< Psalmi 70 >
1 Bože, pohitaj da me izbaviš, Gospode, da mi pomožeš!
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
2 Nek se postide i posrame koji traže dušu moju! Nek ustupe natrag, i osramote se koji mi zlo žele!
என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; எனது அழிவை விரும்புகிற யாவரும் அவமானமடைந்து திரும்புவார்களாக.
3 Sa stidom nek se vrate natrag koji mi govore: ha! ha!
என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக.
4 Nek se tješe i vesele tobom koji traže tebe, i koji ljube spasenje tvoje, neka jednako govore: velik je Bog!
ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; உமது இரட்சிப்பை விரும்புவோர், “இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.
5 A ja sam ništ i ubog, Bože, pohitaj k meni! ti si pomoæ moja i izbavitelj moj, Gospode, ne èasi!
நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். நீரே என் துணை, நீரே என் மீட்பர்; யெகோவாவே, தாமதியாதேயும்.