< Приче Соломонове 5 >

1 Сине мој, слушај мудрост моју, к разуму мом пригни ухо своје,
என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;
2 Да се држиш разборитости, и усне твоје да хране знање.
அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
3 Јер с усана туђе жене капље мед, и грло јој је мекше од уља;
ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.
4 Али јој је последак горак као пелен, оштар као мач с обе стране оштар.
அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.
5 Ноге јој силазе к смрти, до пакла допиру кораци њени. (Sheol h7585)
அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். (Sheol h7585)
6 Да не би мерио пут животни, савијају се стазе њене да не знаш.
நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.
7 Зато, децо, послушајте мене, и не одступајте од речи уста мојих.
ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.
8 Нека је далеко од ње пут твој, и не приближуј се к вратима куће њене,
உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.
9 Да не би дао другима славе своје и година својих немилостивоме,
சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.
10 Да се не би туђинци наситили твог блага и труд твој да не би био у туђој кући,
௧0அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.
11 И да не ридаш на послетку, кад се строши месо твоје и тело твоје,
௧௧முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
12 И кажеш: Како мрзих на наставу, и како срце моје презира карање!
௧௨ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!
13 И не послушах глас учитеља својих, и не пригнух уха свог к онима који ме учаху!
௧௩என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!
14 Умало не западох у свако зло усред збора и скупштине.
௧௪சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.
15 Пиј воду из свог студенца и што тече из твог извора.
௧௫உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.
16 Нека се разливају твоји извори на поље, и потоци по улицама.
௧௬உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
17 Имај их сам за се, а не туђин с тобом.
௧௭அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், உனக்கே உரியவைகளாக இருப்பதாக.
18 Благословен да је извор твој, и весели се женом младости своје;
௧௮உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.
19 Нека ти је као кошута мила и као срна љупка; дојке њене нека те опијају у свако доба, у љубави њеној посрћи једнако.
௧௯அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.
20 А зашто би, сине, посртао за туђинком и голио недра туђој,
௨0என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?
21 Кад су пред очима Господу путеви свачији, и мери све стазе његове?
௨௧மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
22 Безбожника ће ухватити његова безакоња, и у ужа греха својих заплешће се;
௨௨துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
23 Умреће без наставе, и од мноштва лудости своје лутаће.
௨௩அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

< Приче Соломонове 5 >