< ப்ரகாஸி²தம்’ 1 >

1 யத் ப்ரகாஸி²தம்’ வாக்யம் ஈஸ்²வர​: ஸ்வதா³ஸாநாம்’ நிகடம்’ ஸீ²க்⁴ரமுபஸ்தா²ஸ்யந்தீநாம்’ க⁴டநாநாம்’ த³ர்ஸ²நார்த²ம்’ யீஸு²க்²ரீஷ்டே ஸமர்பிதவாந் தத் ஸ ஸ்வீயதூ³தம்’ ப்ரேஷ்ய நிஜஸேவகம்’ யோஹநம்’ ஜ்ஞாபிதவாந்|
இது இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாடு. விரைவில் நிகழவிருக்கும் சம்பவங்கள் என்ன என்பதைத் தமது ஊழியர்களுக்கு காண்பிக்கிறதற்காக, இறைவன் இந்த வெளிப்பாட்டை இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுத்தார். அவர் தமது இறைத்தூதனை தமது ஊழியனான யோவானிடம் அனுப்பி இதை அவனுக்கு தெரியப்படுத்தினார்.
2 ஸ சேஸ்²வரஸ்ய வாக்யே க்²ரீஷ்டஸ்ய ஸாக்ஷ்யே ச யத்³யத்³ த்³ரு’ஷ்டவாந் தஸ்ய ப்ரமாணம்’ த³த்தவாந்|
இது இறைவனுடைய வார்த்தையைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் சாட்சியாக யோவான் தான் கண்ட எல்லாவற்றையும் அறிவித்தான்.
3 ஏதஸ்ய ப⁴விஷ்யத்³வக்த்ரு’க்³ரந்த²ஸ்ய வாக்யாநாம்’ பாட²க​: ஸ்²ரோதாரஸ்²ச தந்மத்⁴யே லிகி²தாஜ்ஞாக்³ராஹிணஸ்²ச த⁴ந்யா யத​: ஸ கால​: ஸந்நிகட​: |
இவை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டதினால், இந்த இறைவாக்கின் வார்த்தைகளை வாசிக்கிறவர்களும் இதைக் கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறபடி நடக்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
4 யோஹந் ஆஸி²யாதே³ஸ²ஸ்தா²​: ஸப்த ஸமிதீ​: ப்ரதி பத்ரம்’ லிக²தி| யோ வர்த்தமாநோ பூ⁴தோ ப⁴விஷ்யம்’ஸ்²ச யே ச ஸப்தாத்மாநஸ்தஸ்ய ஸிம்’ஹாஸநஸ்ய ஸம்முகே² திஷ்ட²ந்தி
யோவானாகிய நான், ஆசியாவிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதுகிறதாவது: இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவரிடமிருந்து உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. அவருடைய அரியணைக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளிடமிருந்தும்,
5 யஸ்²ச யீஸு²க்²ரீஷ்டோ விஸ்²வஸ்த​: ஸாக்ஷீ ம்ரு’தாநாம்’ மத்⁴யே ப்ரத²மஜாதோ பூ⁴மண்ட³லஸ்த²ராஜாநாம் அதி⁴பதிஸ்²ச ப⁴வதி, ஏதேப்⁴யோ (அ)நுக்³ரஹ​: ஸா²ந்திஸ்²ச யுஷ்மாஸு வர்த்ததாம்’|
இயேசுகிறிஸ்துவினிடமிருந்தும் கிறிஸ்துவே உண்மையான சாட்சி, இறந்தவர்களிடையே முதற்பேறானவர், பூமியிலுள்ள அரசர்களை ஆளுகை செய்கிறவர். அவரே நம்மில் அன்பு செலுத்தி, தமது இரத்தத்தினாலே, நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கினார்.
6 யோ (அ)ஸ்மாஸு ப்ரீதவாந் ஸ்வருதி⁴ரேணாஸ்மாந் ஸ்வபாபேப்⁴ய​: ப்ரக்ஷாலிதவாந் தஸ்ய பிதுரீஸ்²வரஸ்ய யாஜகாந் க்ரு’த்வாஸ்மாந் ராஜவர்கே³ நியுக்தவாம்’ஸ்²ச தஸ்மிந் மஹிமா பராக்ரமஸ்²சாநந்தகாலம்’ யாவத்³ வர்த்ததாம்’| ஆமேந்| (aiōn g165)
தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென். (aiōn g165)
7 பஸ்²யத ஸ மேகை⁴ராக³ச்ச²தி தேநைகைகஸ்ய சக்ஷுஸ்தம்’ த்³ரக்ஷ்யதி யே ச தம்’ வித்³த⁴வந்தஸ்தே (அ)பி தம்’ விலோகிஷ்யந்தே தஸ்ய க்ரு’தே ப்ரு’தி²வீஸ்தா²​: ஸர்வ்வே வம்’ஸா² விலபிஷ்யந்தி| ஸத்யம் ஆமேந்|
“இதோ பாருங்கள், இயேசு மேகங்கள் மீது வருகிறார்” மற்றும் “எல்லா கண்களும் அவரைக்காணும், அவரைக் குத்தியவர்களும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்”; பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் நிமித்தம் புலம்புவார்கள்.”
8 வர்த்தமாநோ பூ⁴தோ ப⁴விஷ்யம்’ஸ்²ச ய​: ஸர்வ்வஸ²க்திமாந் ப்ரபு⁴​: பரமேஸ்²வர​: ஸ க³த³தி, அஹமேவ க​: க்ஷஸ்²சார்த²த ஆதி³ரந்தஸ்²ச|
“நானே தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்,” என்று, “இருக்கிறவரும், இருந்தவரும், வரப்போகிறவருமாகிய, எல்லாம் வல்லவராயிருக்கிறவருமாகிய” இறைவனாகிய கர்த்தர் சொல்கிறார்.
9 யுஷ்மாகம்’ ப்⁴ராதா யீஸு²க்²ரீஷ்டஸ்ய க்லேஸ²ராஜ்யதிதிக்ஷாணாம்’ ஸஹபா⁴கீ³ சாஹம்’ யோஹந் ஈஸ்²வரஸ்ய வாக்யஹேதோ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய ஸாக்ஷ்யஹேதோஸ்²ச பாத்மநாமக உபத்³வீப ஆஸம்’|
உங்கள் சகோதரனான யோவானாகிய நான், கிறிஸ்துவில் நமக்குரிய துன்பத்திலும், அரசிலும், துன்பத்தைப் பொறுமையோடு சகிப்பதிலும், உங்கள் பங்காளியாயிருக்கிறேன். இறைவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறதாலும், இயேசுவுக்கு சாட்சியாயிருப்பதாலும், நான் நாடுகடத்தப்பட்டு, பத்மு தீவில் இருந்தேன்.
10 தத்ர ப்ரபோ⁴ ர்தி³நே ஆத்மநாவிஷ்டோ (அ)ஹம்’ ஸ்வபஸ்²சாத் தூரீத்⁴வநிவத் மஹாரவம் அஸ்²ரௌஷம்’,
கர்த்தருடைய நாளிலே, நான் பரிசுத்த ஆவியானவரில் நிரப்பப்பட்டு இருக்கையில், எனக்குப் பின்னால் எக்காளத்தைப் போன்ற உரத்த சத்தமான ஒரு குரலைக் கேட்டேன்.
11 தேநோக்தம், அஹம்’ க​: க்ஷஸ்²சார்த²த ஆதி³ரந்தஸ்²ச| த்வம்’ யத்³ த்³ரக்ஷ்யஸி தத்³ க்³ரந்தே² லிகி²த்வாஸி²யாதே³ஸ²ஸ்தா²நாம்’ ஸப்த ஸமிதீநாம்’ ஸமீபம் இபி²ஷம்’ ஸ்முர்ணாம்’ து²யாதீராம்’ ஸார்த்³தி³ம்’ பி²லாதி³ல்பி²யாம்’ லாயதீ³கேயாஞ்ச ப்ரேஷய|
அது என்னிடம்: “நீ காண்கிறதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி: அதை எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய பட்டணங்களிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கும் அனுப்பு” என்று சொன்னது.
12 ததோ மயா ஸம்பா⁴ஷமாணஸ்ய கஸ்ய ரவ​: ஸ்²ரூயதே தத்³த³ர்ஸ²நார்த²ம்’ முக²ம்’ பராவர்த்திதம்’ தத் பராவர்த்ய ஸ்வர்ணமயா​: ஸப்த தீ³பவ்ரு’க்ஷா த்³ரு’ஷ்டா​: |
நான் திரும்பி, என்னோடு பேசிய குரலின் பக்கமாய்ப் பார்த்தேன். நான் திரும்பியபொழுது, ஏழு தங்க குத்துவிளக்குகளைக் கண்டேன்.
13 தேஷாம்’ ஸப்த தீ³பவ்ரு’க்ஷாணாம்’ மத்⁴யே தீ³ர்க⁴பரிச்ச²த³பரிஹித​: ஸுவர்ணஸ்²ரு’ங்க²லேந வேஷ்டிதவக்ஷஸ்²ச மநுஷ்யபுத்ராக்ரு’திரேகோ ஜநஸ்திஷ்ட²தி,
அந்தக் குத்துவிளக்குகளின் நடுவே, மானிடமகனைப் போன்ற ஒருவர் நின்றார். அவர் அணிந்திருந்த உடை அவருடைய பாதம்வரை நீளமாயிருந்தது. அவர் தம்முடைய மார்பைச் சுற்றி, ஒரு தங்கப்பட்டையைக் கட்டியிருந்தார்.
14 தஸ்ய ஸி²ர​: கேஸ²ஸ்²ச ஸ்²வேதமேஷலோமாநீவ ஹிமவத் ஸ்²ரேதௌ லோசநே வஹ்நிஸி²கா²ஸமே
அவருடைய தலையும், தலைமுடியும், வெள்ளைக் கம்பளியைப்போல் இருந்தன. அவை உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. அவருடைய கண்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருந்தன.
15 சரணௌ வஹ்நிகுண்டே³தாபிதஸுபித்தலஸத்³ரு’ஸௌ² ரவஸ்²ச ப³ஹுதோயாநாம்’ ரவதுல்ய​: |
அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் தகதகவென்று ஒளிருகின்ற வெண்கலத்தைப்போல் இருந்தன. அவருடைய குரல் பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது.
16 தஸ்ய த³க்ஷிணஹஸ்தே ஸப்த தாரா வித்³யந்தே வக்த்ராச்ச தீக்ஷ்ணோ த்³விதா⁴ர​: க²ங்கோ³ நிர்க³ச்ச²தி முக²மண்ட³லஞ்ச ஸ்வதேஜஸா தே³தீ³ப்யமாநஸ்ய ஸூர்ய்யஸ்ய ஸத்³ரு’ஸ²ம்’|
அவருடைய வலது கரத்தில், ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இருபக்கமும் கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டு வந்தது. அவருடைய முகம் முழுமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.
17 தம்’ த்³ரு’ஷ்ட்வாஹம்’ ம்ரு’தகல்பஸ்தச்சரணே பதிதஸ்தத​: ஸ்வத³க்ஷிணகரம்’ மயி நிதா⁴ய தேநோக்தம் மா பை⁴ஷீ​: ; அஹம் ஆதி³ரந்தஸ்²ச|
நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப்போல், அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்பொழுது அவர், தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன்.
18 அஹம் அமரஸ்ததா²பி ம்ரு’தவாந் கிந்து பஸ்²யாஹம் அநந்தகாலம்’ யாவத் ஜீவாமி| ஆமேந்| ம்ரு’த்யோ​: பரலோகஸ்ய ச குஞ்ஜிகா மம ஹஸ்தக³தா​: | (aiōn g165, Hadēs g86)
நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். (aiōn g165, Hadēs g86)
19 அதோ யத்³ ப⁴வதி யச்சேத​: பரம்’ ப⁴விஷ்யதி த்வயா த்³ரு’ஷ்டம்’ தத் ஸர்வ்வம்’ லிக்²யதாம்’|
“ஆகவே, நீ கண்டவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் நிகழப்போவதையும், எழுது.
20 மம த³க்ஷிணஹஸ்தே ஸ்தி²தா யா​: ஸப்த தாரா யே ச ஸ்வர்ணமயா​: ஸப்த தீ³பவ்ரு’க்ஷாஸ்த்வயா த்³ரு’ஷ்டாஸ்தத்தாத்பர்ய்யமித³ம்’ தா​: ஸப்த தாரா​: ஸப்த ஸமிதீநாம்’ தூ³தா​: ஸுவர்ணமயா​: ஸப்த தீ³பவ்ரு’க்ஷாஸ்²ச ஸப்த ஸமிதய​: ஸந்தி|
நீ என்னுடைய வலது கரத்தில் கண்ட ஏழு நட்சத்திரங்கள், மற்றும் ஏழு தங்க குத்துவிளக்குகளின், இரகசியம் இதுவே: ஏழு நட்சத்திரங்களும், ஏழு திருச்சபைகளின் தூதர்கள். ஏழு குத்துவிளக்குகளும் ஏழு திருச்சபைகள்.”

< ப்ரகாஸி²தம்’ 1 >