< Псалми 3 >

1 Господе! Како је много непријатеља мојих! Многи устају на ме.
தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல். யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்.
2 Многи говоре за душу моју: Нема му помоћи од Бога.
தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா)
3 Али Ти си, Господе, штит који ме заклања, слава моја; Ти подижеш главу моју.
ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.
4 Гласом својим вичем ка Господу, и чује ме са свете горе своје.
நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா)
5 Ја лежем, спавам и устајем, јер ме Господ чува.
நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; யெகோவா என்னைத் தாங்குகிறார்.
6 Не бојим се много хиљада народа што са свих страна наваљује на ме.
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் நான் பயப்படமாட்டேன்.
7 Устани, Господе! Помози ми, Боже мој! Јер Ти удараш по образу све непријатеље моје; разбијаш зубе безбожницима.
யெகோவாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை காப்பாற்றும். நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
8 Од Господа је спасење; нека буде на народу Твом благослов Твој!
ஜெயம் யெகோவாவுடையது; தேவனே உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா)

< Псалми 3 >