< Јездрина 10 >

1 А кад се мољаше Јездра и исповедаше грехе плачући и лежећи пред домом Божјим, скупи се к њему из Израиља велико мноштво људи и жена и деце; и народ плакаше веома.
எஸ்றா இப்படி விண்ணப்பம்செய்து, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கும்போது, இஸ்ரவேலில் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடினது; மக்கள் மிகவும் அழுதார்கள்.
2 Тада проговори Сеханија, син Јехилов од синова Еламових и рече Јездри: Ми смо сагрешили Богу свом што узесмо жене туђинке из народа земаљских; али још има надања Израиљу за то.
அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
3 Да учинимо завет Богу свом, да отпустимо све жене и пород њихов по вољи Господњој и оних који се боје заповести Бога нашег, и по закону нека буде.
இப்பொழுதும் அந்தப் பெண்கள் எல்லோரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனுடன் உடன்படிக்கை செய்வோமாக; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக.
4 Устани, јер је ово твој посао; а ми ћемо бити уза те, буди слободан и ради.
எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்குரியது; நாங்களும் உம்மோடு இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
5 Тада уста Јездра, и закле главаре свештеничке и Левите и свега Израиља да учине тако. И заклеше се.
அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் முக்கியமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்ய, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.
6 Потом уста Јездра испред дома Божијег, и отиде у клет Јоанана сина Елијасивовог; и ушавши не једе хлеба нити воде пи, јер тужаше ради преступа оних који бише у ропству.
அதன்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்திற்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் மகனாகிய யோகனானின் அறைக்குள் சென்றான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினால் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.
7 Потом огласише по Јудеји и Јерусалиму свим који се вратише из ропства, да се скупе у Јерусалим,
அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,
8 А ко не би дошао за три дана по договору кнезовском и старешинском, да се све имање његово разаспе, а сам да се одлучи од збора оних који се вратише из ропства.
மூன்று நாட்களுக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராமல்போனால், அவனுடைய பொருட்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபையிலிருந்து அவன் விலக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம் செய்தார்கள்.
9 Тако се скупише сви људи од Јуде и Венијамина у Јерусалим за три дана, месеца деветог. И сеђаше сав народ на улици пред домом Божјим дрхћући ради те ствари и од дажда.
அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
10 Тада уставши Јездра свештеник рече им: Ви сагрешисте што се оженисте туђинкама, те умножисте кривицу Израиљеву.
௧0அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள்.
11 Зато сада исповедите се Господу Богу отаца својих, и учините вољу Његову, и одвојте се од народа земаљских и жена туђинака.
௧௧இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான்.
12 И сав збор одговори и рече гласно: Како нам каза учинићемо.
௧௨அப்பொழுது சபையார் அனைவரும் மகா சத்தத்தோடே மறுமொழியாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
13 Али народа има много и иде дажд, не може се стајати напољу, а тај посао није за један дан ни за два, јер нас има много који сагрешисмо у том.
௧௩ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
14 Да се одреде кнезови наши из свега збора, па који су год у градовима нашим ожењени туђинкама нека долазе у одређено време и с њима старешине сваког града и судије докле не одвратимо жестоки гнев Бога свог за ту ствар.
௧௪ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள்.
15 И одређен би на то Јонатан, син Асаилов и Јазија син Текујев; а Месулам и Саветај Левити помагаше им.
௧௫ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்காவின் மகன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதாயி என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
16 И учинише тако који се вратише из ропства. И одвојише се Јездра свештеник и главари домова отачких по домовима отаца својих, сви поименце, и седоше првог дана десетог месеца да извиђају ствар.
௧௬சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்கள் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து,
17 И до првог дана првог месеца свршише са свима онима који се беху оженили туђинкама.
௧௭வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள் எல்லோருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
18 А нађоше се између синова свештеничких ожењени туђинкама између синова Исуса, сина Јоседековог и браће његове: Масија и Елијезер и Јарив и Гедалија;
௧௮ஆசாரிய புத்திரரில் மறு ஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
19 И дадоше руке да ће пустити жене своје; и који беху згрешили принесоше по једног овна за кривицу своју;
௧௯இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
20 И од синова Имирових Ананије и Зевадија;
௨0இம்மேரின் மகன்களில் அனானியும், செபதியாவும்,
21 И од синова Харимових Масија и Илија и Семаја и Јехило и Озија,
௨௧ஆரீமின் மகன்களில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
22 И од синова Пасхорових Елионај, Масија, Исмаило, Натанаило, Јозавад и Еласа,
௨௨பஸ்கூரின் மகன்களில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
23 И од Левита Јозавад и Симеј и Келаја, то је Келита, и Петаја и Јуда и Елијезер;
௨௩லேவியர்களில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பெயர்கொண்ட கெலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
24 И од певача Елијасив; и од вратара Салум и Телем и Урија;
௨௪பாடகர்களில் எலியாசிபும், வாசல் காவலாளர்களில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
25 А од Израиља, од синова Фаросових Рамија и Језија и Малхије и Мијамин и Елеазар и Малхија и Венаја;
௨௫மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் மகன்களில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
26 И од синова Еламових: Матанија, Захарија и Јехило и Авдија и Јеремот и Илија;
௨௬ஏலாமின் மகன்களில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
27 И од синова Затових Елиоинај, Елијасив, Матанија и Јеримот и Завад и Азиза;
௨௭சத்தூவின் மகன்களில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;
28 И од синова Вивајевих Јоанан, Ананија, Завај, Атлај,
௨௮பெபாயின் மகன்களில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
29 И од синова Ванијевих Месулам, Малух и Адаја, Јасув и Сеал и Рамот;
௨௯பானியின் மகன்களில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்,
30 И од синова Фат-Моавових Авна и Хелал, Венаја, Масија, Матанија, Веселеило и Винуј и Манасија;
௩0பாகாத்மோவாபின் மகன்களில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
31 И од синова Харимових Елијезер, Јесија, Малхија, Семаја, Симеон,
௩௧ஆரீமின் மகன்களில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,
32 Венијамин, Малух, Семарија;
௩௨பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;
33 Од синова Асумових Матенај, Матата, Завад, Елифелет, Јеремај, Манасија, Симеј;
௩௩ஆசூமின் மகன்களில் மதனாய், மத்தத்தா, சாபாத், எலிப்பெலேத், எரெமாயி, மனாசே, சிமேயி என்பவர்களும்;
34 Од синова Ванијевих Мадаја, Амрам и Уило.
௩௪பானியின் மகன்களில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
35 Венаја, Ведеја, Хелуј,
௩௫பெனாயா, பெதியா, கெல்லூ,
36 Ванија, Меримот, Елијасив,
௩௬வனியா, மெரெமோத், எலியாசிப்,
37 Матнија, Матенај и Јасав,
௩௭மத்தனியா, மதனாய், யாசாய்,
38 И Ваније, Винуј, Симеј,
௩௮பானி, பின்னூயி, சிமெயி,
39 И Селемија и Натан и Адаја,
௩௯செலேமியா, நாத்தான், அதாயா,
40 Махнадевај, Сасај, Сарај,
௪0மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
41 Азареило и Селемија, Семарија,
௪௧அசரெயேல், செலேமியா, செமரியா,
42 Салум, Амарија, Јосиф;
௪௨சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
43 Од синова Невових: Јесило, Матанија, Завад, Зевина, Јадав, Јоило и Венаја.
௪௩நேபோவின் மகன்களில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
44 Сви се ови беху оженили туђинкама и неке између њих беху и децу изродиле.
௪௪இவர்கள் எல்லோரும் வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள்; இவர்களில் சிலர் திருமணம்செய்த பெண்களிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

< Јездрина 10 >