< Isaija 16 >
1 Šaljite jaganjce gospodaru zemaljskom, od Sele do pustinje, ka gori kæeri Sionske.
௧தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணம் முதல் வனாந்திரம்வரை சேர்த்து மகளாகிய சீயோனின் மலைக்கு அனுப்புங்கள்.
2 Jer æe biti kæeri Moavske na brodovima Arnonskim kao ptica koja luta, otjerana s gnijezda.
௨இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மகள்களாகிய மோவாப் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.
3 Uèini vijeæe, narode, naèini sjen u podne kao noæ, zakloni izagnane, nemoj izdati bjegunaca.
௩நீ ஆலோசனைசெய்து, நியாயம் செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடுக்காதே.
4 Neka kod tebe borave izgnani moji, Moave; budi im zaklon od pustošnika; jer æe nestati nasilnika, prestaæe pustošenje, istrijebiæe se sa zemlje koji gaze druge.
௪மோவாபே, துரத்திவிடப்பட்ட என் மக்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; அழிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; அழிவு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இல்லாதபடி அழிந்துபோவார்கள்.
5 I utvrdiæe se prijesto milošæu, i na njemu æe sjedjeti jednako u šatoru Davidovu koji æe suditi i tražiti što je pravo i biti brz da èini pravdu.
௫கிருபையினாலே சிங்காசனம் நிலைப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாக நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாக உண்மையோடே வீற்றிருப்பார்.
6 Èusmo za oholost Moava vrlo ponositoga, za ponos njegov i oholost i obijest njegovu; laži njegove neæe biti tvrde.
௬மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் கோபத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மிகவும் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
7 Zato æe ridati Moavac nad Moavcem, svi æe ridati; nad temeljima Kir-Aresetskim uzdisaæete, jer su razvaljeni.
௭ஆகையால், மோவாபியர்கள் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லோரும் ஒருமித்து அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் மக்களுக்காக பெருமூச்சு விடுவார்கள்.
8 I polja Esevonska posušiše se i èokot Sivamski; gospoda narodna potrše krasne loze njegove, koje dosezahu do Jazira i vijahu se po pustinji; odvode njegove pružahu se i prelažahu preko mora.
௮எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போனது; சீப்மா ஊர் திராட்சைச்செடியின் நல்ல கொடிகளைத் தேசங்களின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்வரை சென்று வனாந்திரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கு அடுத்த கரைவரையில் இருந்தது.
9 Zato æu plakati plaèem Jazirskim za èokotom Sivamskim; zaljevaæu te suzama svojim, Esevone i Elealo, jer pjesma o ljetini tvojoj i o žetvi tvojoj pade.
௯ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சீப்மா ஊர் திராட்சைச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலெயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சைப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோனது.
10 I nesta radosti i veselja s polja rodnoga, u vinogradima se ne pjeva ni podvikuje, vina u kacama ne gazi gazilac; uèinih kraj pjesmama.
௧0பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் இல்லாமல் போனது; திராட்சைத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயச்செய்தேன்.
11 Zato utroba moja jeèi kao gusle za Moavom, i srce moje za Kir-Eresom.
௧௧ஆகையால் மோவாபுக்காக என் குடல்களும், கிராரேசினுக்காக என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கிறது.
12 I kad se vidi da se umorio Moav na visini svojoj, uæi æe u svetinju svoju da se pomoli; ali ništa neæe svršiti.
௧௨மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த இடத்திலே நுழைவான்; ஆனாலும் பயனடையமாட்டான்.
13 Ovo je rijeè što reèe Gospod za Moava davno.
௧௩மோவாபைக்குறித்து அக்காலத்திலே யெகோவா சொன்ன வார்த்தை இதுவே.
14 A sada veli Gospod govoreæi: do tri godine, kao što su godine najamnièke, ološaæe slava Moavova sa svijem mnoštvom njegovijem, i što ostane biæe vrlo malo i nejako.
௧௪ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான மூன்று வருடங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் அதிக மக்கள் கூட்டமும் சீரழிந்துபோகும்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று யெகோவா இப்பொழுது சொல்கிறார்.