< 2 பிதர: 1 >
1 யே ஜநா அஸ்மாபி⁴: ஸார்த்³த⁴ம் அஸ்ததீ³ஸ்²வரே த்ராதரி யீஸு²க்²ரீஷ்டே ச புண்யஸம்ப³லிதவிஸ்²வாஸத⁴நஸ்ய ஸமாநாம்’ஸி²த்வம்’ ப்ராப்தாஸ்தாந் ப்ரதி யீஸு²க்²ரீஷ்டஸ்ய தா³ஸ: ப்ரேரிதஸ்²ச ஸி²மோந் பிதர: பத்ரம்’ லிக²தி|
இயேசுகிறிஸ்துவின் வேலைக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு, நம்முடைய இறைவனும் இரட்சகருமான இயேசுகிறிஸ்து ஏற்படுத்திய நீதியின் மூலமாய், எங்களுடைய விசுவாசத்தைப் போன்ற உயர்மதிப்புடைய விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
2 ஈஸ்²வரஸ்யாஸ்மாகம்’ ப்ரபோ⁴ ர்யீஸோ²ஸ்²ச தத்வஜ்ஞாநேந யுஷ்மாஸ்வநுக்³ரஹஸா²ந்த்யோ ர்பா³ஹுல்யம்’ வர்த்ததாம்’|
இறைவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிவதன் மூலமாய் கிருபையும் சமாதானமும் நிறைவாய் உங்களுடன் இருப்பதாக.
3 ஜீவநார்த²ம் ஈஸ்²வரப⁴க்த்யர்த²ஞ்ச யத்³யத்³ ஆவஸ்²யகம்’ தத் ஸர்வ்வம்’ கௌ³ரவஸத்³கு³ணாப்⁴யாம் அஸ்மதா³ஹ்வாநகாரிணஸ்தத்த்வஜ்ஞாநத்³வாரா தஸ்யேஸ்²வரீயஸ²க்திரஸ்மப்⁴யம்’ த³த்தவதீ|
நம்முடைய வாழ்க்கைக்கும் இறை பக்திக்கும் தேவையான எல்லாவற்றையும், அவருடைய இறைவல்லமை நமக்குக் கொடுத்திருக்கிறது. அவரைப்பற்றி எங்களுக்கு இருக்கும் அறிவின் மூலமாய் நமக்கு இவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவரே தமது மகிமையினாலும் நன்மையினாலும் நம்மை அழைத்திருக்கிறார்.
4 தத்ஸர்வ்வேண சாஸ்மப்⁴யம்’ தாத்³ரு’ஸா² ப³ஹுமூல்யா மஹாப்ரதிஜ்ஞா த³த்தா யாபி⁴ ர்யூயம்’ ஸம்’ஸாரவ்யாப்தாத் குத்ஸிதாபி⁴லாஷமூலாத் ஸர்வ்வநாஸா²த்³ ரக்ஷாம்’ ப்ராப்யேஸ்²வரீயஸ்வபா⁴வஸ்யாம்’ஸி²நோ ப⁴விதும்’ ஸ²க்நுத²|
இவற்றின் மூலமாகவே இறைவனுடைய பெரிதான, உயர்மதிப்புடைய வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குத்தத்தங்களின் மூலமாய், அந்த இறை இயல்பில் நீங்களும் பங்குகொள்ளலாம், தீய ஆசைகளினால் உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்தும் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.
5 ததோ ஹேதோ ர்யூயம்’ ஸம்பூர்ணம்’ யத்நம்’ விதா⁴ய விஸ்²வாஸே ஸௌஜந்யம்’ ஸௌஜந்யே ஜ்ஞாநம்’
இந்த காரணத்தினால் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பை வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சியையும் செய்யுங்கள்; நற்பண்புடன் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்;
6 ஜ்ஞாந ஆயதேந்த்³ரியதாம் ஆயதேந்த்³ரியதாயாம்’ தை⁴ர்ய்யம்’ தை⁴ர்ய்ய ஈஸ்²வரப⁴க்திம்
அறிவுடன் சுயக்கட்டுப்பாட்டையும்; சுயக்கட்டுப்பாடுடன் விடாமுயற்சியையும்; விடாமுயற்சியுடன் இறை பக்தியையும்;
7 ஈஸ்²வரப⁴க்தௌ ப்⁴ராத்ரு’ஸ்நேஹே ச ப்ரேம யுங்க்த|
இறை பக்தியுடன் சகோதர பாசத்தையும்; சகோதர பாசத்துடன் அன்பையும் கூட்டிச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
8 ஏதாநி யதி³ யுஷ்மாஸு வித்³யந்தே வர்த்³த⁴ந்தே ச தர்ஹ்யஸ்மத்ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய தத்த்வஜ்ஞாநே யுஷ்மாந் அலஸாந் நிஷ்ப²லாம்’ஸ்²ச ந ஸ்தா²பயிஷ்யந்தி|
ஏனெனில் இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி உங்களிடமிருக்கும் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவோ, பலன் கொடுக்காதவர்களாகவோ இருக்காதபடி, இவை உங்களைத் தடுத்துக்கொள்ளும்.
9 கிந்த்வேதாநி யஸ்ய ந வித்³யந்தே ஸோ (அ)ந்தோ⁴ முத்³ரிதலோசந: ஸ்வகீயபூர்வ்வபாபாநாம்’ மார்ஜ்ஜநஸ்ய விஸ்ம்ரு’திம்’ க³தஸ்²ச|
ஆனால் யாராவது இந்தப் பண்புகள் அற்றவனாயிருந்தால், அவன் தூரப்பார்வையற்றவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்; தனது முந்திய பாவங்களிலிருந்து, தான் சுத்திகரிக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான்.
10 தஸ்மாத்³ ஹே ப்⁴ராதர: , யூயம்’ ஸ்வகீயாஹ்வாநவரணயோ ர்த்³ரு’ட⁴கரணே ப³ஹு யதத்⁴வம்’, தத் க்ரு’த்வா கதா³ச ந ஸ்க²லிஷ்யத²|
ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் இவற்றை செய்வீர்களானால், ஒருபோதும் விழுந்துபோகமாட்டீர்கள்.
11 யதோ (அ)நேந ப்ரகாரேணாஸ்மாகம்’ ப்ரபோ⁴ஸ்த்ராத்ரு’ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்யாநந்தராஜ்யஸ்ய ப்ரவேஸே²ந யூயம்’ ஸுகலேந யோஜயிஷ்யத்⁴வே| (aiōnios )
நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். (aiōnios )
12 யத்³யபி யூயம் ஏதத் ஸர்வ்வம்’ ஜாநீத² வர்த்தமாநே ஸத்யமதே ஸுஸ்தி²ரா ப⁴வத² ச ததா²பி யுஷ்மாந் ஸர்வ்வதா³ தத் ஸ்மாரயிதும் அஹம் அயத்நவாந் ந ப⁴விஷ்யாமி|
நான் இவற்றை உங்களுக்கு எப்பொழுதும் நினைப்பூட்டிக்கொண்டே இருப்பேன்; நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது சத்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
13 யாவத்³ ஏதஸ்மிந் தூ³ஷ்யே திஷ்டா²மி தாவத்³ யுஷ்மாந் ஸ்மாரயந் ப்ரபோ³த⁴யிதும்’ விஹிதம்’ மந்யே|
இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன்.
14 யதோ (அ)ஸ்மாகம்’ ப்ரபு⁴ ர்யீஸு²க்²ரீஷ்டோ மாம்’ யத் ஜ்ஞாபிதவாந் தத³நுஸாராத்³ தூ³ஷ்யமேதத் மயா ஸீ²க்⁴ரம்’ த்யக்தவ்யம் இதி ஜாநாமி|
ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன்.
15 மம பரலோகக³மநாத் பரமபி யூயம்’ யதே³தாநி ஸ்மர்த்தும்’ ஸ²க்ஷ்யத² தஸ்மிந் ஸர்வ்வதா² யதிஷ்யே|
ஆகவே நான் இறந்துபோன பின்பும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கதாய், என்னால் இயன்ற எல்லாவற்றையும் இப்பொழுது நான் செய்வேன்.
16 யதோ (அ)ஸ்மாகம்’ ப்ரபோ⁴ ர்யீஸு²க்²ரீஷ்டஸ்ய பராக்ரமம்’ புநராக³மநஞ்ச யுஷ்மாந் ஜ்ஞாபயந்தோ வயம்’ கல்பிதாந்யுபாக்²யாநாந்யந்வக³ச்சா²மேதி நஹி கிந்து தஸ்ய மஹிம்ந: ப்ரத்யக்ஷஸாக்ஷிணோ பூ⁴த்வா பா⁴ஷிதவந்த: |
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையையும் அவருடைய வருகையையும் நாங்கள் உங்களுக்குச் சொன்னபோது, தந்திரமான கட்டுக்கதைகளை நாங்கள் கைக்கொள்ளவில்லை. நாங்களோ அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாயிருக்கிறோம்.
17 யத: ஸ பிதுரீஸ்²வராத்³ கௌ³ரவம்’ ப்ரஸ²ம்’ஸாஞ்ச ப்ராப்தவாந் விஸே²ஷதோ மஹிமயுக்ததேஜோமத்⁴யாத்³ ஏதாத்³ரு’ஸீ² வாணீ தம்’ ப்ரதி நிர்க³தவதீ, யதா², ஏஷ மம ப்ரியபுத்ர ஏதஸ்மிந் மம பரமஸந்தோஷ: |
“இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார்.
18 ஸ்வர்கா³த் நிர்க³தேயம்’ வாணீ பவித்ரபர்வ்வதே தேந ஸார்த்³த⁴ம்’ வித்³யமாநைரஸ்மாபி⁴ரஸ்²ராவி|
அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.
19 அபரம் அஸ்மத்ஸமீபே த்³ரு’ட⁴தரம்’ ப⁴விஷ்யத்³வாக்யம்’ வித்³யதே யூயஞ்ச யதி³ தி³நாரம்ப⁴ம்’ யுஷ்மந்மந: ஸு ப்ரபா⁴தீயநக்ஷத்ரஸ்யோத³யஞ்ச யாவத் திமிரமயே ஸ்தா²நே ஜ்வலந்தம்’ ப்ரதீ³பமிவ தத்³ வாக்யம்’ ஸம்மந்யத்⁴வே தர்ஹி ப⁴த்³ரம்’ கரிஷ்யத²|
இவற்றையும்விட வெகு நிச்சயமான இறைவாக்கினர்களின் வார்த்தைகளையும் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். பொழுது புலர்ந்து, உங்கள் இருதயங்களில் கிறிஸ்து விடிவெள்ளிபோல் உதிக்குமளவும், இருளான இடத்தில் ஒளிவீசும் வெளிச்சம்போன்ற அந்த இறைவார்த்தைக்குக் கவனம் செலுத்தினால், நீங்கள் நலன்பெறுவீர்கள்.
20 ஸா²ஸ்த்ரீயம்’ கிமபி ப⁴விஷ்யத்³வாக்யம்’ மநுஷ்யஸ்ய ஸ்வகீயபா⁴வபோ³த⁴கம்’ நஹி, ஏதத்³ யுஷ்மாபி⁴: ஸம்யக் ஜ்ஞாயதாம்’|
எல்லாவற்றிற்கும் மேலாக, வேதவசனத்திலுள்ள எந்த இறைவாக்கும் இறைவாக்கினனுடைய சொந்த விளக்கத்தினால் உண்டானது அல்ல, இதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
21 யதோ ப⁴விஷ்யத்³வாக்யம்’ புரா மாநுஷாணாம் இச்சா²தோ நோத்பந்நம்’ கிந்த்வீஸ்²வரஸ்ய பவித்ரலோகா: பவித்ரேணாத்மநா ப்ரவர்த்திதா: ஸந்தோ வாக்யம் அபா⁴ஷந்த|
ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதர்களின் சித்தப்படி உண்டானது அல்ல, இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு, இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டதையே மனிதர் பேசினார்கள்.