< 2 Мојсијева 6 >

1 А Господ рече Мојсију: Сад ћеш видети шта ћу учинити Фараону; јер под руком крепком пустиће их, и истераће их из земље своје под руком крепком.
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; என் வலிமையான கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, அவர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து துரத்திவிடுவான்” என்றார்.
2 Још говори Бог Мојсију и рече му: Ја сам Господ.
மேலும், தேவன் மோசேயை நோக்கி: “நான் யேகோவா,
3 И јавио сам се Авраму, Исаку и Јакову именом Бог Свемогући, а именом својим, Господ, не бих им познат.
சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
4 И учиних завет свој с њима да ћу им дати земљу хананску, земљу у којој беху дошљаци, у којој живљаху као странци.
அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.
5 И чух уздисање синова Израиљевих, које Мисирци држе у ропству, и опоменух се завета свог.
எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன்.
6 Зато кажи синовима Израиљевим: Ја сам Господ, и извешћу вас испод бремена мисирских, и опростићу вас ропства њиховог, и избавићу вас мишицом подигнутом и судовима великим.
ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே யெகோவா, உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
7 И узећу вас да ми будете народ, и ја ћу вам бити Бог, те ћете познати да сам ја Господ Бог ваш, који вас изводим испод бремена мисирских.
உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள்.
8 Пак ћу вас одвести у своју земљу, за коју подигох руку своју заклињући се да ћу је дати Авраму, Исаку и Јакову; и даћу вам је у наследство, ја Господ.
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் யெகோவா என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
9 И Мојсије каза тако синовима Израиљевим; али не послушаше Мојсија од слабости духа свог и од љутог ропства.
இப்படியாக மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னான்; அவர்களோ மனவருத்தத்தாலும் கொடுமையான வேலையாலும் மோசேயின் வார்த்தைகளை கேட்காமற்போனார்கள்.
10 И Господ рече Мојсију говорећи:
௧0பின்பு, யெகோவா மோசேயை நோக்கி:
11 Иди, кажи Фараону, цару мисирском, нека пусти синове Израиљеве из земље своје.
௧௧“நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போய், அவன் தன்னுடைய தேசத்திலிருந்து இஸ்ரவேல் மக்களைப் போகவிடும்படி அவனுடன் பேசு” என்றார்.
12 А Мојсије проговори пред Господом и рече: Ето, синови Израиљеви не послушаше ме, а како ће ме послушати Фараон, кад сам необрезаних усана?
௧௨மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில் நின்று, “இஸ்ரவேலர்களே நான் சொல்வதைக் கேட்கவில்லை; பார்வோன் எப்படி நான் சொல்வதைக் கேட்பான்? நான் திக்கு வாயுள்ளவன்” என்றான்.
13 Али Господ говори Мојсију и Арону, и заповеди им да иду к синовима Израиљевим и к Фараону, да изведу синове Израиљеве из земље мисирске.
௧௩யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி, அவர்களை இஸ்ரவேலர்களிடத்திற்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கும் கட்டளைக் கொடுத்து அனுப்பினார்.
14 Ово су поглавице у домовима отаца својих: синови Рувима, првенца Израиљевог: Енох и Фалуј, Асрон и Хармија; то су породице Рувимове.
௧௪அவர்களுடைய தகப்பன்மார்களுடைய வீட்டார்களின் தலைவர்கள் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்தவனாகிய ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்கள்.
15 А синови Симеунови: Јемуило и Јамин и Аод и Ахин и Сар и Саул, син неке Хананејке; то су породице Симеунове.
௧௫சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.
16 А ово су имена синова Левијевих по породицама њиховим: Гирсон и Кат и Мерарије; а Левије поживе сто и тридесет и седам година.
௧௬வம்சப்பட்டியலின்படி பிறந்த லேவியின் மகன்களுடைய பெயர்கள், கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான்.
17 А ово су синови Гирсонови: Ловеније и Семеј по породицама својим.
௧௭அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள்.
18 А синови Катови: Амрам и Исар и Хеврон и Озило; а Кат поживе сто и тридесет и три године.
௧௮கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருடங்கள் உயிரோடு இருந்தான்.
19 А синови Мераријеви: Молија и Мусија. То су породице Левијеве по лозама својим.
௧௯மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.
20 А Амрам се ожени Јохаведом братучедом својом, и она му роди Арона и Мојсија. А поживе Амрам сто и тридесет и седам година.
௨0அம்ராம் தன்னுடைய அத்தையாகிய யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான்.
21 А синови Исарови беху: Кореј и Нафек и Зехрија.
௨௧இத்சேயாரின் மகன்கள் கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள்.
22 А синови Озилови: Мисаило и Елисафан и Сегрија.
௨௨ஊசியேலின் மகன்கள் மீசாயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள்.
23 А Арон се ожени Јелисаветом кћерју Аминадавовом, сестром Насоновом; и она му роди Надава и Авијуда и Елеазара и Итамара.
௨௩ஆரோன் அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயசரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
24 А синови Корејеви беху: Асир и Елкана и Авијасар. То су породице Корејеве.
௨௪கோராகின் மகன்கள் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியர்களின் வம்சத்தலைவர்கள் இவர்களே.
25 И Елеазар, син Аронов, ожени се једном од кћери Футилових, и она му роди Финеса. То су поглавице између отаца левитских по својим породицама.
௨௫ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியர்களுடைய தகப்பன்மார்களாகிய தலைவர்கள் இவர்களே.
26 То је Арон и Мојсије, којима рече Господ: Изведите синове Израиљеве из земље мисирске у четама њиховим.
௨௬இஸ்ரவேலர்களை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குக் யெகோவால் கட்டளை” பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே.
27 То су који говорише Фараону, цару мисирском, да изведу синове Израиљеве из Мисира; то је Мојсије и то је Арон.
௨௭இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
28 И кад Господ говораше Мојсију у земљи мисирској,
௨௮யெகோவா எகிப்துதேசத்தில் மோசேயோடு பேசின நாளில்;
29 Рече Господ Мојсију говорећи: Ја сам Господ; кажи Фараону цару мисирском све што сам ти казао.
௨௯யெகோவா மோசேயை நோக்கி: “நானே யெகோவா; நான் உன்னோடு சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல்” என்று சொன்னபோது,
30 И Мојсије рече пред Господом: Ево сам необрезаних усана, па како ће ме послушати Фараон?
௩0மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில்: “நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எப்படி என்னுடைய சொல்லைக் கேட்பான் என்றான்.

< 2 Мојсијева 6 >