< 2 Samuelova 20 >

1 A ondje se desi nevaljao èovjek, po imenu Seva sin Vihrijev, od Venijamina. On zatrubi u trubu i reèe: mi nemamo dijela s Davidom, ni našljedstva sa sinom Jesejevijem; svak u svoj šator, o Izrailju!
அப்பொழுது பென்யமீன் மனிதனான பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள பிரச்சினைக்குரிய மனிதன் ஒருவன் தற்செயலாக அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்கு தாவீதிடம் பங்கும் இல்லை, ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலர்களே, நீங்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்குப் போய்விடுங்கள் என்றான்.
2 Tako svi Izrailjci otstupiše od Davida i otidoše za Sevom sinom Vihrijevim; ljudi pak od Jude držaše se cara svojega i otpratiše ga od Jordana do Jerusalima.
அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் தாவீதைவிட்டுப் பிரிந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம் வரையுள்ள யூதா மனிதர்கள் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.
3 A kad car David doðe u kuæu svoju u Jerusalim, uze car deset žena inoèa, koje bješe ostavio da mu èuvaju kuæu, i metnu ih u zatvor, gdje ih hranjaše ali ne lijegaše s njima, nego ostaše zatvorene do smrti svoje i življahu kao udovice.
தாவீது எருசலேமிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது, வீட்டைக்காக்க ராஜா வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வரவழைத்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்துப் பராமரித்தான்; அதன்பின்பு அவர்களிடம் அவன் உறவு வைத்துக்கொள்ளவில்லை; அப்படியே அவர்கள் மரணமடைகிற நாட்கள்வரை அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் விதவைகளைப்போல இருந்தார்கள்.
4 Potom reèe car Amasi: sazovi mi ljude od Jude do tri dana, i naði se i ti ovdje.
பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனிதர்களை மூன்று நாட்களுக்குள்ளே என்னிடம் வரவழைத்து, நீயும் வந்து இருக்கவேண்டும் என்றான்.
5 I otide Amasa da sazove narod Judin; ali se zabavi preko roka koji mu bješe odreðen.
அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பதற்காக போய், தனக்குக் குறித்த காலத்தில் வராமல் தாமதித்தான்.
6 A David reèe Avisaju: sad æe nam Seva sin Vihrijev èiniti gore nego Avesalom. Nego uzmi sluge gospodara svojega, i goni ga da ne naðe za se koji tvrd grad i ne umakne nam iz oèiju.
அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைவிட பிக்கிரியின் மகனான சேபா, இப்பொழுது நமக்கு தீங்கு செய்வான்; அவன் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடி, நீ உன் எஜமானுடைய வீரர்களை அழைத்துக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.
7 Tako izidoše za njim ljudi Joavovi, i Hereteji i Feleteji i svi junaci, izidoše iz Jerusalima da gone Sevu sina Vihrijeva.
அப்படியே யோவாபின் மனிதர்களும், கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும், எல்லா வலிமையான வீரர்களும் அவனுக்குப்பின்பாகப் புறப்பட்டு, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்வதற்கு எருசலேமிலிருந்து போனார்கள்.
8 I kad bijahu kod velikoga kamena u Gavaonu, srete ih Amasa. A Joav bijaše opasan preko haljine koju imaše na sebi, i ozgo bijaše pripasao maè uz bedricu u koricama. I kad poðe, maè mu ispade.
அவர்கள் கிபியோனின் பக்கத்தில் இருக்கிற பெரிய பாறை அருகில் வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிராக வந்தான்; யோவாபோ, தான் அணிந்துகொண்டிருக்கிற தன்னுடைய சட்டையின்மேல் ஒரு வாரைக் கட்டியிருந்தான்; அதில் உறையோடு ஒரு பட்டயம் அவன் இடுப்பில் தொங்கினது; அவன் புறப்படும்போது அது விழுந்தது.
9 Tada reèe Joav Amasi: jesi li zdravo, brate? I dohvati se Joav desnom rukom svojom brade Amasi da ga cjeluje.
அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,
10 A Amasa ne uzimaše na um maèa, koji bijaše Joavu u ruci; a on ga udari njim pod peto rebro, i prosu mu crijeva na zemlju, te od jednoga udarca umrije. Potom Joav i Avisaj brat njegov otidoše u potjeru za Sevom sinom Vihrijevim.
௧0தன்னுடைய கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாக இல்லாமலிருந்தபோது, யோவாப் அவனை அவனுடைய குடல்கள் தரையிலே விழும்படி, அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் இறந்துபோனான்; அப்பொழுது யோவாபும் அவனுடைய சகோதரனான அபிசாயும் பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
11 A jedan od momaka Joavovijeh stade kod njega i reèe: ko ljubi Joava i ko je Davidov, za Joavom!
௧௧யோவாபுடைய வாலிபர்களில் ஒருவன் இறந்தவன் அருகில் நின்று, யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதை ஆதரிக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போகட்டும் என்றான்.
12 A Amasa se valjaše u svojoj krvi nasred puta. I videæi onaj èovjek gdje se ustavlja sav narod odvuèe Amasu s puta u polje i baci haljinu na nj, kad vidje gdje se ustavlja svaki ko naiðe na nj.
௧௨அமாசா நடுவழியில் இரத்தத்திலே புரண்டுகிடந்தபடியால், மக்கள் எல்லோரும் அங்கேயே நிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவன் அருகில் வருகிறவர்கள் எல்லோரும் அங்கேயே நிற்பதைக் கண்டு, ஒரு ஆடையை அவன்மேல் போட்டான்.
13 I kad bi uklonjen s puta proðoše svi za Joavom da tjeraju Sevu sina Vihrijeva.
௧௩அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பின்பு, எல்லோரும் கடந்து, பிக்கிரியின் மகனான சேபாவைப் பின்தொடர, யோவாபுக்குப் பின்னேசென்றார்கள்.
14 I on proðe kroz sva plemena Izrailjeva do Avela i do Vetmahe sa svijem Viranima, koji se okupiše te iðahu za njim.
௧௪அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவான ஆபேல்வரையும், பேரீமின் கடைசிவரையிலும் வந்திருந்தான்; அந்த இடத்தார்களும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
15 I došavši opkoliše ga u Avel-Vet-Masi, i iskopaše opkop oko grada tako da stajahu pred zidom; i sav narod što bješe s Joavom navaljivaše da obori zid.
௧௫அவர்கள் போய் பெத்மாக்காவான ஆபேலிலே அவனை முற்றுகையிட்டு, பட்டணத்திற்குள் போகத் தடைச்சுவர்களைக் கட்டினார்கள்; யோவாபோடு இருக்கிற இராணுவத்தினர்கள் எல்லோரும் மதிலை விழச்செய்யும்படி அழிக்க முயற்சிசெய்தார்கள்.
16 Tada viknu jedna mudra žena iz grada: èujte, èujte! Kažite Joavu: pristupi ovamo da govorim s tobom.
௧௬அப்பொழுது புத்தியுள்ள ஒரு பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேசவேண்டும்; அவரை இங்கே அருகில் வரச்சொல்லுங்கள் என்றாள்.
17 A kad on pristupi k njoj, reèe žena: jesi li ti Joav? A on reèe: jesam. A ona reèe: poslušaj rijeèi sluškinje svoje. A on reèe: da èujem.
௧௭அவன் அவளுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பெண்: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.
18 A ona reèe govoreæi: od starine se govori: valja pitati u Avelu. I tako se izvršivaše.
௧௮அப்பொழுது அவள்: முற்காலத்து மக்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.
19 Ja sam jedan od mirnijeh i vjernijeh gradova u Izrailju, a ti hoæeš da zatreš grad, i to majku u Izrailju. Zašto hoæeš da proždreš našljedstvo Gospodnje?
௧௯இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாக இருக்கும்போது, நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாக இருக்கிறதை அழிக்கவேண்டும் என்று பார்க்கிறீரோ? நீர் யெகோவாவுடைய சுதந்திரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
20 A Joav odgovori i reèe: saèuvaj Bože! saèuvaj Bože! neæu da proždrem ni da raskopam.
௨0யோவாப் மறுமொழியாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாக இருக்கட்டும்.
21 Nije tako; nego jedan iz gore Jefremove, po imenu Seva sin Vihrijev, podigao je ruku svoju na cara Davida; dajte samo njega, pa æu otiæi od grada. A žena reèe Joavu: evo, glava njegova baciæe ti se preko zida.
௨௧காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள எப்பிராயீம் மலையை சேர்ந்தவனாக இருக்கிற ஒரு மனிதன், ராஜாவான தாவீதுக்கு விரோதமாகத் தன்னுடைய கையை ஓங்கினான்; அவனைமட்டும் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தைவிட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்தப் பெண் யோவாபைப் பார்த்து: இதோ, அவனுடைய தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,
22 I žena otide k svemu narodu s mudrošæu svojom; i otsjekoše glavu Sevi sinu Vihrijevu, i baciše je Joavu. A on zatrubi u trubu, te se razidoše od grada svak u svoj šator. A Joav se vrati u Jerusalim k caru.
௨௨அவள் மக்களிடத்தில் போய் புத்தியாகப் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகனான சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடம் போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; எல்லோரும் பட்டணத்தைவிட்டுக் கலைந்து, தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடம் போகும்படி எருசலேமிற்குத் திரும்பினான்.
23 A bijaše Joav nad svom vojskom Izrailjevom; a Venaja sin Jodajev bijaše nad Heretejima i Feletejima;
௨௩யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் மகனான பெனாயா கிரேத்தியர்கள்மேலும் பிலேத்தியர்கள்மேலும் தலைவராக இருந்தார்கள்.
24 A Adoram bješe nad dancima; a Josafat sin Ahiludov bješe pametar;
௨௪அதோராம் கடினமாக வேலை வாங்குகிறவனும், அகிலூதின் மகனான யோசபாத் மந்திரியும்,
25 Seja pisar; a Sadok i Avijatar sveštenici.
௨௫சேவா எழுத்தாளனாகவும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாகவும் இருந்தார்கள்.
26 I Ira Jairanin bješe knez Davidu.
௨௬யயீரியனான ஈராவும் தாவீதுக்கு முதலமைச்சராக இருந்தான்.

< 2 Samuelova 20 >