< ༡ ཏཱིམཐིཡཿ 1 >

1 ཨསྨཱཀཾ ཏྲཱཎཀརྟྟུརཱིཤྭརསྱཱསྨཱཀཾ པྲཏྱཱཤཱབྷཱུམེཿ པྲབྷོ ཪྻཱིཤུཁྲཱིཥྚསྱ ཙཱཛྙཱནུསཱརཏོ ཡཱིཤུཁྲཱིཥྚསྱ པྲེརིཏཿ པཽལཿ སྭཀཱིཡཾ སཏྱཾ དྷརྨྨཔུཏྲཾ ཏཱིམཐིཡཾ པྲཏི པཏྲཾ ལིཁཏི།
நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல்,
2 ཨསྨཱཀཾ ཏཱཏ ཨཱིཤྭརོ྅སྨཱཀཾ པྲབྷུ ཪྻཱིཤུཁྲཱིཥྚཤྩ ཏྭཡི ཨནུགྲཧཾ དཡཱཾ ཤཱནྟིཉྩ ཀུཪྻྱཱསྟཱཾ།
விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
3 མཱཀིདནིཡཱདེཤེ མམ གམནཀཱལེ ཏྭམ྄ ཨིཕིཥནགརེ ཏིཥྛན྄ ཨིཏརཤིཀྵཱ ན གྲཧཱིཏཝྱཱ, ཨནནྟེཥཱུཔཱཁྱཱནེཥུ ཝཾཤཱཝལིཥུ ཙ ཡུཥྨཱབྷི རྨནོ ན ནིཝེཤིཏཝྱམ྄
மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி,
4 ཨིཏི ཀཱཾཤྩིཏ྄ ལོཀཱན྄ ཡད྄ ཨུཔདིཤེརེཏཏ྄ མཡཱདིཥྚོ྅བྷཝཿ, ཡཏཿ སཪྻྭཻརེཏཻ ཪྻིཤྭཱསཡུཀྟེཤྭརཱིཡནིཥྛཱ ན ཛཱཡཏེ ཀིནྟུ ཝིཝཱདོ ཛཱཡཏེ།
நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய்.
5 ཨུཔདེཤསྱ ཏྭབྷིཔྲེཏཾ ཕལཾ ནིརྨྨལཱནྟཿཀརཎེན སཏྶཾཝེདེན ནིཥྐཔཊཝིཤྭཱསེན ཙ ཡུཀྟཾ པྲེམ།
இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
6 ཀེཙིཏ྄ ཛནཱཤྩ སཪྻྭཱཎྱེཏཱནི ཝིཧཱཡ ནིརརྠཀཀཐཱནཱམ྄ ཨནུགམནེན ཝིཔཐགཱམིནོ྅བྷཝན྄,
இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள்.
7 ཡད྄ བྷཱཥནྟེ ཡཙྩ ནིཤྩིནྭནྟི ཏནྣ བུདྷྱམཱནཱ ཝྱཝསྠོཔདེཥྚཱརོ བྷཝིཏུམ྄ ཨིཙྪནྟི།
தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.
8 སཱ ཝྱཝསྠཱ ཡདི ཡོགྱརཱུཔེཎ གྲྀཧྱཏེ ཏརྷྱུཏྟམཱ བྷཝཏཱིཏི ཝཡཾ ཛཱནཱིམཿ།
ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம்.
9 ཨཔརཾ སཱ ཝྱཝསྠཱ དྷཱརྨྨིཀསྱ ཝིརུདྡྷཱ ན བྷཝཏི ཀིནྟྭདྷཱརྨྨིཀོ ྅ཝཱདྷྱོ དུཥྚཿ པཱཔིཥྛོ ྅པཝིཏྲོ ྅ཤུཙིཿ པིཏྲྀཧནྟཱ མཱཏྲྀཧནྟཱ ནརཧནྟཱ
எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும் தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும்,
10 ཝེཤྱཱགཱམཱི པུཾམཻཐུནཱི མནུཥྱཝིཀྲེཏཱ མིཐྱཱཝཱདཱི མིཐྱཱཤཔཐཀཱརཱི ཙ སཪྻྭེཥཱམེཏེཥཱཾ ཝིརུདྡྷཱ,
௧0வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும்,
11 ཏཐཱ སཙྩིདཱནནྡེཤྭརསྱ ཡོ ཝིབྷཝཡུཀྟཿ སུསཾཝཱདོ མཡི སམརྤིཏསྟདནུཡཱཡིཧིཏོཔདེཤསྱ ཝིཔརཱིཏཾ ཡཏ྄ ཀིཉྩིད྄ བྷཝཏི ཏདྭིརུདྡྷཱ སཱ ཝྱཝསྠེཏི ཏདྒྲཱཧིཎཱ ཛྙཱཏཝྱཾ།
௧௧ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.
12 མཧྱཾ ཤཀྟིདཱཏཱ ཡོ྅སྨཱཀཾ པྲབྷུཿ ཁྲཱིཥྚཡཱིཤུསྟམཧཾ དྷནྱཾ ཝདཱམི།
௧௨என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.
13 ཡཏཿ པུརཱ ནིནྡཀ ཨུཔདྲཱཝཱི ཧིཾསཀཤྩ བྷཱུཏྭཱཔྱཧཾ ཏེན ཝིཤྭཱསྱོ ྅མནྱེ པརིཙཱརཀཏྭེ ནྱཡུཛྱེ ཙ། ཏད྄ ཨཝིཤྭཱསཱཙརཎམ྄ ཨཛྙཱནེན མཡཱ ཀྲྀཏམིཏི ཧེཏོརཧཾ ཏེནཱནུཀམྤིཏོ྅བྷཝཾ།
௧௩கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன்.
14 ཨཔརཾ ཁྲཱིཥྚེ ཡཱིཤཽ ཝིཤྭཱསཔྲེམབྷྱཱཾ སཧིཏོ྅སྨཏྤྲབྷོརནུགྲཧོ ྅ཏཱིཝ པྲཙུརོ྅བྷཏ྄།
௧௪நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது.
15 པཱཔིནཿ པརིཏྲཱཏུཾ ཁྲཱིཥྚོ ཡཱིཤུ རྫགཏི སམཝཏཱིརྞོ྅བྷཝཏ྄, ཨེཥཱ ཀཐཱ ཝིཤྭཱསནཱིཡཱ སཪྻྭཻ གྲཧཎཱིཡཱ ཙ།
௧௫பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான்.
16 ཏེཥཱཾ པཱཔིནཱཾ མདྷྱེ྅ཧཾ པྲཐམ ཨཱསཾ ཀིནྟུ ཡེ མཱནཝཱ ཨནནྟཛཱིཝནཔྲཱཔྟྱརྠཾ ཏསྨིན྄ ཝིཤྭསིཥྱནྟི ཏེཥཱཾ དྲྀཥྚཱནྟེ མཡི པྲཐམེ ཡཱིཤུནཱ ཁྲཱིཥྚེན སྭཀཱིཡཱ ཀྲྀཏྶྣཱ ཙིརསཧིཥྞུཏཱ ཡཏ྄ པྲཀཱཤྱཏེ ཏདརྠམེཝཱཧམ྄ ཨནུཀམྤཱཾ པྲཱཔྟཝཱན྄། (aiōnios g166)
௧௬அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். (aiōnios g166)
17 ཨནཱདིརཀྵཡོ྅དྲྀཤྱོ རཱཛཱ ཡོ྅དྭིཏཱིཡཿ སཪྻྭཛྙ ཨཱིཤྭརསྟསྱ གཽརཝཾ མཧིམཱ ཙཱནནྟཀཱལཾ ཡཱཝད྄ བྷཱུཡཱཏ྄། ཨཱམེན྄། (aiōn g165)
௧௭நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
18 ཧེ པུཏྲ ཏཱིམཐིཡ ཏྭཡི ཡཱནི བྷཝིཥྱདྭཱཀྱཱནི པུརཱ ཀཐིཏཱནི ཏདནུསཱརཱད྄ ཨཧམ྄ ཨེནམཱདེཤཾ ཏྭཡི སམརྤཡཱམི, ཏསྱཱབྷིཔྲཱཡོ྅ཡཾ ཡཏྟྭཾ ཏཻ ཪྻཱཀྱཻརུཏྟམཡུདྡྷཾ ཀརོཥི
௧௮என் குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன்னமே சொன்ன தீர்க்கதரிசனங்களின்படியே, நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்.
19 ཝིཤྭཱསཾ སཏྶཾཝེདཉྩ དྷཱརཡསི ཙ། ཨནཡོཿ པརིཏྱཱགཱཏ྄ ཀེཥཱཉྩིད྄ ཝིཤྭཱསཏརཱི བྷགྣཱབྷཝཏ྄།
௧௯இந்த நல்ல மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
20 ཧུམིནཱཡསིཀནྡརཽ ཏེཥཱཾ ཡཽ དྭཽ ཛནཽ, ཏཽ ཡད྄ དྷརྨྨནིནྡཱཾ པུན རྣ ཀརྟྟུཾ ཤིཀྵེཏེ ཏདརྠཾ མཡཱ ཤཡཏཱནསྱ ཀརེ སམརྤིཏཽ།
௨0இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.

< ༡ ཏཱིམཐིཡཿ 1 >