< 1 Мојсијева 30 >
1 А Рахиља видевши где не рађа деце Јакову, позавиде сестри својој; и рече Јакову: Дај ми деце, или ћу умрети.
௧ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: “எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” என்றாள்.
2 А Јаков се расрди на Рахиљу, и рече: Зар сам ја а не Бог који ти не да порода?
௨அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபமடைந்து: “தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா?” என்றான்.
3 А она рече: Ето робиње моје Вале, лези с њом, нека роди на мојим коленима, па ћу и ја имати деце од ње.
௩அப்பொழுது அவள்: “இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; நான் வளர்க்க அவள் பிள்ளைகளைப் பெறவும், அவள் மூலமாவது என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும்” என்று சொல்லி,
4 И даде му Валу робињу своју за жену, и Јаков леже с њом.
௪அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.
5 И затрудне Вала, и роди Јакову сина.
௫பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
6 А Рахиља рече: Господ ми је судио и чуо глас мој, те ми даде сина. Зато му надеде име Дан.
௬அப்பொழுது ராகேல்: “தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பெயரிட்டாள்.
7 И Вала робиња Рахиљина затрудне опет, и роди другог сина Јакову;
௭மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
8 А Рахиља рече: Борах се жестоко са сестром својом, али одолех. И надеде му име Нефталим.
௮அப்பொழுது ராகேல்: “நான் மகா போராட்டமாக என் சகோதரியோடு போராடி மேற்கொண்டேன்” என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பெயரிட்டாள்.
9 А Лија видевши где преста рађати узе Зелфу робињу своју и даде је Јакову за жену.
௯லேயாள் தனது பிள்ளைபேறு நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.
10 И роди Зелфа робиња Лијина Јакову сина;
௧0லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
11 И Лија рече: Дође чета. И надеде му име Гад.
௧௧அப்பொழுது லேயாள்: “ஏராளமாகிறதென்று” சொல்லி, அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.
12 Опет роди Зелфа робиња Лијина другог сина Јакову;
௧௨பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
13 И рече Лија: Благо мени, јер ће ме блаженом звати жене. Зато му надеде име Асир.
௧௩அப்பொழுது லேயாள்: “நான் பாக்கியவதி, பெண்கள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.
14 А Рувим изиђе у време жетве пшеничне и нађе мандрагору у пољу, и донесе је Лији матери својој. А Рахиља рече Лији: Дај ми мандрагору сина свог.
௧௪கோதுமை அறுப்பு நாட்களில் ரூபன் வயல்வெளிக்குப் போய், தூதாயீம் பழங்களைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: “உன் மகனுடைய தூதாயீம் பழத்தில் எனக்குக் கொஞ்சம் தா” என்றாள்.
15 А она јој рече: Мало ли ти је што си ми узела мужа? Хоћеш да ми узмеш и мандрагору сина мог? А Рахиља јој рече: Нека ноћас спава с тобом за мандрагору сина твог.
௧௫அதற்கு அவள்: “நீ என் கணவனை எடுத்துக்கொண்டது சாதாரணகாரியமா? என் மகனுடைய தூதாயீம் பழங்களையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்;” அதற்கு ராகேல்: “உன் மகனுடைய தூதாயீம் பழங்களுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடு உறவுகொள்ளட்டும்” என்றாள்.
16 И увече кад се Јаков враћаше из поља, изиђе му Лија на сусрет и рече: Спаваћеш код мене, јер те купих за мандрагору сина свог. И спава код ње ону ноћ.
௧௬மாலையில் யாக்கோபு வெளியிலிருந்து வரும்போது லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: “என் மகனுடைய தூதாயீம் பழங்களால் உம்மை வாங்கினேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும்” என்றாள்; அவன் அன்று இரவு அவளோடு உறவுகொண்டான்.
17 А Бог услиши Лију, те она затрудне, и роди Јакову петог сина.
௧௭தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
18 И рече Лија: Господ ми даде плату моју што дадох робињу своју мужу свом. И надеде му име Исахар.
௧௮அப்பொழுது லேயாள்: “நான் என் வேலைக்காரியை என் கணவனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பெயரிட்டாள்.
19 И затрудне Лија опет, и роди Јакову шестог сина;
௧௯மேலும் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் மகனைப் பெற்றெடுத்தாள்.
20 И рече Лија: Дарива ме Господ даром добрим; да ако се сада већ приљуби к мени муж мој, јер му родих шест синова. Зато му надеде име Завулон.
௨0அப்பொழுது லேயாள்: “தேவன் எனக்கு நல்ல வெகுமதியைத் தந்தார்; என் கணவனுக்கு நான் ஆறு மகன்களைப் பெற்றதால், இப்பொழுது அவர் என்னுடனே தங்கியிருப்பார்” என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பெயரிட்டாள்.
21 Најпосле роди кћер, и надеде јој има Дина.
௨௧பின்பு அவள் ஒரு மகளையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பெயரிட்டாள்.
22 Али се Господ опомену Рахиље; и услишивши је отвори јој материцу.
௨௨தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பமடையச் செய்தார்.
23 И затрудне, и роди сина, и рече: Узе Бог срамоту моју.
௨௩அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும்,
24 И надеде му име Јосиф, говорећи: Нека ми дода Господ још једног сина.
௨௪இன்னும் ஒரு மகனைக் யெகோவா எனக்குத் தருவார்” என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள்.
25 А кад Рахиља роди Јосифа, рече Јаков Лавану: Пусти ме да идем у своје место и у своју земљу.
௨௫ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: “நான் என் வீட்டிற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்.
26 Дај ми жене моје, за које сам ти служио, и децу моју, да идем, јер знаш како сам ти служио.
௨௬நான் உமக்கு வேலைசெய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் வேலை செய்த விதத்தை நீர் அறிந்திருக்கிறீர்” என்றான்.
27 А Лаван му рече: Немој, ако сам нашао милост пред тобом; видим да ме је благословио Господ тебе ради.
௨௭அப்பொழுது லாபான்: “உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னால் யெகோவா என்னை ஆசீர்வதித்தார் என்று அனுபவத்தில் அறிந்தேன்.
28 И још рече: Ишти колико хоћеш плате, и ја ћу ти дати.
௨௮உன் சம்பளம் எவ்வளவென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன்” என்றான்.
29 А Јаков му одговори: Ти знаш како сам ти служио и каква ти је стока постала код мене.
௨௯அதற்கு அவன்: “நான் உமக்கு வேலை செய்தவிதத்தையும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதத்தையும் அறிந்திருக்கிறீர்.
30 Јер је мало било што си имао докле ја не дођох; али се умножи веома, јер те Господ благослови кад ја дођох. Па кад ћу и ја тако себи кућу кућити?
௩0நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் யெகோவா உம்மை ஆசீர்வதித்ததால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்திற்குச் சம்பாதிப்பது எப்பொழுது” என்றான்.
31 И рече му Лаван: Шта хоћеш да ти дам? А Јаков одговори: Не треба ништа да ми даш; него ћу ти опет пасти стоку и чувати, ако ћеш ми учити ово:
௩௧அதற்கு அவன்: “நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: “நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்ப்பேன்.
32 Да зађем данас по свој стоци твојој, и одлучим све што је шарено и с белегом, и све што је црно између оваца, и шта је с белегом и шарено између коза, па шта после буде тако, оно да ми је плата.
௩௨நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும்.
33 Тако ће ми се после посведочити правда моја пред тобом кад дођеш да видиш заслугу моју: Шта год не буде шарено ни с белегом ни црно између оваца и коза у мене, биће крадено.
௩௩அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என்னிடத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடப்பட்டவைகளாக எண்ணப்படட்டும்” என்றான்.
34 А Лаван рече: Ето, нека буде како си казао.
௩௪அதற்கு லாபான்: “நீ சொன்னபடியே ஆகட்டும்” என்று சொல்லி,
35 И одлучи Лаван исти дан јарце с белегом и шарене и све козе с белегом и шарене, и све на чем беше шта бело, и све црно између оваца, и предаде синовима својим.
௩௫அந்த நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் அனைத்தையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் அனைத்தையும் பிரித்து, தன் மகன்களிடத்தில் ஒப்புவித்து,
36 И остави даљине три дана хода између себе и Јакова. И Јаков пасаше осталу стоку Лаванову.
௩௬தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாட்கள் பயணதூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.
37 И узе Јаков зелених прутова тополових и лескових и кестенових, и нагули их до белине која беше на прутовима.
௩௭பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கிளைகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து,
38 И меташе нагуљене прутове пред стоку у жлебове и корита кад долажаше стока да пије, да би се упаљивала кад дође да пије.
௩௮தான் உரித்த கிளைகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு முன்பாகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது சினையாவதுண்டு.
39 И упаљиваше се стока гледајући у прутове, и шта се млађаше беше с белегом, прутасто и шарено.
௩௯ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்பாகச் சினைப்பட்டதால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
40 И Јаков одлучиваше млад, и обраћаше стадо Лаваново да гледа у шарене и у све црне; а своје стадо одвајаше и не обраћаше га према стаду Лавановом.
௪0அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்பு நிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் முன்பாக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையுடன் சேர்க்காமல், தனியாக வைத்துக்கொள்வான்.
41 И кад се год упаљиваше стока рана, меташе Јаков прутове у корита пред очи стоци да би се упаљивала гледајући у прутове;
௪௧பலத்த ஆடுகள் சினையாகும்போது, அந்தக் கிளைகளுக்கு முன்பாக சினையாகும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான்.
42 А кад се упаљиваше позна стока, не меташе; тако позне биваху Лаванове а ране Јаковљеве.
௪௨பலவீனமான ஆடுகள் சினைப்படும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
43 И тако се тај човек обогати врло, те имаше много стоке и слуга и слушкиња и камила и магараца.
௪௩இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.