< ப்ரேரிதா​: 21 >

1 தை ர்விஸ்ரு’ஷ்டா​: ஸந்தோ வயம்’ போதம்’ பா³ஹயித்வா ரு’ஜுமார்கே³ண கோஷம் உபத்³வீபம் ஆக³த்ய பரே(அ)ஹநி ரோதி³யோபத்³வீபம் ஆக³ச்சா²ம ததஸ்தஸ்மாத் பாதாராயாம் உபாதிஷ்டா²ம|
நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, கப்பல் மூலம் புறப்பட்டு, நேர்திசையில் பயணம் செய்து, கோஸ்தீவைச் சென்றடைந்தோம். மறுநாள் அங்கிருந்து ரோதுவுக்குப் போனோம். பின்பு அங்கிருந்து பத்தாரா பட்டணத்திற்குப் போனோம்.
2 தத்ர பை²நீகியாதே³ஸ²கா³மிநம் போதமேகம்’ ப்ராப்ய தமாருஹ்ய க³தவந்த​: |
அங்கிருந்து பெனிக்கேவுக்கு ஒரு கப்பல் போவதை நாங்கள் கண்டு, அதில் ஏறிப் பயணமானோம்.
3 குப்ரோபத்³வீபம்’ த்³ரு’ஷ்ட்வா தம்’ ஸவ்யதி³ஸி² ஸ்தா²பயித்வா ஸுரியாதே³ஸ²ம்’ க³த்வா போதஸ்த²த்³ரவ்யாண்யவரோஹயிதும்’ ஸோரநக³ரே லாகி³தவந்த​: |
நாங்கள் சீப்புரு தீவைக் கண்டு, அதன் தெற்குப் பக்கமாக அதைக் கடந்துசென்று, சீரியாவுக்குக் கப்பலில் பயணமானோம். தீரு பட்டணத்தில் கரை இறங்கினோம். ஏனெனில், அந்தக் கப்பல் அங்கே பொருட்களை இறக்க வேண்டியிருந்தது.
4 தத்ர ஸி²ஷ்யக³ணஸ்ய ஸாக்ஷாத்கரணாய வயம்’ தத்ர ஸப்ததி³நாநி ஸ்தி²தவந்த​: பஸ்²சாத்தே பவித்ரேணாத்மநா பௌலம்’ வ்யாஹரந் த்வம்’ யிரூஸா²லம்நக³ரம்’ மா க³ம​: |
அங்கே சீடர்கள் இருப்பதைக் கண்டு, அவர்களுடன் ஏழு நாட்கள் தங்கினோம். அவர்கள் ஆவியானவரின் ஏவுதலினால், எருசலேமுக்குப் போகவேண்டாம் எனப் பவுலைக் கெஞ்சிக் கேட்டார்கள்.
5 ததஸ்தேஷு ஸப்தஸு தி³நேஷு யாபிதேஷு ஸத்ஸு வயம்’ தஸ்மாத் ஸ்தா²நாத் நிஜவர்த்மநா க³தவந்த​: , தஸ்மாத் தே ஸபா³லவ்ரு’த்³த⁴வநிதா அஸ்மாபி⁴​: ஸஹ நக³ரஸ்ய பரிஸரபர்ய்யந்தம் ஆக³தா​: பஸ்²சாத்³வயம்’ ஜலதி⁴தடே ஜாநுபாதம்’ ப்ரார்த²யாமஹி|
ஆனால் நாங்களோ, அங்கே தங்கவேண்டிய காலம் முடிந்ததும், அவ்விடத்தைவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்பொழுது அங்கேயிருந்த சீடர்கள் அனைவரும் தங்கள் மனைவி, பிள்ளைகளுடனும் பட்டணத்தைவிட்டு வெளியே வந்து, எங்களுடனே வந்தார்கள். நாங்கள் அனைவரும் கடற்கரையில் முழங்காற்படியிட்டு மன்றாடினோம்.
6 தத​: பரஸ்பரம்’ விஸ்ரு’ஷ்டா​: ஸந்தோ வயம்’ போதம்’ க³தாஸ்தே து ஸ்வஸ்வக்³ரு’ஹம்’ ப்ரத்யாக³தவந்த​: |
பின்பு ஒருவருக்கொருவர் விடைபெற்று நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
7 வயம்’ ஸோரநக³ராத் நாவா ப்ரஸ்தா²ய தலிமாயிநக³ரம் உபாதிஷ்டா²ம தத்ராஸ்மாகம்’ ஸமுத்³ரீயமார்க³ஸ்யாந்தோ(அ)ப⁴வத் தத்ர ப்⁴ராத்ரு’க³ணம்’ நமஸ்க்ரு’த்ய தி³நமேகம்’ தை​: ஸார்த்³த⁴ம் உஷதவந்த​: |
நாங்கள் தீரு பட்டணத்திலிருந்து தொடர்ந்து பயணம் செய்து, பித்தொலோமாய் பட்டணத்தில் கரையிறங்கினோம். அங்கே சகோதரரைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி, அவர்களுடனே ஒரு நாள் தங்கினோம்.
8 பரே (அ)ஹநி பௌலஸ்தஸ்ய ஸங்கி³நோ வயஞ்ச ப்ரதிஷ்ட²மாநா​: கைஸரியாநக³ரம் ஆக³த்ய ஸுஸம்’வாத³ப்ரசாரகாநாம்’ ஸப்தஜநாநாம்’ பி²லிபநாம்ந ஏகஸ்ய க்³ரு’ஹம்’ ப்ரவிஸ்²யாவதிஷ்டா²ம|
மறுநாள் நாங்கள் புறப்பட்டு செசரியா பட்டணத்தைப் போய்ச் சேர்ந்தோம். அங்கே நற்செய்தியாளனான பிலிப்புவின் வீட்டில் தங்கினோம். இவன் முன்பு உணவு பரிமாறும் பணிக்குத் தெரிந்தெடுத்த, அந்த ஏழுபேரில் ஒருவன்.
9 தஸ்ய சதஸ்ரோ து³ஹிதரோ(அ)நூடா⁴ ப⁴விஷ்யத்³வாதி³ந்ய ஆஸந்|
அவனுக்கு கன்னிகைகளான நான்கு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவாக்கு உரைப்பவர்கள்.
10 தத்ராஸ்மாஸு ப³ஹுதி³நாநி ப்ரோஷிதேஷு யிஹூதீ³யதே³ஸா²த்³ ஆக³த்யாகா³ப³நாமா ப⁴விஷ்யத்³வாதீ³ ஸமுபஸ்தி²தவாந்|
அங்கே சிலநாட்கள் நாங்கள் தங்கியிருக்கையில், அகபு என்னும் பெயருடைய இறைவாக்கினன் யூதேயாவிலிருந்து வந்தான்.
11 ஸோஸ்மாகம்’ ஸமீபமேத்ய பௌலஸ்ய கடிப³ந்த⁴நம்’ க்³ரு’ஹீத்வா நிஜஹஸ்தாபாதா³ந் ப³த்³த்⁴வா பா⁴ஷிதவாந் யஸ்யேத³ம்’ கடிப³ந்த⁴நம்’ தம்’ யிஹூதீ³யலோகா யிரூஸா²லமநக³ர இத்த²ம்’ ப³த்³த்⁴வா பி⁴ந்நதே³ஸீ²யாநாம்’ கரேஷு ஸமர்பயிஷ்யந்தீதி வாக்யம்’ பவித்ர ஆத்மா கத²யதி|
அவன் எங்களிடம் வந்து, பவுலின் இடைக்கச்சையை எடுத்து, அதனால் தனது கைகளையும், கால்களையும் கட்டிக்கொண்டு இறைவாக்குரைத்தான். அவன் சொன்னதாவது: “இந்த இடைக்கச்சைக்குச் சொந்தமானவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டி, அவனை யூதரல்லாத மக்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்” என்றான்.
12 ஏதாத்³ரு’ஸீ²ம்’ கதா²ம்’ ஸ்²ருத்வா வயம்’ தந்நக³ரவாஸிநோ ப்⁴ராதரஸ்²ச யிரூஸா²லமம்’ ந யாதும்’ பௌலம்’ வ்யநயாமஹி;
நாங்கள் இதைக் கேட்டபோது, நாங்களும் அங்கிருந்த மக்களும் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பவுலைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
13 கிந்து ஸ ப்ரத்யாவாதீ³த், யூயம்’ கிம்’ குருத²? கிம்’ க்ரந்த³நேந மமாந்த​: கரணம்’ விதீ³ர்ணம்’ கரிஷ்யத²? ப்ரபோ⁴ ர்யீஸோ² ர்நாம்நோ நிமித்தம்’ யிரூஸா²லமி ப³த்³தோ⁴ ப⁴விதும்’ கேவல தந்ந ப்ராணாந் தா³துமபி ஸஸஜ்ஜோஸ்மி|
அப்பொழுது பவுல் எங்களிடம், “நீங்கள் ஏன் அழுது என் இருதயத்தை கலங்கப் பண்ணுகிறீர்கள்? கர்த்தராகிய இயேசுவின் பெயருக்காக நான் எருசலேமில் கட்டி சிறையிடப்படுவதற்கு மட்டுமல்ல, இறப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான்.
14 தேநாஸ்மாகம்’ கதா²யாம் அக்³ரு’ஹீதாயாம் ஈஸ்²வரஸ்ய யதே²ச்சா² ததை²வ ப⁴வத்வித்யுக்த்வா வயம்’ நிரஸ்யாம|
நாங்கள் சொல்லியும் பவுல் கேட்காததினால், “கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கட்டும்” என்று சொல்லி, நாங்கள் பேசாமல் இருந்தோம்.
15 பரே(அ)ஹநி பாதே²யத்³ரவ்யாணி க்³ரு’ஹீத்வா யிரூஸா²லமம்’ ப்ரதி யாத்ராம் அகுர்ம்ம|
இதன்பின், நாங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகி எருசலேமுக்குப் புறப்பட்டோம்.
16 தத​: கைஸரியாநக³ரநிவாஸிந​: கதிபயா​: ஸி²ஷ்யா அஸ்மாபி⁴​: ஸார்த்³த⁴ம் இத்வா க்ரு’ப்ரீயேந ம்நாஸந்நாம்நா யேந ப்ராசீநஸி²ஷ்யேந ஸார்த்³த⁴ம் அஸ்மாபி⁴ ர்வஸ்தவ்யம்’ தஸ்ய ஸமீபம் அஸ்மாந் நீதவந்த​: |
செசரியாவிலிருந்து சில சீடர்கள் எங்களுடனேகூட வந்து, நாங்கள் தங்குவதற்கு எங்களை மினாசோனுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். அவன் சீப்புரு தீவைச் சேர்ந்தவனும், தொடக்கத்திலேயே சீடர்களானவர்களில் ஒருவனுமாய் இருந்தான்.
17 அஸ்மாஸு யிரூஸா²லம்யுபஸ்தி²தேஷு தத்ரஸ்த²ப்⁴ராத்ரு’க³ணோ(அ)ஸ்மாந் ஆஹ்லாதே³ந க்³ரு’ஹீதவாந்|
நாங்கள் எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த சகோதரர் எங்களை மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.
18 பரஸ்மிந் தி³வஸே பௌலே(அ)ஸ்மாபி⁴​: ஸஹ யாகூபோ³ க்³ரு’ஹம்’ ப்ரவிஷ்டே லோகப்ராசீநா​: ஸர்வ்வே தத்ர பரிஷதி³ ஸம்’ஸ்தி²தா​: |
மறுநாள் பவுலும், நாங்களும் யாக்கோபைச் சந்திக்கும்படி போனோம். எருசலேம் திருச்சபையின் தலைவர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.
19 அநந்தரம்’ ஸ தாந் நத்வா ஸ்வீயப்ரசாரணேந பி⁴ந்நதே³ஸீ²யாந் ப்ரதீஸ்²வரோ யாநி கர்ம்மாணி ஸாதி⁴தவாந் ததீ³யாம்’ கதா²ம் அநுக்ரமாத் கதி²தவாந்|
பவுல் அவர்களை வாழ்த்தி, தனது ஊழியத்தின் மூலம் இறைவன் யூதரல்லாதவர் மத்தியில் செய்தவற்றைக் குறித்து விவரமாய் விளக்கிச்சொன்னான்.
20 இதி ஸ்²ருத்வா தே ப்ரபு⁴ம்’ த⁴ந்யம்’ ப்ரோச்ய வாக்யமித³ம் அபா⁴ஷந்த, ஹே ப்⁴ராத ர்யிஹூதீ³யாநாம்’ மத்⁴யே ப³ஹுஸஹஸ்ராணி லோகா விஸ்²வாஸிந ஆஸதே கிந்து தே ஸர்வ்வே வ்யவஸ்தா²மதாசாரிண ஏதத் ப்ரத்யக்ஷம்’ பஸ்²யஸி|
அவர்கள் இதைக் கேட்டபோது, இறைவனைத் துதித்தார்கள். பின்பு அவர்கள் பவுலிடம்: “சகோதரனே, யூதருக்குள் ஆயிரக்கணக்கானோர் விசுவாசித்திருக்கிறார்கள் என்று நீ காண்கிறாயே. அவர்கள் அனைவரும் மோசேயின் சட்டத்தைக்குறித்து ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
21 ஸி²ஸூ²நாம்’ த்வக்சே²த³நாத்³யாசரணம்’ ப்ரதிஷித்⁴ய த்வம்’ பி⁴ந்நதே³ஸ²நிவாஸிநோ யிஹூதீ³யலோகாந் மூஸாவாக்யம் அஸ்²ரத்³தா⁴தும் உபதி³ஸ²ஸீதி தை​: ஸ்²ருதமஸ்தி|
யூதரல்லாதவர்களின் மத்தியில் வாழும் யூதருக்கும், அவர்கள் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதை விட்டுவிட வேண்டும் என்று நீ போதிக்கிறதாக இங்குள்ள யூதருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றும், யூத முறைகளைக் கைக்கொள்ளக்கூடாது என்றும் நீ போதிக்கிறதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
22 த்வமத்ராக³தோஸீதி வார்த்தாம்’ ஸமாகர்ண்ய ஜநநிவஹோ மிலித்வாவஸ்²யமேவாக³மிஷ்யதி; அதஏவ கிம்’ கரணீயம்? அத்ர வயம்’ மந்த்ரயித்வா ஸமுபாயம்’ த்வாம்’ வதா³மஸ்தம்’ த்வமாசர|
ஆகவே நாம் செய்யக்கூடியது என்ன? நீ இங்கே வந்திருப்பதை அவர்கள் நிச்சயமாய் கேள்விப்படுவார்கள்.
23 வ்ரதம்’ கர்த்தும்’ க்ரு’தஸங்கல்பா யே(அ)ஸ்மாம்’க சத்வாரோ மாநவா​: ஸந்தி
எனவே, நாங்கள் உனக்குச் சொல்வதைச் செய். இங்கே நேர்த்திக்கடன் செய்திருக்கிற நான்குபேர் எங்களிடம் இருக்கிறார்கள்.
24 தாந் க்³ரு’ஹீத்வா தை​: ஸஹித​: ஸ்வம்’ ஸு²சிம்’ குரு ததா² தேஷாம்’ ஸி²ரோமுண்ட³நே யோ வ்யயோ ப⁴வதி தம்’ த்வம்’ தே³ஹி| ததா² க்ரு’தே த்வதீ³யாசாரே யா ஜநஸ்²ருதி ர்ஜாயதே ஸாலீகா கிந்து த்வம்’ விதி⁴ம்’ பாலயந் வ்யவஸ்தா²நுஸாரேணேவாசரஸீதி தே போ⁴த்ஸந்தே|
இவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், இவர்கள் செய்யும் பாரம்பரிய சுத்திகரிப்பு முறைமைகளில் நீயும் சேர்ந்துகொள்; இவர்கள் மொட்டையடிப்பதற்கான செலவை நீ செலுத்து. அப்பொழுது அனைவரும் உன்னைப்பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட காரியங்களில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், நீயும் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தே வாழ்கிறாய் என்றும் அறிந்துகொள்வார்கள்.
25 பி⁴ந்நதே³ஸீ²யாநாம்’ விஸ்²வாஸிலோகாநாம்’ நிகடே வயம்’ பத்ரம்’ லிகி²த்வேத்த²ம்’ ஸ்தி²ரீக்ரு’தவந்த​: , தே³வப்ரஸாத³போ⁴ஜநம்’ ரக்தம்’ க³லபீட³நமாரிதப்ராணிபோ⁴ஜநம்’ வ்யபி⁴சாரஸ்²சைதேப்⁴ய​: ஸ்வரக்ஷணவ்யதிரேகேண தேஷாமந்யவிதி⁴பாலநம்’ கரணீயம்’ ந|
யூதரல்லாத விசுவாசிகளைக் குறித்தோ, நாங்கள் எங்கள் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதியிருக்கிறோம்; அவர்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவையும் இரத்தத்தையும் நெரிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும் எழுதியிருக்கிறோம்” என்றார்கள்.
26 தத​: பௌலஸ்தாந் மாநுஷாநாதா³ய பரஸ்மிந் தி³வஸே தை​: ஸஹ ஸு²சி ர்பூ⁴த்வா மந்தி³ரம்’ க³த்வா ஸௌ²சகர்ம்மணோ தி³நேஷு ஸம்பூர்ணேஷு தேஷாம் ஏகைகார்த²ம்’ நைவேத்³யாத்³யுத்ஸர்கோ³ ப⁴விஷ்யதீதி ஜ்ஞாபிதவாந்|
மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடனே தானும் பாரம்பரிய முறைப்படி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டான். பின்பு அவன் சுத்திகரிப்புக்கான நாட்கள் எப்பொழுது முடிவடையும் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்குமான காணிக்கை எப்பொழுது செலுத்தப்படும் என்றும் அறிவிப்பதற்கு ஆலயத்திற்குப் போனான்.
27 தேஷு ஸப்தஸு தி³நேஷு ஸமாப்தகல்பேஷு ஆஸி²யாதே³ஸ²நிவாஸிநோ யிஹூதீ³யாஸ்தம்’ மத்⁴யேமந்தி³ரம்’ விலோக்ய ஜநநிவஹஸ்ய மந​: ஸு குப்ரவ்ரு’த்திம்’ ஜநயித்வா தம்’ த்⁴ரு’த்வா
அந்த ஏழு நாட்கள் முடியப்போகும் வேளையில், ஆசியா பகுதியைச் சேர்ந்த சில யூதர்கள் பவுலை ஆலயத்தில் கண்டார்கள். அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களைத் தூண்டியெழுப்பி, பவுலைப் பிடித்தார்கள்.
28 ப்ரோச்சை​: ப்ராவோசந், ஹே இஸ்ராயேல்லோகா​: ஸர்வ்வே ஸாஹாய்யம்’ குருத| யோ மநுஜ ஏதேஷாம்’ லோகாநாம்’ மூஸாவ்யவஸ்தா²யா ஏதஸ்ய ஸ்தா²நஸ்யாபி விபரீதம்’ ஸர்வ்வத்ர ஸர்வ்வாந் ஸி²க்ஷயதி ஸ ஏஷ​: ; விஸே²ஷத​: ஸ பி⁴ந்நதே³ஸீ²யலோகாந் மந்தி³ரம் ஆநீய பவித்ரஸ்தா²நமேதத்³ அபவித்ரமகரோத்|
அவர்கள் சத்தமிட்டு, “இஸ்ரயேலரே, எங்களுக்கு உதவிசெய்யுங்கள்! நமது மக்களுக்கும், மோசேயின் சட்டத்திற்கும், இந்த இடத்திற்கும் விரோதமாக, எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் போதிக்கிறவன் இவன்தான். இவன் ஆலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த இடத்தையும் தூய்மைக் கேடாக்கிவிட்டான்” என்றார்கள்.
29 பூர்வ்வம்’ தே மத்⁴யேநக³ரம் இபி²ஷநக³ரீயம்’ த்ரபி²மம்’ பௌலேந ஸஹிதம்’ த்³ரு’ஷ்டவந்த ஏதஸ்மாத் பௌலஸ்தம்’ மந்தி³ரமத்⁴யம் ஆநயத்³ இத்யந்வமிமத|
ஏனெனில் அவர்கள் எபேசியனான துரோப்பீமும், பவுலுடனே பட்டணத்தில் இருந்ததை முன்பு கண்டிருந்தார்கள். இதனால் பவுல், அவனையும் ஆலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று அவர்கள் நினைத்தார்கள்.
30 அதஏவ ஸர்வ்வஸ்மிந் நக³ரே கலஹோத்பந்நத்வாத் தா⁴வந்தோ லோகா ஆக³த்ய பௌலம்’ த்⁴ரு’த்வா மந்தி³ரஸ்ய ப³ஹிராக்ரு’ஷ்யாநயந் தத்க்ஷணாத்³ த்³வாராணி ஸர்வ்வாணி ச ருத்³தா⁴நி|
முழுப்பட்டணமும் குழப்பமடைந்தது, எல்லாப் பகுதிகளிலும் இருந்த மக்கள் அங்கு ஓடிவந்தார்கள். அவர்கள் பவுலைப் பிடித்து, ஆலயத்திலிருந்து இழுத்துக்கொண்டு சென்றார்கள். உடனே ஆலயத்தின் கதவுகள் பூட்டப்பட்டன.
31 தேஷு தம்’ ஹந்துமுத்³யதேஷு யிரூஸா²லம்நக³ரே மஹாநுபத்³ரவோ ஜாத இதி வார்த்தாயாம்’ ஸஹஸ்ரஸேநாபதே​: கர்ணகோ³சரீபூ⁴தாயாம்’ ஸத்யாம்’ ஸ தத்க்ஷணாத் ஸைந்யாநி ஸேநாபதிக³ணஞ்ச க்³ரு’ஹீத்வா ஜவேநாக³தவாந்|
அவர்கள் அவனைக் கொலைசெய்ய முயற்சிக்கையில் எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் அடைந்திருக்கிறது என்ற செய்தி ரோமப் படைத்தளபதிக்கு எட்டியது.
32 ததோ லோகா​: ஸேநாக³ணேந ஸஹ ஸஹஸ்ரஸேநாபதிம் ஆக³ச்ச²ந்தம்’ த்³ரு’ஷ்ட்வா பௌலதாட³நாதோ ந்யவர்த்தந்த|
அவன் உடனடியாகச் சில அதிகாரிகளையும், படைவீரரையும் கூட்டிக்கொண்டு மக்கள் கூட்டத்தை நோக்கி ஓடிவந்தான். குழப்பம் விளைவித்தவர்கள் படைத்தளபதியையும் படைவீரர்களையும் கண்டபோது, பவுலை அடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.
33 ஸ ஸஹஸ்ரஸேநாபதி​: ஸந்நிதா⁴வாக³ம்ய பௌலம்’ த்⁴ரு’த்வா ஸ்²ரு’ங்க²லத்³வயேந ப³த்³த⁴ம் ஆதி³ஸ்²ய தாந் ப்ரு’ஷ்டவாந் ஏஷ க​: ? கிம்’ கர்ம்ம சாயம்’ க்ரு’தவாந்?
படைத்தளபதி வந்து அவனைக் கைதுசெய்து, அவனை இரண்டு சங்கிலிகளினால் கட்டும்படி உத்தரவிட்டான். பின்பு அவன், இவன் யார் என்றும், என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.
34 ததோ ஜநஸமூஹஸ்ய கஸ்²சித்³ ஏகப்ரகாரம்’ கஸ்²சித்³ அந்யப்ரகாரம்’ வாக்யம் அரௌத் ஸ தத்ர ஸத்யம்’ ஜ்ஞாதும் கலஹகாரணாத்³ அஸ²க்த​: ஸந் தம்’ து³ர்க³ம்’ நேதும் ஆஜ்ஞாபயத்|
மக்கள் கூட்டத்திலிருந்த சிலர் சத்தமிட்டு ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். மற்றவர்கள் வேறு எதையோ சொன்னார்கள். ஏற்பட்டிருந்த குழப்பத்தினால், படைத்தளபதிக்கு உண்மையை அறியமுடியவில்லை. எனவே அவன் பவுலைப் படையினரின் முகாமுக்குக் கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டான்.
35 தேஷு ஸோபாநஸ்யோபரி ப்ராப்தேஷு லோகாநாம்’ ஸாஹஸகாரணாத் ஸேநாக³ண​: பௌலமுத்தோல்ய நீதவாந்|
பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது, கலகக்காரரை அடக்க முடியாதிருந்ததால், பவுலை படைவீரர் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
36 தத​: ஸர்வ்வே லோகா​: பஸ்²சாத்³கா³மிந​: ஸந்த ஏநம்’ து³ரீகுருதேதி வாக்யம் உச்சைரவத³ந்|
பின்னாலே சென்ற மக்கள் கூட்டம், “அவனைக் கொல்லுங்கள்” என்று சத்தமிட்டார்கள்.
37 பௌலஸ்ய து³ர்கா³நயநஸமயே ஸ தஸ்மை ஸஹஸ்ரஸேநாபதயே கதி²தவாந், ப⁴வத​: புரஸ்தாத் கதா²ம்’ கத²யிதும்’ கிம் அநுமந்யதே? ஸ தமப்ரு’ச்ச²த் த்வம்’ கிம்’ யூநாநீயாம்’ பா⁴ஷாம்’ ஜாநாஸி?
படைவீரர் பவுலை முகாமுக்குள் கொண்டுசெல்ல முயலுகையில், அவன் படைத்தளபதியிடம், “நான் உம்முடன் கொஞ்சம் பேசலாமா?” என்று கேட்டான். அதற்கு அவன், “உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?
38 யோ மிஸரீயோ ஜந​: பூர்வ்வம்’ விரோத⁴ம்’ க்ரு’த்வா சத்வாரி ஸஹஸ்ராணி கா⁴தகாந் ஸங்கி³ந​: க்ரு’த்வா விபிநம்’ க³தவாந் த்வம்’ கிம்’ ஸஏவ ந ப⁴வஸி?
சிறிது காலத்துக்குமுன் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, நாலாயிரம் பயங்கரவாதிகளை பாலைவனத்திற்கு வழிநடத்திப்போன எகிப்தியன் நீ தானா?” என்று கேட்டான்.
39 ததா³ பௌலோ(அ)கத²யத் அஹம்’ கிலிகியாதே³ஸ²ஸ்ய தார்ஷநக³ரீயோ யிஹூதீ³யோ, நாஹம்’ ஸாமாந்யநக³ரீயோ மாநவ​: ; அதஏவ விநயே(அ)ஹம்’ லாகாநாம்’ ஸமக்ஷம்’ கதா²ம்’ கத²யிதும்’ மாமநுஜாநீஷ்வ|
அதற்குப் பவுல், “நான் ஒரு யூதன், சிலிசியா நாட்டைச் சேர்ந்த தர்சு பட்டணத்தைச் சேர்ந்தவன். ஒரு பிரபலமான பட்டணத்தின் குடிமகன். தயவுசெய்து இந்த மக்களுடன் நான் பேச என்னை அனுமதியும்” என்றான்.
40 தேநாநுஜ்ஞாத​: பௌல​: ஸோபாநோபரி திஷ்ட²ந் ஹஸ்தேநேங்கி³தம்’ க்ரு’தவாந், தஸ்மாத் ஸர்வ்வே ஸுஸ்தி²ரா அப⁴வந்| ததா³ பௌல இப்³ரீயபா⁴ஷயா கத²யிதும் ஆரப⁴த,
படைத்தளபதியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பவுல் படிக்கட்டுகளில் நின்று கூடியிருந்த மக்களுக்கு சைகை காட்டினான். அவர்கள் அனைவரும் அமைதியடைந்தபோது, அவன் எபிரெய மொழியில் அவர்களுடன் பேசத் தொடங்கினான்.

< ப்ரேரிதா​: 21 >