< Књига пророка Језекиља 26 >
1 А једанаесте године први дан месеца дође ми реч Господња говорећи:
௧பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மாதத்தின் முதல் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 Сине човечји, што Тир говори за Јерусалим: Ха, ха! Разбише се врата народима, обратише се к мени, напунићу се кад опусте;
௨மனிதகுமாரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, மக்களின் வாசலாக இருந்த நகரம் இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால்,
3 Зато овако вели Господ Господ: Ево мене на те, Тире, и довешћу многе народе на те као да бих довео море с валима његовим.
௩யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; கடல் தன்னுடைய அலைகளை எழும்பிவரச்செய்கிறதுபோல நான் அநேகம் தேசங்களை உனக்கு விரோதமாக எழும்பிவரச்செய்வேன்.
4 И они ће обалити зидове тирске и куле у њему раскопати, и омешћу прах његов и претворићу га у го камен.
௪அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் மதில்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இல்லாமல் விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்.
5 И постаће место да се разастиру мреже усред мора, јер ја говорих, вели Господ Господ, и биће грабеж народима.
௫அது வலைகளை விரிக்கிற இடமாக கடலின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அது தேசங்களுக்குக் கொள்ளையாகும்.
6 И кћери његове по пољу изгинуће од мача, и познаће да сам ја Господ.
௬வெளியில் இருக்கிற அதின் மகள்களோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
7 Јер овако вели Господ Господ: Ево, ја ћу довести на Тир Навуходоносора, цара вавилонског са севера, цара над царевима, с коњима и с колима и с коњицима и с војскама и многим народом.
௭யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளுடனும், இரதங்களுடனும், குதிரைவீரர்களுடனும் கூட்டத்தோடும் அதிகமான மக்களுடனும் தீருவுக்கு விரோதமாக வரச்செய்வேன்.
8 Кћери твоје по пољу побиће мачем, и начиниће према теби куле, и ископаће опкопе према теби, и подигнуће према теби штитове.
௮அவன் வெளியில் இருக்கிற உன்னுடைய மகள்களை வாளினால் கொன்று, உனக்கு விரோதமாக மதில்களைக் கட்டி அணைபோட்டு, கேடயங்களை எடுத்து,
9 И наместиће убојне справе према зидовима твојим, и развалиће куле твоје оружјем својим.
௯உன்னுடைய மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன்னுடைய கடைப்பாரைகளால் உன்னுடைய முற்றுகை சுவர்களை இடித்துப்போடுவான்.
10 Од мноштва коња његових покриће те прах, од праске коњика и точкова и кола затрешће се зидови твоји, кад стане улазити на твоја врата као што се улази у град испроваљиван.
௧0அவனுடைய குதிரைகளின் கூட்டத்தினால் புழுதி எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவதுபோல, அவன் உன்னுடைய வாசல்களுக்குள் நுழையும்போது, குதிரை வீரர்களும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன்னுடைய மதில்கள் அதிரும்.
11 Копитима коња својих изгазиће све улице твоје, побиће народ твој мачем, и ступови силе твоје попадаће на земљу.
௧௧தன்னுடைய குதிரைகளின் குளம்புகளினால் உன்னுடைய வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன்னுடைய மக்களை வாளினால் கொன்றுபோடுவான்; உன்னுடைய பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும்.
12 И поплениће благо твоје и разграбити трг твој, и развалиће зидове твоје и лепе куће твоје разорити, и камење твоје и дрва твоја и прах твој бациће у воду.
௧௨அவர்கள் உன்னுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு, சரக்குகளைச் சூறையாடி, மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன்னுடைய கல்லுகளையும், மரங்களையும், மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள்.
13 И прекинућу јеку песама твојих, и глас китара твојих неће се више чути.
௧௩உன்னுடைய பாட்டுகளின் சத்தத்தை ஓயச்செய்வேன்; உன்னுடைய சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை.
14 И учинићу од тебе го камен, бићеш место где се разастиру мреже, нећеш се више сазидати; јер ја Господ говорих, вели Господ Господ.
௧௪உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற இடமாக இருப்பாய்; இனிக் கட்டப்படமாட்டாய்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15 Овако вели Господ Господ Тиру: Неће ли се задрмати острва од праске падања твог, кад зајаучу рањеници, кад покољ буде у теби?
௧௫தீருவுக்குக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன்னுடைய நடுவில் படுகொலை நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ?
16 Сви ће кнезови морски сићи с престола својих и скинуће са себе плаште и свући са себе везене хаљине, и обући ће се у страх; седеће на земљи, и дрхтаће сваки час и чудити се теби.
௧௬கடலரசர் எல்லோரும் தங்களுடைய சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்களுடைய சால்வைகளைக் கழற்றி, தங்களுடைய சித்திரத்தையலாடைகளை கழற்றிப்போடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, ஒவ்வொரு நிமிடமும் தத்தளித்து, உனக்காக வியப்படைவார்கள்.
17 И нарицаће за тобом и говориће ти: Како пропаде, славни граде! У коме живљаху поморци, који беше јак на мору, ти и становници твоји, који страх задаваху свима који живљаху у теби.
௧௭அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து: கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ, உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ,
18 Сад ће се уздрхтати острва кад паднеш, и смешће се острва по мору од пропасти твоје.
௧௮நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது கடலில் உள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.
19 Јер овако вели Господ Господ: Кад те учиним пустим градом, као што су градови у којима се не живи, кад пустим на те бездану, и велика те вода покрије,
௧௯யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாக நான் உன்மேல் கடலை வரச்செய்யும்போதும்,
20 И кад те свалим с онима који силазе у јаму к старом народу, и наместим те на најдоњим крајевима земље, у пустињи старој с онима који силазе у јаму, да се не живи у теби, тада ћу опет поставити славу у земљи живих.
௨0ஆரம்பகாலத்தின் மக்களின் அருகில் குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னை இறங்கச்செய்வேன்; நீ குடியேறாமலிருக்க ஆரம்பகாலம் முதற்கொண்டு பாழாய் இருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னைத் தங்கியிருக்கச்செய்வேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன்.
21 Учинићу да будеш страхота кад те нестане, и тражиће те и нећеш се наћи до века, говори Господ Господ.
௨௧உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.