< Zaharija 12 >

1 Breme rijeèi Gospodnje za Izrailja. Govori Gospod, koji je razapeo nebesa i osnovao zemlju, i stvorio èovjeku duh koji je u njemu:
இஸ்ரவேலைக்குறித்துக் யெகோவா சொன்ன வார்த்தையின் செய்தி; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனிதனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற யெகோவா சொல்லுகிறதாவது:
2 Evo, ja æu uèiniti Jerusalim èašom za opijanje svijem narodima unaokolo, koji æe opsjesti Jerusalim ratujuæi na Judu.
இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா மக்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமிற்கு விரோதமாகப் போடப்படும் முற்றுகையிலே யூதாவும் அப்படியேயாகும்.
3 I u taj æu dan uèiniti Jerusalim teškim kamenom svijem narodima; koji ga god htjedbudu dignuti, satræe se, ako bi se i svi narodi zemaljski sabrali na nj.
அந்நாளிலே நான் எருசலேமை சகல மக்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதை அசைக்கிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள தேசங்களெல்லாம் அதற்கு விரோதமாகக் கூடிக்கொள்வார்கள்.
4 U taj æu dan, govori Gospod, uèiniti da svi konji budu plašljivi i svi konjanici bezumni; i otvoriæu oèi svoje na dom Judin, i oslijepiæu sve konje narodima.
அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரச்செய்து, யூதா வம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, மக்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
5 Te æe govoriti glavari Judini u srcu svom: jaki su mi stanovnici Jerusalimski Gospodom nad vojskama, Bogom svojim.
எருசலேமின் மக்கள், சேனைகளின் யெகோவாகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள்.
6 U onaj æu dan uèiniti da glavari Judini budu kao ognjište u drvima i kao luè zapaljen u snopovima, te æe proždrijeti i nadesno i nalijevo sve narode unaokolo, a Jerusalim æe još ostati na svom mjestu, u Jerusalimu.
அந்நாளிலே யூதாவின் தலைவர்களை விறகுகளுக்குள்ளே எரிகிற நெருப்பு அடுப்பிற்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீப்பந்தத்திற்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா மக்களையும் அழிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் இடமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.
7 I Gospod æe saèuvati šatore Judine najprije, da se ne diže nad Judom slava doma Davidova i slava stanovnika Jerusalimskih.
தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிமக்களுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாமலிருக்க, யெகோவா யூதாவின் கூடாரங்களை முதலாவது காப்பாற்றுவார்.
8 U onaj æe dan Gospod zaklanjati stanovnike Jerusalimske, i najslabiji meðu njima biæe u taj dan kao David, i dom æe Davidov biti kao Bog, kao anðeo Gospodnji pred njima.
அந்நாளிலே யெகோவா எருசலேமின் மக்களைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார்கள் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலவும் யெகோவாவுடைய தூதனைப்போலவும் இருப்பார்கள்.
9 I u taj dan tražiæu da istrijebim sve narode koji doðu na Jerusalim;
அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாக வருகிற எல்லா மக்களையும் அழிக்கப் பார்ப்பேன்.
10 I izliæu na dom Davidov i na stanovnike Jerusalimske duh milosti i molitava, i pogledaæe na mene kojega probodoše; i plakaæe za njim kao za jedincem, i tužiæe za njim kao za prvencem.
௧0நான் தாவீது குடும்பத்தார்கள் மேலும் எருசலேம் குடிமக்கள் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைமகனுக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
11 U ono æe vrijeme biti tužnjava velika u Jerusalimu kao tužnjava u Adadrimonu u polju Megidonskom.
௧௧அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாக இருக்கும்.
12 I tužiæe zemlja, svaka porodica napose; porodica doma Davidova napose, i žene njihove napose; porodica doma Natanova napose, i žene njihove napose;
௧௨தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், நாத்தான் குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும்,
13 Porodica doma Levijeva napose, i žene njihove napose; porodica Semejeva napose, i žene njihove napose;
௧௩லேவி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், சீமேயி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும்,
14 Sve ostale porodice, svaka napose, i žene njihove napose.
௧௪மீதமுள்ள எல்லா குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனிதர்கள் தனித்தனியாகவும் அவர்களுடைய பெண்கள் தனித்தனியாகவும் புலம்புவார்கள்.

< Zaharija 12 >