< Postanak 47 >

1 I otišav Josif javi Faraonu i reèe: otac moj i braæa moja s ovcama svojim i s govedima svojim i sa svijem što imaju doðoše iz zemlje Hananske, i evo ih u zemlji Gesemskoj.
யோசேப்பு பார்வோனிடம் சென்று: “என்னுடைய தகப்பனும், சகோதரர்களும், தங்களுடைய ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடும்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள்” என்று சொல்லி;
2 I uzev nekolicinu braæe svoje, pet ljudi, izvede ih pred Faraona.
தன் சகோதரர்களில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.
3 A Faraon reèe braæi njegovoj: kakvu radnju radite? A oni rekoše Faraonu: pastiri su sluge tvoje, i mi i naši stari.
பார்வோன் அவனுடைய சகோதரர்களை நோக்கி: “உங்களுடைய தொழில் என்ன” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,
4 Još rekoše Faraonu: doðosmo da živimo kao došljaci u ovoj zemlji, jer nema paše za stoku tvojih sluga, jer je velika glad u zemlji Hananskoj; a sada dopusti da žive u zemlji Gesemskoj sluge tvoje.
கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாததால், இந்த தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்க தயவுசெய்யவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள்.
5 A Faraon reèe Josifu: otac tvoj i braæa tvoja doðoše k tebi;
அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: “உன்னுடைய தகப்பனும், சகோதரர்களும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே.
6 U tvojoj je vlasti zemlja Misirska; na najboljem mjestu u ovoj zemlji naseli oca svojega i braæu svoju, neka žive u zemlji Gesemskoj; i ako koje znaš izmeðu njih da su vrijedni ljudi, postavi ih nad mojom stokom.
எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக ஏற்படுத்தலாம் என்றான்.
7 Poslije dovede Josif i Jakova oca svojega i izvede ga pred Faraona, i blagoslovi Jakov Faraona.
பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
8 A Faraon reèe Jakovu: koliko ti ima godina?
பார்வோன் யாக்கோபை நோக்கி: “உமக்கு வயது என்ன” என்று கேட்டான்.
9 Odgovori Jakov Faraonu: meni ima sto i trideset godina, kako sam došljak. Malo je dana života mojega i zli su bili, niti stižu vijeka otaca mojih, koliko su oni živjeli.
அதற்கு யாக்கோபு: “நான் பரதேசியாக வாழ்ந்த நாட்கள் 130 வருடங்கள்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் வேதனை நிறைந்ததுமாக இருக்கிறது; அவைகள் பரதேசிகளாக வாழ்ந்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை” என்று பார்வோனுடனே சொன்னான்.
10 I blagosloviv Jakov Faraona otide od Faraona.
௧0பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போனான்.
11 A Josif naseli oca svojega i braæu svoju, i dade im dobro u zemlji Misirskoj na najboljem mjestu te zemlje, u zemlji Rameskoj, kao što zapovjedi Faraon.
௧௧பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டைச் சொந்தமாகக் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.
12 I hranjaše Josif hljebom oca svojega i braæu svoju i sav dom oca svojega do najmanjega.
௧௨யோசேப்பு தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாக ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.
13 Ali nesta hljeba u svoj zemlji, jer glad bijaše vrlo velika, i uzmuèi se zemlja Misirska i zemlja Hananska od gladi.
௧௩பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடைக்காமல்போனது; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே நலிந்துபோனது.
14 I pokupi Josif sve novce što se nalažahu po zemlji Misirskoj i po zemlji Hananskoj za žito koje kupovahu, i slagaše novce u kuæu Faraonovu.
௧௪யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் வாங்கியவர்களிடத்திலிருந்து பெற்று, அதைப் பார்வோன் அரண்மனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
15 A kad nesta novaca u zemlji Misirskoj i u zemlji Hananskoj, stadoše svi Misirci dolaziti k Josifu govoreæi: daj nam hljeba; zašto da mremo kod tebe, što novaca nema?
௧௫எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர்கள் எல்லோரும் யோசேப்பினிடத்தில் வந்து: “எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமக்கு முன்பாகச் சாகவேண்டுமோ” என்றார்கள்.
16 A Josif im govoraše: dajte stoku svoju, pa æu vam dati hljeba za stoku, kad je nestalo novaca.
௧௬அதற்கு யோசேப்பு: “உங்களிடத்தில் பணம் இல்லாமல்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன்” என்றான்.
17 I dovoðahu stoku svoju k Josifu, i Josif im davaše hljeba za konje i za ovce i za goveda i za magarce. Tako ih prehrani onu godinu hljebom za svu stoku njihovu.
௧௭அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருடம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.
18 A kad proðe ona godina, stadoše opet dolaziti k njemu druge godine govoreæi: ne možemo tajiti od gospodara svojega, ali je novaca nestalo, i stoka koju imasmo u našega je gospodara; i nije ostalo ništa da donesemo gospodaru svojemu osim tjelesa naših i njiva naših.
௧௮அந்த வருடம் முடிந்தபின், அடுத்தவருடத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: “பணமும் செலவழிந்துபோனது; எங்களுடைய ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்களுடைய சரீரமும், நிலமுமே அல்லாமல், எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.
19 Zašto da mremo na tvoje oèi? evo i nas i naših njiva; kupi nas i njive naše za hljeb, da s njivama svojim budemo robovi Faraonu, i daj žita da ostanemo živi i ne pomremo i da zemlja ne opusti.
௧௯நாங்களும் எங்களுடைய நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்களுடைய நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்களுடைய நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாகப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும்” என்றார்கள்.
20 Tako pokupova Josif Faraonu sve njive u Misiru, jer Misirci prodavahu svaki svoju njivu, kad glad uze jako mah meðu njima. I zemlja posta Faraonova.
௨0அப்படியே எகிப்தியர்கள் தங்களுக்குப் பஞ்சம் அதிகமானதால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் எல்லாவற்றையும் பார்வோனுக்காக வாங்கினான்; இந்த விதமாக அந்த பூமி பார்வோனுடையதாயிற்று.
21 A narod preseli u gradove od jednoga kraja Misira do drugoga.
௨௧மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள மக்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகச்செய்தான்.
22 Samo ne kupi sveštenièkih njiva; jer Faraon odredi dio sveštenicima, i hranjahu se od svojega dijela, koji im dade Faraon, te ne prodaše svojih njiva.
௨௨ஆசாரியர்களுடைய நிலத்தை மாத்திரம் அவன் வாங்கவில்லை; அது பார்வோனாலே ஆசாரியர்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் வாழ்க்கை நடத்திவந்ததாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.
23 A Josif reèe narodu: evo kupih danas vas i njive vaše Faraonu; evo vam sjemena, pa zasijte njive.
௨௩பின்னும் யோசேப்பு மக்களை நோக்கி: “இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.
24 A što bude roda, daæete peto Faraonu, a èetiri dijela neka budu vama za sjeme po njivama i za hranu vama i onijema koji su po kuæama vašim i za hranu djeci vašoj.
௨௪விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நான்கு பங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாகவும் இருக்கட்டும்” என்றான்.
25 A oni rekoše: ti si nam život saèuvao; neka naðemo milost pred gospodarem svojim da budemo robovi Faraonu.
௨௫அப்பொழுது அவர்கள்: “நீர் எங்களுடைய உயிரைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம்” என்றார்கள்.
26 I postavi Josif zakon do današnjega dana za njive Misirske da se daje peto Faraonu; samo njive sveštenièke ne postaše Faraonove.
௨௬ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு விதித்த கட்டளையின்படி எகிப்து தேசத்திலே இந்த நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமலிருந்தது.
27 A djeca Izrailjeva življahu u zemlji Misirskoj u kraju Gesemskom, i držahu ga, i narodiše se i namnožiše se veoma.
௨௭இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களை உரிமைபாராட்டி, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.
28 I Jakov poživje u zemlji Misirskoj sedamnaest godina; a svega bi Jakovu sto i èetrdeset i sedam godina.
௨௮யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருடங்கள் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருடங்கள்.
29 A kad se približi vrijeme Izrailju da umre, dozva sina svojega Josifa, i reèe mu: ako sam našao milost pred tobom, metni ruku svoju pod stegno moje, i uèini mi milost i vjeru, nemoj me pogrepsti u Misiru;
௨௯இஸ்ரவேல் மரணமடையும் காலம் நெருங்கியது. அப்பொழுது அவன் தன் மகனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: “என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து எனக்கு நம்பிக்கையும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் செய்யாதிருப்பாயாக.
30 Nego neka ležim kod otaca svojih; i ti me odnesi iz Misira i pogrebi me u grobu njihovu. A on reèe: uèiniæu kako si kazao.
௩0நான் என் பிதாக்களோடு படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்செய்திருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்செய்” என்றான். அதற்கு அவன்: “உமது சொற்படி செய்வேன்” என்றான்.
31 I reèe mu Jakov: zakuni mi se. I on mu se zakle. I pokloni se Izrailj preko uzglavlja od odra svojega.
௩௧அப்பொழுது அவன்: “எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கை கோலில் சாய்ந்து தொழுதுகொண்டான்.

< Postanak 47 >