< 2 Dnevnika 14 >
1 A kad poèinu Avija kod otaca svojih i pogreboše ga u gradu Davidovu, zacari se na njegovo mjesto Asa sin njegov. Za njegova vremena poèinu zemlja deset godina.
௧அபியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருடங்கள்வரை அமைதலாயிருந்தது.
2 I èinjaše Asa što je dobro i pravo pred Gospodom Bogom njegovijem.
௨ஆசா தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.
3 Jer obori oltare tuðe i visine, i izlomi likove njihove i isijeèe lugove njihove.
௩அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,
4 I zapovjedi sinovima Judinijem da traže Gospoda Boga otaca svojih i da izvršuju zakon i zapovijest njegovu.
௪தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்றுக்கொடுத்து,
5 Obori po svijem gradovima Judinijem visine i sunèane likove, i poèinu carstvo za njegova vremena.
௫யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்ஜியம் அமைதலாயிருந்தது.
6 I sazida tvrde gradove u zemlji Judinoj, jer zemlja bijaše u miru, niti bješe rata s njim onijeh godina, jer mu Gospod dade mir.
௬யெகோவா அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதால், அந்த வருடங்களில் அவனுக்கு விரோதமான போர் இல்லாமலிருந்தது; தேசம் அமைதலாயிருந்ததால் யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.
7 I reèe Judi: da sazidamo ove gradove i da ih opašemo zidom i kulama i vratima i prijevornicama, dok je zemlja naša; jer tražismo Gospoda Boga svojega, tražismo ga i dade nam mir otsvuda. I tako zidaše, i biše sreæni.
௭அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமைதலாயிருக்கும்போது, நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டாக்கி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய யெகோவாவை தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது.
8 I imaše Asa vojske trista tisuæa od Jude sa štitovima i kopljima, a od Venijamina dvjesta i osamdeset tisuæa sa štitovima i lukovima. Svi bijahu hrabri vojnici.
௮யூதாவிலே கேடகத்தையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேருமான படை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லோரும் பலசாலிகள்.
9 I izide na njih Zara Etiopljanin s tisuæu tisuæa vojske i s trista kola, i doðe do Marise.
௯அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர் சேர்ந்த படையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேஷாவரை வந்தான்.
10 I Asa izide preda nj; i uvrstaše se vojske u dolini Sefati kod Marise.
௧0அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேஷாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.
11 I zavapi Asa ka Gospodu Bogu svojemu govoreæi: Gospode, tebi je ništa pomoæi množini ili nejakomu; pomozi nam, Gospode Bože naš, jer se u te uzdamo, i u tvoje ime doðosmo na ovo mnoštvo. Gospode, ti si Bog naš, ne daj da može što na te èovjek.
௧௧ஆசா தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
12 I razbi Gospod Etiopljane pred Asom i pred Judom, i pobjegoše Etiopljani.
௧௨அப்பொழுது யெகோவா அந்த எத்தியோப்பியர்களை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்ததால் எத்தியோப்பியர்கள் ஓடிப்போனார்கள்.
13 I tjera ih Asa i narod koji bijaše s njim dori do Gerara. I popadaše Etiopljani da ih nijedan ne osta živ, jer se satrše pred Gospodom i pred vojskom njegovom; i oni odnesoše plijen velik veoma.
௧௩அவர்களை ஆசாவும் அவனோடிருந்த மக்களும் கேரார்வரை துரத்தினார்கள்; எத்தியோப்பியர்கள் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முற்றிலும் அழிக்கப்பட்டார்கள்; யெகோவாவுக்கும் அவருடைய படைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளையடித்து,
14 I pobiše sve gradove oko Gerara, jer doðe na njih strah Gospodnji, i oplijeniše sve one gradove, jer bijaše u njima mnogo plijena.
௧௪கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் தோற்கடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டானது; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாக அகப்பட்டது.
15 Pobiše i po stanovima pastirskim ljude, i odvedoše mnogo ovaca i kamila; i vratiše se u Jerusalim.
௧௫மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.