< Psalmi 55 >

1 Usliši, Bože, molitvu moju, i nemoj se sakriti od moljenja mojega.
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும்.
2 Pazi, i saslušaj me; cvilim u jadu svom i uzdišem
எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன்.
3 Od vike neprijateljske i od dosade bezbožnièke; jer dižu na me zlo, i u gnjevu gone me.
அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.
4 Srce je moje uzdrktalo u meni, i strah smrtni popade me;
என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது; மரணபயம் என்மேல் விழுந்தது.
5 Strah i trepet doðe na me, i groza poduze me.
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.
6 I rekoh: ko bi mi dao krila golubinja? ja bih odleteo i poèinuo;
அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
7 Daleko bih pobjegao, i nastanio se u pustinji.
நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)
8 Pohitao bih da uteèem od vihora i od bure.
பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.
9 Porazi, Gospode, i razdijeli jezike njihove, jer vidim nasilje i svaðu u gradu;
ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
10 Danju i noæu to hodi po zidovima njegovijem; zloèinstvo je i muka posred njega.
௧0அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
11 Usred njega je pogibao, s ulice njegove ne odlazi prijevara i lukavstvo.
௧௧கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.
12 Jer ne ruži me neprijatelj moj, to bih podnio; ne ustaje na me javni nenavidnik, od njega bih se sakrio.
௧௨என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாகப் பெருமை பாராட்டினவன் என்னுடைய பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
13 Nego ti koji si mi bio to što ja sam, drug moj i znanac moj.
௧௩எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன்.
14 S kojim mi bješe radost dijeliti tajnu, i u dom Božji hodih kroz sabor narodni.
௧௪நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து, கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்.
15 Neka ih ugrabi smrt, neka živi siðu u pakao, jer je zloèinstvo u stanu njihovu i u njima. (Sheol h7585)
௧௫மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது. (Sheol h7585)
16 Ja Boga prizivljem, i Gospod æe me spasti.
௧௬நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; யெகோவா என்னை காப்பாற்றுவார்.
17 Veèerom i jutrom i u podne tužim i uzdišem, i èuæe glas moj;
௧௭காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்; அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார்.
18 Uèiniæe, te æe duša moja biti mirna od onijeh koji napadaju na me, jer ih mnogo imam.
௧௮திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி, என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
19 Da usliši, i ukroti ih Bog, koji živi od vijeka; jer se ne mijenjaju i ne boje se Boga.
௧௯ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)
20 Dižu ruke svoje na one koji su s njima u miru, i raskidaju svoju družbu.
௨0அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத் தன்னுடைய கையை நீட்டி தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான்.
21 Usta su im meka kao maslo, a na srcu im je rat. Rijeèi su im blaže od ulja, ali su goli maèevi.
௨௧அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவனுடைய இருதயமோ யுத்தம்; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.
22 Stavi na Gospoda breme svoje, i on æe te potkrijepiti. Neæe dati dovijeka pravedniku da posrne.
௨௨யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார்.
23 Ti æeš ih, Bože, svaliti u jamu pogibli; krvopije i lukavi neæe sastaviti polovine dana svojih. A ja se u tebe uzdam.
௨௩தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்; இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

< Psalmi 55 >