< 1 Dnevnika 23 >
1 I tako David star i sit života postavi Solomuna sina svojega carem nad Izrailjem.
௧தாவீது வயது சென்றவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன்னுடைய மகனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
2 I sabra sve knezove Izrailjeve i sveštenike i Levite.
௨இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் கூடிவரும்படிச் செய்தான்.
3 I biše izbrojeni Leviti od trideset godina i više, i bješe ih na broj s glave na glavu trideset i osam tisuæa ljudi.
௩அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரம்.
4 Izmeðu njih bijaše dvadeset i èetiri tisuæe odreðenijeh na posao u domu Gospodnjem, a šest tisuæa upravitelja i sudija;
௪அவர்களில் இருபத்துநான்காயிரம்பேர் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவர்களும் அலுவலர்களும் என்றும்,
5 A èetiri tisuæe vratara i èetiri tisuæe koji hvaljahu Gospoda uz oruða koja naèini za hvalu.
௫நான்காயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்துவைத்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர் யெகோவாவை துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,
6 I razdijeli ih David u redove po sinovima Levijevim, Girsonu, Katu i Merariju.
௬அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான்.
7 Od Girsona bijahu: Ladan i Simej;
௭கெர்சோனியர்களில், லாதானும், சீமேயும் இருந்தார்கள்.
8 Sinovi Ladanovi: poglavar Jehilo i Zetam i Joilo, trojica;
௮லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான்.
9 Sinovi Simejevi: Selomit i Azilo i Haran, trojica. To su poglavari otaèkih porodica Ladanovijeh.
௯சீமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள்.
10 A sinovi Simejevi: Jat, Zina i Jeus i Verija, ta su èetvorica sinovi Simejevi.
௧0யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சீமேயின் மகன்களாக இருந்தார்கள்.
11 A Jat bijaše poglavar, a Ziza drugi; a Jeus i Verija nemahu mnogo djece, zato se brojahu u jedan dom otaèki.
௧௧யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.
12 Sinovi Katovi: Amram, Isar, Hevron i Ozilo, èetvorica.
௧௨கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்.
13 Sinovi Amramovi: Aron i Mojsije. Ali Aron bi odvojen da osveæuje svetinju nad svetinjama, on i sinovi njegovi dovijeka, da kade pred Gospodom, da mu služe i da blagosiljaju u ime njegovo dovijeka.
௧௩அம்ராமின் மகன்கள் ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான இடத்தை என்றென்றைக்கும் பரிசுத்தமாகக் காக்கவும், என்றைக்கும் யெகோவாவுக்கு முன்பாக தூபங்காட்டவும், அவருக்கு ஆராதனை செய்யவும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.
14 A sinovi Mojsija èovjeka Božijega broje se u pleme Levijevo.
௧௪தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள்.
15 Sinovi Mojsijevi: Girsom i Elijezer.
௧௫மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள்.
16 Sinovi Girsomovi: Sevuilo poglavar.
௧௬கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான்.
17 A sinovi Elijezerovi: Reavija poglavar. A nemaše Elijezer više sinova, nego se sinovi Reavijini umnožiše veoma.
௧௭எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள்.
18 Sinovi Isarovi: Selomit poglavar.
௧௮இத்சேயாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான்.
19 Sinovi Hevronovi: Jerija prvi, Amarija drugi, Jazilo treæi, i Jekameam èetvrti.
௧௯எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்.
20 Sinovi Ozilovi: Miha prvi i Jesija drugi.
௨0ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா.
21 Sinovi Merarijevi: Malije i Musije. Sinovi Malijevi: Eleazar i Kis.
௨௧மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள்.
22 A Eleazar umrije i ne imaše sinova nego samo kæeri, i njima se oženiše sinovi Kisovi, braæa njihova.
௨௨எலெயாசார் மரணமடைகிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள்.
23 Sinovi Musijevi: Malije i Eder i Jeremot, trojica.
௨௩மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்.
24 To su sinovi Levijevi po otaèkim domovima svojim, poglavari domova otaèkih, koji biše izbrojeni po broju imena s glave na glavu, koji raðahu posao za službu u domu Gospodnjem, od dvadeset godina i više.
௨௪தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள்.
25 Jer David reèe: mir dade Gospod Bog Izrailjev narodu svojemu, i nastavaæe u Jerusalimu dovijeka.
௨௫இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை இளைப்பாறியிருக்கச்செய்தார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் தங்குவார் என்றும்,
26 I Leviti neæe više nositi šatora i posuða njegova za službu njegovu.
௨௬இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும்,
27 Jer po pošljednjoj naredbi Davidovoj biše izbrojeni sinovi Levijevi od dvadeset godina i više;
௨௭தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள்.
28 Jer odreðeni bijahu da pomažu sinovima Aronovijem u službi u domu Gospodnjem u trijemovima i u klijetima, i da èiste sve svete stvari i da rade oko službe u domu Gospodnjem,
௨௮அவர்கள் ஆரோனுடைய மகன்களின் கீழ் யெகோவாவுடைய ஆலயத்தின் ஊழியமாக நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், எல்லா பரிசுத்த பணிபொருட்களின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனையின் வேலையையும் விசாரிப்பதும்,
29 I oko hljebova postavljenijeh, i oko bijeloga brašna za dar i oko kolaèa prijesnijeh i oko tavica, i oko svega što se prži, i oko svake mjere,
௨௯சமுகத்து அப்பங்களையும், உணவுபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான எல்லா எடையையும் அளவையும் விசாரிப்பதும்,
30 I da stoje jutrom i hvale i slave Gospoda, i tako veèerom,
௩0நாள்தோறும் காலையிலும் மாலையிலும் யெகோவாவைப் போற்றித் துதித்து, ஓய்வு நாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், யெகோவாவுக்கு சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற எல்லா வேளைகளிலும்,
31 I kad se god prinose žrtve paljenice Gospodu, u subote, i na mladine i praznike, u broju po redu svom svagda pred Gospodom,
௩௧எண்ணிக்கைக்கு உள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அதின்படி செய்ய, யெகோவாவுக்கு முன்பாக நிற்பதும்,
32 I da rade što treba raditi u šatoru od sastanka i u svetinji, i za sinove Aronove, braæu svoju, u službi u domu Gospodnjem.
௩௨ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த இடத்தின் காவலையும் தங்களுடைய சகோதரர்களாகிய ஆரோனுடைய மகன்களின் காவலையும் காப்பதும், யெகோவாவுடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாக இருந்தது.