< யோஹந​: 3 >

1 நிகதி³மநாமா யிஹூதீ³யாநாம் அதி⁴பதி​: பி²ரூஸீ² க்ஷணதா³யாம்’
பரிசேயர்களில் நிக்கொதேமு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் யூத ஆளுநர் குழுவின் உறுப்பினரில் ஒருவன்.
2 யீஸௌ²ரப்⁴யர்ணம் ஆவ்ரஜ்ய வ்யாஹார்ஷீத், ஹே கு³ரோ ப⁴வாந் ஈஸ்²வராத்³ ஆக³த் ஏக உபதே³ஷ்டா, ஏதத்³ அஸ்மாபி⁴ர்ஜ்ஞாயதே; யதோ ப⁴வதா யாந்யாஸ்²சர்ய்யகர்ம்மாணி க்ரியந்தே பரமேஸ்²வரஸ்ய ஸாஹாய்யம்’ விநா கேநாபி தத்தத்கர்ம்மாணி கர்த்தும்’ ந ஸ²க்யந்தே|
அவன் ஒரு இரவிலே இயேசுவினிடத்தில் வந்து, “போதகரே, நீர் இறைவனிடத்திலிருந்து வந்த ஒரு போதகர் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் இறைவன் ஒருவரோடு இல்லாவிட்டால், நீர் செய்கிற அடையாளங்களைச் செய்யமுடியாது” என்றான்.
3 ததா³ யீஸு²ருத்தரம்’ த³த்தவாந் தவாஹம்’ யதா²ர்த²தரம்’ வ்யாஹராமி புநர்ஜந்மநி ந ஸதி கோபி மாநவ ஈஸ்²வரஸ்ய ராஜ்யம்’ த்³ரஷ்டும்’ ந ஸ²க்நோதி|
இயேசு அதற்குப் பதிலாக, “ஒருவர் மறுபடியும் பிறக்காவிட்டால், இறைவனுடைய அரசை அவரால் காணமுடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
4 ததோ நிகதீ³ம​: ப்ரத்யவோசத் மநுஜோ வ்ரு’த்³தோ⁴ பூ⁴த்வா கத²ம்’ ஜநிஷ்யதே? ஸ கிம்’ புந ர்மாத்ரு’ர்ஜட²ரம்’ ப்ரவிஸ்²ய ஜநிதும்’ ஸ²க்நோதி?
அப்பொழுது நிக்கொதேமு இயேசுவிடம், “வயதான ஒருவர் மீண்டும் பிறப்பது எப்படி? அவர் மீண்டும் பிறப்பதற்காக, தமது தாயின் கர்ப்பத்தில் இரண்டாவது முறை போகமுடியாதே” என்றான்.
5 யீஸு²ரவாதீ³த்³ யதா²ர்த²தரம் அஹம்’ கத²யாமி மநுஜே தோயாத்மப்⁴யாம்’ புந ர்ந ஜாதே ஸ ஈஸ்²வரஸ்ய ராஜ்யம்’ ப்ரவேஷ்டும்’ ந ஸ²க்நோதி|
இயேசு அதற்குப் பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே, ஒருவர் தண்ணீரினாலும் ஆவியானவரினாலும் பிறவாவிட்டால், அவர் இறைவனுடைய அரசுக்குள் செல்லமுடியாது என்று நான் உனக்குச் சொல்கிறேன்.
6 மாம்’ஸாத்³ யத் ஜாயதே தந் மாம்’ஸமேவ ததா²த்மநோ யோ ஜாயதே ஸ ஆத்மைவ|
மாமிசம், மாமிசத்தைப் பிறப்பிக்கிறது. ஆனால் ஆவியானவரோ, ஆவியை பிறப்பிக்கிறார்.
7 யுஷ்மாபி⁴​: புந ர்ஜநிதவ்யம்’ மமைதஸ்யாம்’ கதா²யாம் ஆஸ்²சர்யம்’ மா மம்’ஸ்தா²​: |
‘நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்’ என்று நான் உனக்குச் சொன்ன வார்த்தையைக் குறித்து நீ வியப்படையக் கூடாது.
8 ஸதா³க³திர்யாம்’ தி³ஸ²மிச்ச²தி தஸ்யாமேவ தி³ஸி² வாதி, த்வம்’ தஸ்ய ஸ்வநம்’ ஸு²ணோஷி கிந்து ஸ குத ஆயாதி குத்ர யாதி வா கிமபி ந ஜாநாஸி தத்³வாத்³ ஆத்மந​: ஸகாஸா²த் ஸர்வ்வேஷாம்’ மநுஜாநாம்’ ஜந்ம ப⁴வதி|
காற்று தான் விரும்பிய இடத்தை நோக்கியே வீசுகிறது; அதன் சத்தத்தைக் கேட்கிறீர்கள். ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றோ, அது எங்கே போகிறது என்றோ உங்களால் சொல்லமுடியாது. ஆவியானவரால் பிறந்த ஒவ்வொரு பிறப்பும் இப்படியே” என்றார்.
9 ததா³ நிகதீ³ம​: ப்ரு’ஷ்டவாந் ஏதத் கத²ம்’ ப⁴விதும்’ ஸ²க்நோதி?
அப்பொழுது நிக்கொதேமு, “இது எப்படி ஆகும்?” என்று கேட்டான்.
10 யீஸு²​: ப்ரத்யக்தவாந் த்வமிஸ்ராயேலோ கு³ருர்பூ⁴த்வாபி கிமேதாம்’ கதா²ம்’ ந வேத்ஸி?
இயேசு அவனிடம், “நீ இஸ்ரயேலரில் போதகனாய் இருக்கிறாயே, உன்னால் இவைகளை விளங்கிக்கொள்ள முடியவில்லையா?
11 துப்⁴யம்’ யதா²ர்த²ம்’ கத²யாமி, வயம்’ யத்³ வித்³மஸ்தத்³ வச்ம​: யம்’ச்ச பஸ்²யாமஸ்தஸ்யைவ ஸாக்ஷ்யம்’ த³த்³ம​: கிந்து யுஷ்மாபி⁴ரஸ்மாகம்’ ஸாக்ஷித்வம்’ ந க்³ரு’ஹ்யதே|
நான் உனக்கு மெய்யாகவே மெய்யாகவே சொல்கிறேன், நாங்கள் அறிந்ததைப் பேசுகிறோம். நாங்கள் கண்டதைக் குறித்துச் சாட்சி சொல்கிறோம். ஆனால் நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
12 ஏதஸ்ய ஸம்’ஸாரஸ்ய கதா²யாம்’ கதி²தாயாம்’ யதி³ யூயம்’ ந விஸ்²வஸித² தர்ஹி ஸ்வர்கீ³யாயாம்’ கதா²யாம்’ கத²ம்’ விஸ்²வஸிஷ்யத²?
பூமிக்குரிய காரியங்களைக்குறித்தே நான் உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் அதை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்; அப்படியிருக்க பரலோக காரியங்களைக்குறித்து நான் பேசினால், அதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
13 ய​: ஸ்வர்கே³(அ)ஸ்தி யம்’ ச ஸ்வர்கா³த்³ அவாரோஹத் தம்’ மாநவதநயம்’ விநா கோபி ஸ்வர்க³ம்’ நாரோஹத்|
பரலோகத்திலிருந்து வந்த மானிடமகனாகிய என்னைத்தவிர, ஒருவரும் ஒருபோதும் பரலோகத்திற்குள் சென்றதில்லை.
14 அபரஞ்ச மூஸா யதா² ப்ராந்தரே ஸர்பம்’ ப்ரோத்தா²பிதவாந் மநுஷ்யபுத்ரோ(அ)பி ததை²வோத்தா²பிதவ்ய​: ;
பாலைவனத்திலே மோசே பாம்பை உயர்த்தியதுபோல, மானிடமனாகிய நானும் உயர்த்தப்பட வேண்டும்.
15 தஸ்மாத்³ ய​: கஸ்²சித் தஸ்மிந் விஸ்²வஸிஷ்யதி ஸோ(அ)விநாஸ்²ய​: ஸந் அநந்தாயு​: ப்ராப்ஸ்யதி| (aiōnios g166)
அப்போது மானிடமகனாகிய என்மீது விசுவாசமாயிருக்கிற ஒவ்வொருவரும், நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.” (aiōnios g166)
16 ஈஸ்²வர இத்த²ம்’ ஜக³த³த³யத யத் ஸ்வமத்³விதீயம்’ தநயம்’ ப்ராத³தா³த் ததோ ய​: கஸ்²சித் தஸ்மிந் விஸ்²வஸிஷ்யதி ஸோ(அ)விநாஸ்²ய​: ஸந் அநந்தாயு​: ப்ராப்ஸ்யதி| (aiōnios g166)
இறைவன் தமது ஒரே மகனை ஒப்புக்கொடுத்து அவரில் விசுவாசிக்கிற ஒருவரும் அழிந்து போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி இவ்வளவாய் உலகத்தினரை அன்புகூர்ந்தார். (aiōnios g166)
17 ஈஸ்²வரோ ஜக³தோ லோகாந் த³ண்ட³யிதும்’ ஸ்வபுத்ரம்’ ந ப்ரேஷ்ய தாந் பரித்ராதும்’ ப்ரேஷிதவாந்|
உலகத்தைக் குற்றவாளி என்று தீர்ப்பதற்காக இறைவன் தமது மகனை அனுப்பாமல், தமது மகனின் மூலமாய் உலகத்தவர்களை இரட்சிப்பதற்காகவே அனுப்பினார்.
18 அதஏவ ய​: கஸ்²சித் தஸ்மிந் விஸ்²வஸிதி ஸ த³ண்டா³ர்ஹோ ந ப⁴வதி கிந்து ய​: கஸ்²சித் தஸ்மிந் ந விஸ்²வஸிதி ஸ இதா³நீமேவ த³ண்டா³ர்ஹோ ப⁴வதி, யத​: ஸ ஈஸ்²வரஸ்யாத்³விதீயபுத்ரஸ்ய நாமநி ப்ரத்யயம்’ ந கரோதி|
இறைவனுடைய மகனில் விசுவாசிக்கிற யாவருக்கும் நியாயத்தீர்ப்பு இல்லை. ஆனால் அவரை விசுவாசிக்காதவருக்கோ ஏற்கெனவே நியாயத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. ஏனெனில் அவர்கள் இறைவனுடைய ஒரே மகனின் பெயரில் விசுவாசம் வைக்கவில்லை.
19 ஜக³தோ மத்⁴யே ஜ்யோதி​: ப்ராகாஸ²த கிந்து மநுஷ்யாணாம்’ கர்ம்மணாம்’ த்³ரு’ஷ்டத்வாத் தே ஜ்யோதிஷோபி திமிரே ப்ரீயந்தே ஏததே³வ த³ண்ட³ஸ்ய காரணாம்’ ப⁴வதி|
அந்த நியாயத்தீர்ப்பு என்னவென்றால்: உலகத்திற்குள் வெளிச்சம் வந்தது. மனிதர் வெளிச்சத்தை அல்ல, இருளையே விரும்பினார்கள். ஏனெனில் அவர்களது செயல்கள் தீயவைகளாய் இருந்தன.
20 ய​: குகர்ம்ம கரோதி தஸ்யாசாரஸ்ய த்³ரு’ஷ்டத்வாத் ஸ ஜ்யோதிர்ரூ’தீயித்வா தந்நிகடம்’ நாயாதி;
தீயசெயலைச் செய்கிற ஒவ்வொருவரும் வெளிச்சத்தை வெறுக்கிறார்கள். தமது தீய செயல்கள் வெளியரங்கமாகிவிடும் என்று அவர்கள் வெளிச்சத்திற்குள் வரமாட்டார்கள்.
21 கிந்து ய​: ஸத்கர்ம்ம கரோதி தஸ்ய ஸர்வ்வாணி கர்ம்மாணீஸ்²வரேண க்ரு’தாநீதி ஸதா² ப்ரகாஸ²தே தத³பி⁴ப்ராயேண ஸ ஜ்யோதிஷ​: ஸந்நிதி⁴ம் ஆயாதி|
ஆனால் சத்தியத்தின்படி வாழ்கிறவர்களோ வெளிச்சத்திற்குள் வருகிறார்கள். தமது செயல்கள் எல்லாம் இறைவனுக்குள்ளாகவே செய்யப்பட்டிருப்பதால், அது தெளிவாய்த் தெரியும்படி அவர்கள் வெளிச்சத்திற்குள் வருகிறார்கள் என்றார்.
22 தத​: பரம் யீஸு²​: ஸி²ஷ்யை​: ஸார்த்³த⁴ம்’ யிஹூதீ³யதே³ஸ²ம்’ க³த்வா தத்ர ஸ்தி²த்வா மஜ்ஜயிதும் ஆரப⁴த|
இதற்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயாவின் நாட்டுப் புறத்துக்குச் சென்றார்கள். அங்கே இயேசு சிறிதுகாலம் அவர்களுடன் தங்கி, மக்களுக்குத் திருமுழுக்கு கொடுத்து வந்தார்.
23 ததா³ ஸா²லம் நக³ரஸ்ய ஸமீபஸ்தா²யிநி ஐநந் க்³ராமே ப³ஹுதரதோயஸ்தி²தேஸ்தத்ர யோஹந் அமஜ்ஜயத் ததா² ச லோகா ஆக³த்ய தேந மஜ்ஜிதா அப⁴வந்|
யோவானும் சாலிமுக்கு அருகே இருந்த அயினோன் என்ற இடத்தில் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அங்கே தண்ணீர் அதிகமாய் இருந்ததுடன், திருமுழுக்கு பெறும்படி மக்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள்.
24 ததா³ யோஹந் காராயாம்’ ந ப³த்³த⁴​: |
இது யோவான் சிறையில் போடப்படும் முன்னே நடைபெற்றது.
25 அபரஞ்ச ஸா²சகர்ம்மணி யோஹாந​: ஸி²ஷ்யை​: ஸஹ யிஹூதீ³யலோகாநாம்’ விவாதே³ ஜாதே, தே யோஹந​: ஸம்’ந்நிதி⁴ம்’ க³த்வாகத²யந்,
யோவானுடைய சீடர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையில் சடங்காச்சார சுத்திகரிப்பைக் குறித்து விவாதம் ஏற்பட்டது.
26 ஹே கு³ரோ யர்த்³த³நநத்³யா​: பாரே ப⁴வதா ஸார்த்³த⁴ம்’ ய ஆஸீத் யஸ்மிம்’ஸ்²ச ப⁴வாந் ஸாக்ஷ்யம்’ ப்ரத³தா³த் பஸ்²யது ஸோபி மஜ்ஜயதி ஸர்வ்வே தஸ்ய ஸமீபம்’ யாந்தி ச|
யோவானுடைய சீடர்கள் யோவானிடத்தில் வந்து அவனிடம், “போதகரே, யோர்தானுக்கு அக்கரையில் உம்மோடிருந்த ஒருவரைக் குறித்து நீர் சாட்சி கொடுத்தீரே. அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடத்தில் போய்க்கொண்டிருக்கிறார்களே” என்றார்கள்.
27 ததா³ யோஹந் ப்ரத்யவோசத்³ ஈஸ்²வரேண ந த³த்தே கோபி மநுஜ​: கிமபி ப்ராப்தும்’ ந ஸ²க்நோதி|
யோவான் அதற்குப் பதிலாக, “ஒருவர், பரலோகத்திலிருந்து கொடுக்கப்படுவதை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
28 அஹம்’ அபி⁴ஷிக்தோ ந ப⁴வாமி கிந்து தத³க்³ரே ப்ரேஷிதோஸ்மி யாமிமாம்’ கதா²ம்’ கதி²தவாநாஹம்’ தத்ர யூயம்’ ஸர்வ்வே ஸாக்ஷிண​: ஸ்த²|
‘நான் கிறிஸ்து அல்ல, அவருக்கு முன்பாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் சொன்னதற்கு நீங்களே எனக்குச் சாட்சிகள்.
29 யோ ஜந​: கந்யாம்’ லப⁴தே ஸ ஏவ வர​: கிந்து வரஸ்ய ஸந்நிதௌ⁴ த³ண்டா³யமாநம்’ தஸ்ய யந்மித்ரம்’ தேந வரஸ்ய ஸ²ப்³தே³ ஸ்²ருதே(அ)தீவாஹ்லாத்³யதே மமாபி தத்³வத்³ ஆநந்த³ஸித்³தி⁴ர்ஜாதா|
மணவாளனுக்கே மணப்பெண் உரியவள். மணவாளனின் தோழனோ, மணவாளனின் அருகே நின்று அவன் சொல்வதைக் கேட்கிறான். அவன் மணவாளனுடைய குரலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அந்த மகிழ்ச்சியே எனக்குரியது. அது இப்போது நிறைவடைந்தது.
30 தேந க்ரமஸோ² வர்த்³தி⁴தவ்யம்’ கிந்து மயா ஹ்ஸிதவ்யம்’|
அவரோ மிகுதிப்பட வேண்டும்; நானோ குறைந்துபோக வேண்டும்.
31 ய ஊர்த்⁴வாதா³க³ச்ச²த் ஸ ஸர்வ்வேஷாம்’ முக்²யோ யஸ்²ச ஸம்’ஸாராத்³ உத³பத்³யத ஸ ஸாம்’ஸாரிக​: ஸம்’ஸாரீயாம்’ கதா²ஞ்ச கத²யதி யஸ்து ஸ்வர்கா³தா³க³ச்ச²த் ஸ ஸர்வ்வேஷாம்’ முக்²ய​: |
“மேலே இருந்து வருகிறவர் எல்லோருக்கும் மேலானவராகவே இருக்கிறார்; கீழே பூமியிலிருந்து வருகிறவனோ பூமிக்கே சொந்தமாயிருக்கிறான். அவன் பூமிக்குரிய காரியங்களைப் பேசுகிறான். பரலோகத்திலிருந்து வருகிறவரோ எல்லோரிலும் மேன்மையானவராகவே இருக்கிறார்.
32 ஸ யத³பஸ்²யத³ஸ்²ரு’ணோச்ச தஸ்மிந்நேவ ஸாக்ஷ்யம்’ த³தா³தி ததா²பி ப்ராயஸ²​: கஸ்²சித் தஸ்ய ஸாக்ஷ்யம்’ ந க்³ரு’ஹ்லாதி;
அவர் தாம் கண்டதையும் கேட்டதையும் குறித்து சாட்சி கூறுகிறார். ஆனால் அவருடைய சாட்சியையோ ஒருவரும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33 கிந்து யோ க்³ரு’ஹ்லாதி ஸ ஈஸ்²வரஸ்ய ஸத்யவாதி³த்வம்’ முத்³ராங்கி³தம்’ கரோதி|
அவருடைய சாட்சியை ஏற்றுக் கொள்கிறவர்களோ, இறைவன் உண்மை உள்ளவர் என்று உறுதிப்படுத்துகிறார்கள்.
34 ஈஸ்²வரேண ய​: ப்ரேரித​: ஸஏவ ஈஸ்²வரீயகதா²ம்’ கத²யதி யத ஈஸ்²வர ஆத்மாநம்’ தஸ்மை அபரிமிதம் அத³தா³த்|
இறைவனால் அனுப்பப்பட்டவரோ இறைவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார். ஏனெனில், இறைவன் அவருக்கு ஆவியானவரை அளவின்றிக் கொடுத்திருக்கிறார்.
35 பிதா புத்ரே ஸ்நேஹம்’ க்ரு’த்வா தஸ்ய ஹஸ்தே ஸர்வ்வாணி ஸமர்பிதவாந்|
பிதா மகனை நேசிக்கிறார். அவர் எல்லாவற்றையும் மகனுடைய கைகளிலே ஒப்படைத்திருக்கிறார்.
36 ய​: கஸ்²சித் புத்ரே விஸ்²வஸிதி ஸ ஏவாநந்தம் பரமாயு​: ப்ராப்நோதி கிந்து ய​: கஸ்²சித் புத்ரே ந விஸ்²வஸிதி ஸ பரமாயுஷோ த³ர்ஸ²நம்’ ந ப்ராப்நோதி கிந்த்வீஸ்²வரஸ்ய கோபபா⁴ஜநம்’ பூ⁴த்வா திஷ்ட²தி| (aiōnios g166)
இறைவனின் மகனில் விசுவாசமாயிருக்கிறவர் எவரோ, அவருக்கு நித்திய ஜீவன் உண்டு. இறைவனின் மகனைப் புறக்கணிக்கிறவர் எவரோ, அவர்கள் அந்த ஜீவனைக் காணமாட்டார்கள். ஏனெனில் இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் நிலைத்திருக்கும்” என்றான். (aiōnios g166)

< யோஹந​: 3 >