ஆசாபின் பாடல். வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
2 Са Сиона, који је врх красоте, јавља се Бог.
அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
3 Иде Бог наш, и не ћути; пред Њим је огањ који прождире, око Њега је бура велика.
நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; அவருக்கு முன்பு அக்கினி அழியும்; அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.
4 Дозива небо одозго и земљу, да суди народу свом:
அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
5 "Скупите ми свеце моје, који су учинили са мном завет на жртви."
பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
6 (И небеса огласише правду Његову, јер је тај судија Бог.)
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)
7 Слушај, народе мој, шта ћу ти казати, Израиљу, шта ћу ти јавити. Ја сам Бог, Бог твој.
என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
8 Нећу те за жртве твоје карати; твоје жртве паљенице свагда су преда мном.
உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
9 Не треба ми узимати телета из дома твог, ни јарића из торова твојих.
உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
10 Јер је моје све горско зверје, и стока по планинама на хиљаде.
௧0எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11 Знам све птице по горама, и красота пољска преда мном је.
௧௧மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
12 Да огладним, не бих теби рекао, јер је моја васиљена и све што је у њој.
௧௨நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
13 Зар ја једем месо волујско, или крв јарећу пијем?
௧௩நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14 Принеси Богу хвалу на жртву, и извршуј Вишњему завете своје.
௧௪நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;
15 Призови ме у невољи својој, избавићу те, и ти ме прослави.
௧௫ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
16 А безбожнику рече Бог: Зашто казујеш уредбе моје и носиш завет мој у устима својим?
௧௬தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
17 А сам мрзиш на науку, и речи моје бацаш за леђа.
௧௭அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
18 Кад видиш лупежа, пристајеш с њим, и с прељубочинцима имаш део.
௧௮நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
19 Уста си своја пустио да говоре зло, и језик твој плете преваре.
௧௯உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது.
20 Седиш и говориш на брата свог, сина матере своје опадаш.
௨0நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
21 Ти си то чинио, ја ћутах, а ти помисли да сам ја као ти. Обличићу те, метнућу ти пред очи грехе твоје.
௨௧இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
22 Разумејте ово који заборављате Бога! Иначе ћу зграбити, па неће нико избавити.
௨௨தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
23 Онај мене поштује који приноси хвалу на жртву и који је путем на опазу. Ја ћу му показати спасење Божије.
௨௩நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

< Псалми 50 >