< 2 Мојсијева 34 >
1 И рече Господ Мојсију: Истеши себи две плоче од камена као што су биле прве, да напишем на тим плочама речи које су биле на првим плочама, које си разбио.
௧யெகோவா மோசேயை நோக்கி: “முந்தினக் கற்பலகைகளை போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.
2 И буди готов за сутра да рано изађеш на гору Синајску, и станеш преда ме на врх горе.
௨அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில்.
3 Али нека нико не иде с тобом, и нико нека се не покаже на свој гори, ни овце ни говеда да не пасу близу горе.
௩உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது” என்றார்.
4 И истеса Мојсије две плоче од камена као што су биле прве, и уставши рано изађе на гору Синајску, као што му заповеди Господ, и узе у руку своју две плоче камене.
௪அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலையில் எழுந்து, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே அந்த இரண்டு கற்பலகைகளையும் தன்னுடைய கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்.
5 А Господ сиђе у облаку, и стаде онде с њим, и повика по имену: Господ.
௫யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார்.
6 Јер пролазећи Господ испред њега викаше: Господ, Господ, Бог милостив, жалостив, спор на гнев и обилан милосрђем и истином.
௬யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன்.
7 Који чува милост хиљадама, прашта безакоња и неправде и грехе, који не правда кривога, и походи грехе отачке на синовима и на унуцима до трећег и четвртог колена.
௭ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார்.
8 А Мојсије брже сави главу до земље и поклони се,
௮மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு:
9 И рече: Ако сам нашао милост пред Тобом, Господе, нека иде Господ посред нас, јер је народ тврдоврат: и опрости нам безакоње наше и грех наш, и узми нас за наследство.
௯“ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த மக்கள் பிடிவாதமுள்ளவர்கள்; நீரோ, எங்களுடைய அக்கிரமத்தையும் எங்களுடைய பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
10 А Он рече: Ево постављам завет; пред целим народом твојим учинићу чудеса, која нису учињена нигде на земљи ни у коме народу, и видећете дело Господње сав народ, међу којим си, јер ће бити страшно шта ћу ја учинити с тобом.
௧0அதற்கு அவர்: “இதோ, நான் ஒரு உடன்படிக்கை செய்கிறேன்; பூமியெங்கும் எந்த தேசங்களிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன்னுடைய மக்கள் எல்லோருக்கும் முன்பாகவும் செய்வேன்; உன்னோடு இருக்கிற மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய செயல்களைக் காண்பார்கள்; உன்னோடு இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாக இருக்கும்.
11 Држи шта ти данас заповедам; ево, ја ћу изагнати испред тебе Амореје и Хананеје и Хетеје и Ферезеје и Јевеје и Јевусеје.
௧௧இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும், ஏவியர்களையும், எபூசியர்களையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன்.
12 Чувај се да не хваташ вере с онима који живе у земљи у коју ћеш доћи, да ти не буду замка усред тебе.
௧௨நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும்.
13 Него олтаре њихове оборите, и ликове њихове изломите, и гајеве њихове исеците.
௧௩அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.
14 Јер не ваља да се клањаш другом Богу: јер се Господ зове ревнитељ, Бог је ревнитељ.
௧௪யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
15 Немој хватати вере с онима који живе у оној земљи, да не би чинећи прељубу за боговима својим и приносећи жртву боговима својим позвали те, и ти јео жртве њихове.
௧௫அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்;
16 И да не би кћерима њиховим женио синове своје, и да не би кћери њихове чинећи прељубу за боговима својим учиниле да синови твоји чине прељубу за боговима њиховим.
௧௬அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள்.
17 Ливене богове не гради себи.
௧௭வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.
18 Празник пресних хлебова држи; седам дана једи пресне хлебове, као што сам ти заповедио, на време, месеца Авива, јер си тог месеца изашао из Мисира.
௧௮புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுவீர்கள்; ஆபீப் மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே.
19 Све што отвара материцу моје је, и свако мушко у стоци твојој што отвара материцу, говече или ситна стока.
௧௯கர்ப்பம்திறந்து பிறக்கிற அனைத்தும், உன்னுடைய ஆடுமாடுகளின் முதற்பிறப்பான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.
20 Али магаре које отвори материцу откупи јагњетом или јаретом; ако ли га не би откупио, сломи му врат; и сваког првенца између синова својих откупи; и да се нико не покаже празан преда мном.
௨0கழுதையின் முதற்பிறப்பை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாமல் இருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன்னுடைய பிள்ளைகளில் முதலில் பிறந்தவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடு என்னுடைய சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது.
21 Шест дана ради, а у седми дан почини, и од орања и од жетве почини.
௨௧ஆறுநாட்கள் வேலைசெய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திரு.
22 Празнуј празник седмица, првина жетве пшеничне, и празник бербе на свршетку године.
௨௨கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருடமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.
23 Три пута у години да се свако мушко између вас покаже пред Господом Богом Израиљевим.
௨௩வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய ஆண்மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும்.
24 Јер ћу изагнати народе испред тебе, и међе твоје раширићу, и нико неће пожелети земље твоје, кад станеш долазити да се покажеш пред Господом Богом својим три пута у години.
௨௪நான் தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, உங்களுடைய எல்லைகளை விரிவாக்குவேன்; வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதிக்கு முன்பாக தோன்றும்போது ஒருவரும் உங்களுடைய தேசத்தின் மீது படையெடுக்க ஆசைப்படுவதில்லை.
25 Немој приносити крв од жртве моје уз хлебове киселе, и да не преноћи до јутра жртва празника пасхе.
௨௫எனக்கு செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை அதிகாலைவரை வைக்கவும் வேண்டாம்.
26 Првине од првог рода земље своје донеси у кућу Господа Бога свог; немој кувати јаре у млеку мајке његове.
௨௬உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.
27 И рече Господ Мојсију: Напиши себи те речи; јер по тим речима учиних завет с тобом и с Израиљем.
௨௭பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படி உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை செய்தேன்” என்றார்.
28 И Мојсије оста онде код Господа четрдесет дана и четрдесет ноћи, хлеба не једући ни воде пијући; и написа Господ на плоче речи завета, десет речи.
௨௮அங்கே அவன் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் யெகோவாவோடு இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
29 И кад Мојсије силажаше с горе Синајске, и држаше у руци две плоче сведочанства силазећи с горе, не знаше да му кожа на лицу поста светла докле говораше с њим.
௨௯மோசே உடன்படிக்கையின் கட்டளைப் பலகைகள் இரண்டையும் தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடு அவர் பேசினதாலே தன்னுடைய முகம் பிரகாசமாக இருப்பதை அவன் அறியாமல் இருந்தான்.
30 И виде Арон и сви синови Израиљеви Мојсија, а то му се светли кожа на лицу, и не смеше приступити к њему.
௩0ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, அவன் அருகில் வரப்பயந்தார்கள்.
31 Али их зовну Мојсије, и вратише се к њему Арон и сви главари у збору, и говори с њима Мојсије.
௩௧மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள தலைவர்கள் அனைவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களுடன் பேசினான்.
32 Потом приступише сви синови Израиљеви, и заповеди им све што му каза Господ на гори Синајској.
௩௨பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவனிடம் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் யெகோவா தன்னோடு பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
33 А кад им Мојсије изговори, застре лице своје покривалом.
௩௩மோசே அவர்களுடன் பேசி முடியும்வரை, தன்னுடைய முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான்.
34 Али кад Мојсије долажаше пред Господа да с Њим говори, скидаше покривало докле не би изашао; а изашавши казиваше синовима Израиљевим шта му се заповедаше.
௩௪மோசே யெகோவாவுடைய சந்நிதியில் அவரோடு பேசும்படி உள்ளே நுழைந்ததுமுதல் வெளியே புறப்படும்வரை முக்காடு போடாமல் இருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேலர்களுடன் சொல்லும்போது,
35 Тада виђаху синови Израиљеви лице Мојсијево, где се светли кожа на лицу његовом, те Мојсије опет застираше покривалом лице своје докле не би опет ушао да говори с Њим.
௩௫இஸ்ரவேலர்கள் அவனுடைய முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடு பேசும்படி உள்ளே நுழையும்வரை, முக்காட்டைத் திரும்பத் தன்னுடைய முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.