< Psalmi 140 >
1 Izbavi me, Gospode, od èovjeka zloga, saèuvaj me od nasilnika,
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்; வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
2 Koji pomišljaju zlo u srcu i svaki dan podižu rat;
அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி, நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள்.
3 Oštre jezik svoj kao zmija, jed je aspidin u ustima njihovijem.
அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.
4 Saèuvaj me, Bože, od ruku bezbožnièkih, od nasilnika sahrani me, koji misle da potkinu noge moje.
யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
5 Oholi mi namjestiše zamke i prugla, metnuše mi mrežu na put, preðu razapeše mi.
பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து, என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள்.
6 Rekoh Gospodu: ti si Bog moj, usliši, Gospode, glas moljenja mojega.
யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்; யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
7 Gospode, Gospode, krjepki spasitelju moj, zakloni glavu moju u dan ratni!
ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே, நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும்.
8 Ne daj, Gospode, bezbožniku što želi, ne daj mu da dokuèi što je naumio, da se ne uznose.
யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்; அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.
9 Otrov onijeh što su oko mene, pogibao usta njihovijeh neka se obrati na njih.
என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்; அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும்.
10 Neka padne na njih živo ugljevlje; neka ih on baci u oganj, u propasti, da ne ustanu.
எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்; அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும், சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும்.
11 Èovjek jezièan neæe se utvrditi na zemlji, nepravednoga æe zloæa uvaliti u pogibao.
அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும்.
12 Znam da æe Gospod pokazati pravdu nevoljnome i pravicu ubogima.
யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும், எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன்.
13 Da! pravedni æe slaviti ime tvoje, pravi æe ostati pred licem tvojim.
நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.