< 4 Мојсијева 8 >
1 И рече Господ Мојсију говорећи:
௧யெகோவா மோசேயை நோக்கி:
2 Кажи Арону и реци му: Кад запалиш жишке, седам жижака нека светли напред, на свећњаку.
௨“நீ ஆரோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
3 И учини Арон тако, и запали жишке да светле спреда, на свећњаку, као што Господ заповеди Мојсију.
௩யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.
4 А свећњак беше скован од злата, и ступац му и цвеће сковано; по прилици коју показа Господ Мојсију тако беше начинио свећњак.
௪இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் தங்கத்தால் அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டிருந்தது; மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.
5 Још рече Господ Мојсију говорећи:
௫பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
6 Узми Левите између синова Израиљевих, и очисти их.
௬“நீ இஸ்ரவேல் மக்களிலிருந்து லேவியர்களைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிக்கவேண்டும்.
7 А учини им ово да их очистиш: покропи их водом очишћења, а они нека обрију све тело своје и оперу хаљине своје, и очистиће се.
௭அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் தண்ணீரைத் தெளிக்கவேண்டும்; பின்பு அவர்கள் உடல் முழவதும் சவரம்செய்து, தங்களுடைய ஆடைகளைத் துவைத்து, தங்களைச் சுத்திகரிக்கவேண்டும்.
8 Потом нека узму теле с даром уз њега, белим брашном помешаним с уљем; и друго теле узми за грех.
௮அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லியமாவாகிய போஜனபலியையும் கொண்டுவரவேண்டும்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி.
9 Па доведи Левите пред шатор од састанка, и сазови сав збор синова Израиљевих.
௯லேவியர்களை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பு வரச்செய்து, இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்.
10 И доведи Левите пред Господа, и нека метну синови Израиљеви руке своје на Левите.
௧0நீ லேவியர்களைக் யெகோவாவுடைய சந்நிதியில் வரச்செய்தபோது, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய கைகளை லேவியர்கள்மேல் வைக்கவேண்டும்.
11 И Арон нека принесе Левите Господу за принос од синова Израиљевих да врше службу Господу.
௧௧லேவியர்கள் யெகோவாவுக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் மக்களின் காணிக்கையாகக் யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாக நிறுத்தவேண்டும்.
12 А Левити нека метну руке своје на главе теоцима, па принеси једно теле за грех а друго на жртву паљеницу Господу да се очисте Левити.
௧௨அதன்பின்பு லேவியர்கள் தங்களுடைய கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்; பின்பு நீ லேவியர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக, யெகோவாவுக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தி,
13 И постави Левите пред Ароном и синовима његовим, и принеси их за принос Господу.
௧௩லேவியர்களை ஆரோனுக்கும் அவனுடைய மகனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் யெகோவாவுக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
14 И одвој Левите између синова Израиљевих да буду моји Левити.
௧௪“இப்படி நீ லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும்; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்.
15 А после нека дођу Левити да служе у шатору од састанка, кад их очистиш и принесеш за принос.
௧௫இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கவேண்டும்; அதன்பின்பு லேவியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்ய நுழையவேண்டும்.
16 Јер су мени дани између синова Израиљевих; за све што отвара материцу, за све првенце између синова Израиљевих узех њих.
௧௬இஸ்ரவேல் மக்களிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் மக்கள் எல்லாரிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற எல்லா முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.
17 Јер је мој сваки првенац између синова Израиљевих и од људи и од стоке; онај дан кад побих све првенце у земљи мисирској, посветио сам их себи.
௧௭இஸ்ரவேல் மக்களில் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே முதற்பேறான யாவையும் கொன்ற நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி,
18 А Левите узех за све првенце синова Израиљевих.
௧௮பின்பு லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,
19 И дадох Левите на дар Арону и синовима његовим између синова Израиљевих, да служе место синова Израиљевих у шатору од састанка, и да буду откуп за синове Израиљеве, да не би долазио помор на синове Израиљеве, кад би приступали к светињи синови Израиљеви.
௧௯லேவியர்கள் இஸ்ரவேல் மக்களுடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படியும், இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படியும், இஸ்ரவேல் மக்கள் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் மக்களில் வாதை உண்டாகாதபடியும், லேவியர்களை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசாகக் கொடுத்தேன்” என்றார்.
20 И учини Мојсије и Арон и сав збор синова Израиљевих Левитима све што заповеди Господ Мојсију за Левите, тако им учинише синови Израиљеви.
௨0அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்களின் சபையார் யாவரும் யெகோவா லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியர்களுக்குச் செய்தார்கள்.
21 И очистише се Левити, и опраше хаљине своје, и принесе их Арон за принос пред Господом, и очисти их Арон да би били чисти.
௨௧லேவியர்கள் சுத்திகரிக்கப்பட்டு, தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
22 А онда тек приступише Левити да врше службу своју у шатору од састанка пред Ароном и пред синовима његовим; као што заповеди Господ Мојсију за Левите, тако им учинише.
௨௨அதற்குப்பின்பு லேவியர்கள் ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் முன்பாக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்களுடைய பணிவிடையைச் செய்யும்படி நுழைந்தார்கள்; யெகோவா லேவியர்களைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.
23 И опет рече Господ Мојсију говорећи:
௨௩பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
24 И ово је за Левите: од двадесет и пет година и више нека ступају у службу да служе у шатору од састанка.
௨௪லேவியர்களுக்குரிய கட்டளை என்னவென்றால்: “இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் கூட்டத்திற்கு சேவிக்க வரவேண்டும்.
25 А кад коме буде педесет година, нека излази из те службе и више нека не служи.
௨௫ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடை செய்யும் கூட்டத்தைவிட்டு,
26 Али нека служи браћи својој у шатору од састанка радећи шта треба радити, а сам нека не врши службу. Тако учини Левитима за послове њихове.
௨௬ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக்காக்கிறதற்குத் தங்களுடைய சகோதரர்களோடு ஊழியம் செய்வதைத் தவிர, வேறொரு வேலையும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர்கள் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டமிடவேண்டும்” என்றார்.