< 1 Књига дневника 3 >
1 А ово су синови Давидови који му се родише у Хеврону: првенац Амнон од Ахиноаме Језраељанке, други Данило од Авигеје Кармилке,
௧தாவீதுக்கு எப்ரோனில் பிறந்த மகன்கள்: யெஸ்ரெயேல் ஊரைச்சேர்ந்த அகினோவாமிடம் பிறந்த அம்னோன் முதலில் பிறந்தவன்; கர்மேலின் ஊரைச்சேர்ந்த அபிகாயிலிடம் பிறந்த கீலேயாப் இரண்டாம் மகன்.
2 Трећи Авесалом, син Махе кћери Талмаја цара гесурског, четврти Адонија, син Агитин,
௨கெசூரின் ராஜாவாகிய தல்மாயின் மகள் மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் மகன்; ஆகீத் பெற்ற அதோனியா நான்காம் மகன்.
3 Пети Сефатија од Авитале, шести Итрам од Егле, жене његове.
௩அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் மகன்; அவனுடைய மனைவியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் மகன்.
4 Шести му се роди у Хеврону, где царова седам година и шест месеци, а тридесет и три царова у Јерусалиму.
௪இந்த ஆறு மகன்கள் அவனுக்கு எப்ரோனில் பிறந்தார்கள்; அங்கே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆட்சிசெய்தான்; எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான்.
5 А ови му се родише у Јерусалиму: Самаја и Совав и Натан и Соломун, четири, од Витсавеје кћери Амилове.
௫எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும்,
6 И Јевар и Елисама и Елифалет,
௬இப்பார், எலிஷாமா, எலிப்பெலேத்,
7 И Нога и Нефег и Јафија,
௭நோகா, நெப்பேக், யப்பியா,
8 И Елисама и Елијада и Елифелет, девет,
௮எலிஷாமா, எலியாதா, எலிப்பெலேத் என்னும் ஒன்பதுபேர்களுமே.
9 Све синови Давидови осим синова иноча његових и осим Тамаре, сестре његове.
௯மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள்.
10 А син Соломунов беше Ровоам, а његов син Авија, а његов син Аса, а његов син Јосафат,
௧0சாலொமோனின் மகன் ரெகொபெயாம்; இவனுடைய மகன் அபியா; இவனுடைய மகன் ஆசா; இவனுடைய மகன் யோசபாத்.
11 А његов син Јорам, а његов син Охозија, а његов син Јоас.
௧௧இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ்.
12 А његов син Амасија, а његов син Азарија, а његов син Јотам,
௧௨இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம்.
13 А његов син Ахаз, а његов син Језекија, а његов син Манасија,
௧௩இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே.
14 А његов син Амон, а његов син Јосија.
௧௪இவனுடைய மகன் ஆமோன்; இவனுடைய மகன் யோசியா.
15 А синови Јосијини: првенац Јоанан, други Јоаким, трећи Седекија, четврти Салум.
௧௫யோசியாவின் மகன்கள், முதலில் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் மகனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் மகனும், சல்லூம் என்னும் நான்காம் மகனுமே.
16 А синови Јоакимови: Јехонија син му, и његов син Седекија.
௧௬யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
17 А синови Јехоније сужња: Салатило син му.
௧௭கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல்,
18 А његови синови Малхирам и Федаја и Сенасар, Јекамија, Осама и Недавија.
௧௮மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
19 А синови Федајини: Зоровавељ и Симеј; а синови Зоровавељеви: Месулам и Ананија и сестра им Селомета.
௧௯பெதாயாவின் மகன்கள் செருபாபேல், சீமேயி என்பவர்கள்; செருபாபேலின் மகன்கள் மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
20 А синови Месуламови: Асува и Оило и Варахија и Асадија и Јусавесед, пет.
௨0அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேர்களுமே.
21 А синови Ананијини: Фелатија и Јесаја, синови Рефајини, синови Арнанови, синови Овадијини, синови Сеханијини.
௨௧அனனியாவின் மகன்கள், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய மகன் ரெபாயா; இவனுடைய மகன் அர்னான்; இவனுடைய மகன் ஒபதியா; இவனுடைய மகன் செக்கனியா.
22 А синови Сеханијини: Семаја, и синови Семајини: Хатуш и Игеал и Варија и Неарија и Сафат, шест.
௨௨செக்கனியாவின் மகன்கள் செமாயா முதலானவர்கள்; செமாயாவின் மகன்கள் அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.
23 А синови Неаријини: Елиоинај и Језекија и Азрикам, три.
௨௩நெயாரியாவின் மகன்கள் எலியோனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூன்றுபேர்.
24 А синови Елионајеви: Одаја и Елијасив и Фелаја и Акув и Јоанан и Далаја и Анан, седам.
௨௪எலியோனாவின் ஏழு மகன்கள் ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்பவர்கள்.