< 2 Dnevnika 17 >
1 Tada se zacari Josafat sin njegov na njegovo mjesto, i ukrijepi se na Izrailja.
௧ஆசாவின் இடத்தில் அவன் மகனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலனடைந்தான்.
2 I ponamješta vojsku po svijem tvrdijem gradovima Judinijem, i ponamješta straže po zemlji Judinoj i po gradovima Jefremovijem, koje zadobi Asa otac njegov.
௨அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் படைவீரர்களையும் ஏற்படுத்தினான்.
3 I bijaše Gospod s Josafatom, jer hoðaše prvijem putovima Davida oca svojega i ne tražaše Vala.
௩யெகோவா யோசபாத்துடன் இருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,
4 Nego Boga oca svojega tražaše i po zapovijestima njegovijem hoðaše, i ne èinjaše kao sinovi Izrailjevi.
௪தன் முற்பிதாக்களுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.
5 Zato utvrdi Gospod carstvo u ruci njegovoj, i sav narod Judin davaše dare Josafatu, te imaše veliko blago i slavu.
௫ஆகையால் யெகோவா அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது.
6 I srce se njegovo oslobodi na putovima Gospodnjim, te još obori visine i lugove u Judeji.
௬யெகோவாவுடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகம்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவிலிருந்து அகற்றினான்.
7 I treæe godine svoga carovanja posla knezove svoje Ven-Aila i Ovadiju i Zahariju i Natanaila i Miheju da uèe po gradovima Judinijem;
௭அவன் அரசாண்ட மூன்றாம் வருடத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்செய்ய, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும் நெதனெயேலையும், மிகாயாவையும்,
8 I s njima Levite: Semaju i Nataniju i Zevadiju i Asaila i Semiramota i Jonatana i Adoniju i Toviju i Tov-Adoniju, Levite, i s njima Elisamu i Jorama sveštenike.
௮இவர்களோடுகூட செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியர்களையும், இவர்களோடுகூட ஆசாரியரான எலிஷாமாவையும், யோராமையும் அனுப்பினான்.
9 I uèahu po Judeji imajuæi pri sebi knjigu zakona Gospodnjega, i prohoðahu sve gradove Judine uèeæi narod.
௯இவர்கள் யூதாவிலே உபதேசித்து, யெகோவாவுடைய வேதபுத்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் சென்று மக்களுக்குப் போதித்தார்கள்.
10 I doðe strah Gospodnji na sva carstva po zemljama oko Jude, te ne vojevaše na Josafata.
௧0யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்ஜியங்களின் மீது கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததால், யோசபாத்தோடு போர்செய்யாதிருந்தார்கள்.
11 I sami Filisteji donošahu Josafatu dare i danak u novcu; i Arapi dogonjahu mu stoku, po sedam tisuæa i sedam stotina ovnova i po sedam tisuæa i sedam stotina jaraca.
௧௧பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்திற்கு வெகுமதிகளோடுகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள்.
12 Tako napredovaše Josafat i podiže se veoma; i sazida u Judeji kule i gradove za žitnice.
௧௨இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.
13 I imaše mnogo dobra po gradovima Judinijem, i vojnika, hrabrijeh junaka u Jerusalimu.
௧௩யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளைச் செய்தான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.
14 A ovo je broj njihov po domovima otaca njihovijeh; od Jude tisuænici: Adna vojvoda, s kojim bijaše tri stotine tisuæa hrabrijeh junaka.
௧௪தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய எண்ணிக்கையாவது: யூதாவிலே ஆயிரத்திற்கு அதிபதிகளில் அதனா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள்.
15 A za njim Joanan vojvoda, s kojim bijaše dvjesta i osamdeset tisuæa;
௧௫அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதி இருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
16 A za njim Amasija sin Zihrijev, koji se dragovoljno dade Gospodu, i s njim bijaše dvjesta tisuæa hrabrijeh junaka.
௧௬அவனுக்கு உதவியாக யெகோவாவுக்குத் தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்த சிக்ரியின் மகனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.
17 A od Venijamina: hrabri junak Elijada, s kojim bijaše dvjesta tisuæa naoružanijeh lukom i štitom;
௧௭பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
18 A za njim Jozavad, s kojim bijaše sto i osamdeset tisuæa naoružanijeh za boj.
௧௮அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே வேலைசெய்வதற்கு ஆயுதமணிந்த ஒருலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
19 Ovi služahu caru osim onijeh koje ponamješta car po tvrdijem gradovima u svoj zemlji Judinoj.
௧௯ராஜா யூதா எங்குமுள்ள பாதுகாப்பான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவுக்கு வேலைசெய்தவர்கள்.