< 2 கரிந்தி²ந: 7 >
1 அதஏவ ஹே ப்ரியதமா: , ஏதாத்³ரு’ஸீ²: ப்ரதிஜ்ஞா: ப்ராப்தைரஸ்மாபி⁴: ஸ²ரீராத்மநோ: ஸர்வ்வமாலிந்யம் அபம்ரு’ஜ்யேஸ்²வரஸ்ய ப⁴க்த்யா பவித்ராசார: ஸாத்⁴யதாம்’|
ஆகையால் என் அன்பு நண்பர்களே, இவ்விதமான வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய உடலையும், ஆவியையும் அசுத்தப்படுத்துகிற எல்லாவற்றிலுமிருந்தும், நம்மைத் தூய்மையாக்கிக் கொள்வோம்; இறைவன் மேலுள்ள பயபக்தியின் நிமித்தம், நமது பரிசுத்தத்தை முழுமையாக்கிக் கொள்வோம்.
2 யூயம் அஸ்மாந் க்³ரு’ஹ்லீத| அஸ்மாபி⁴: கஸ்யாப்யந்யாயோ ந க்ரு’த: கோ(அ)பி ந வஞ்சித: |
உங்கள் இருதயங்களில் எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் ஒருவருக்கும் தீமை செய்யவில்லை. நாங்கள் ஒருவரையும் கெடுக்கவில்லை. நாங்கள் ஒருவரையும் சுரண்டி வாழவுமில்லை.
3 யுஷ்மாந் தோ³ஷிண: கர்த்தமஹம்’ வாக்யமேதத்³ வதா³மீதி நஹி யுஷ்மாபி⁴: ஸஹ ஜீவநாய மரணாய வா வயம்’ யுஷ்மாந் ஸ்வாந்த: கரணை ர்தா⁴ரயாம இதி பூர்வ்வம்’ மயோக்தம்’|
நான் உங்களைக் குற்றப்படுத்தும்படி இதைச் சொல்லவில்லை; ஏனெனில் உங்களுடன் வாழவும், சாகவும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்குமளவுக்கு, நீங்கள் எங்கள் இருதயத்தில் இடம்பெற்றிருக்கிறீர்கள் என்று முன்பே உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேனே.
4 யுஷ்மாந் ப்ரதி மம மஹேத்ஸாஹோ ஜாயதே யுஷ்மாந் அத்⁴யஹம்’ ப³ஹு ஸ்²லாகே⁴ ச தேந ஸர்வ்வக்லேஸ²ஸமயே(அ)ஹம்’ ஸாந்த்வநயா பூர்ணோ ஹர்ஷேண ப்ரபு²ல்லிதஸ்²ச ப⁴வாமி|
நான் உங்களிடம் அதிக வெளிப்படையாக பேசியிருக்கிறேன்; நான் உங்களைக்குறித்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். நான் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறேன்; இதனால் எனது எல்லாத் துன்பங்களின் மத்தியிலும் எனது மகிழ்ச்சியோ அளவிடமுடியாதது.
5 அஸ்மாஸு மாகித³நியாதே³ஸ²ம் ஆக³தேஷ்வஸ்மாகம்’ ஸ²ரீரஸ்ய காசித³பி ஸா²ந்தி ர்நாப⁴வத் கிந்து ஸர்வ்வதோ ப³ஹி ர்விரோதே⁴நாந்தஸ்²ச பீ⁴த்யா வயம் அபீட்³யாமஹி|
நாங்கள் மக்கெதோனியாவை வந்துசேர்ந்த போதும், எங்கள் உடலுக்கு எவ்வித ஆறுதலும் இல்லாதிருந்தது. எல்லாப் பக்கங்களிலும் கஷ்டங்களே எங்களைச் சூழ்ந்திருந்தன; வெளியே முரண்பாடுகளும், உள்ளே பயங்களும் ஆட்கொண்டிருந்தன.
6 கிந்து நம்ராணாம்’ ஸாந்த்வயிதா ய ஈஸ்²வர: ஸ தீதஸ்யாக³மநேநாஸ்மாந் அஸாந்த்வயத்|
ஆனால் மனசோர்வு அடைகிறவர்களை ஆறுதல்படுத்துகிற இறைவன், தீத்துவின் வரவால் எங்களை ஆறுதல்படுத்தினார்.
7 கேவலம்’ தஸ்யாக³மநேந தந்நஹி கிந்து யுஷ்மத்தோ ஜாதயா தஸ்ய ஸாந்த்வநயாபி, யதோ(அ)ஸ்மாஸு யுஷ்மாகம்’ ஹார்த்³த³விலாபாஸக்தத்வேஷ்வஸ்மாகம்’ ஸமீபே வர்ணிதேஷு மம மஹாநந்தோ³ ஜாத: |
அவன் வருகையால் மட்டுமல்ல, நீங்கள் எவ்விதம் அவனை உற்சாகப்படுத்தினீர்கள் என்று கேள்விப்பட்டதினாலும், நாங்கள் ஆறுதலடைந்தோம். நீங்கள் என்னைப் பார்க்க எவ்வளவாக விரும்புகிறீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வளவாய் கவலைப்படுகிறீர்கள் என்பதையும், என்னை ஆதரிக்க நீங்கள் எவ்வளவு ஆவலுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் குறித்தும் அவன் எங்களுக்குச் சொன்னான். இதனால் நான் மிகவும் சந்தோஷமடைந்தேன்.
8 அஹம்’ பத்ரேண யுஷ்மாந் ஸோ²கயுக்தாந் க்ரு’தவாந் இத்யஸ்மாத்³ அந்வதப்யே கிந்த்வது⁴நா நாநுதப்யே| தேந பத்ரேண யூயம்’ க்ஷணமாத்ரம்’ ஸோ²கயுக்தீபூ⁴தா இதி மயா த்³ரு’ஸ்²யதே|
நான் உங்களுக்கு எழுதிய கடிதம் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தாலும், அதை எழுதியதற்காக நான் கவலைப்படவில்லை. எனது கடிதம் உங்களைக் கவலைப்படுத்தியதை அறிந்தபோது நான் கவலைப்பட்டது உண்மைதான். நீங்கள் சிறிது காலத்திற்கு மட்டுமே கவலைப்பட்டிருந்தீர்கள்.
9 இத்யஸ்மிந் யுஷ்மாகம்’ ஸோ²கேநாஹம்’ ஹ்ரு’ஷ்யாமி தந்நஹி கிந்து மந: பரிவர்த்தநாய யுஷ்மாகம்’ ஸோ²கோ(அ)ப⁴வத்³ இத்யநேந ஹ்ரு’ஷ்யாமி யதோ(அ)ஸ்மத்தோ யுஷ்மாகம்’ காபி ஹாநி ர்யந்ந ப⁴வேத் தத³ர்த²ம்’ யுஷ்மாகம் ஈஸ்²வரீய: ஸோ²கோ ஜாத: |
ஆனால், இப்பொழுது நான் மகிழ்ச்சியடைகிறேன்; நீங்கள் கவலைப்பட்டதற்காக அல்ல, உங்களுடைய துக்கம் உங்களில் மனமாறுதலை ஏற்படுத்தியதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன். இறைவனுடைய எண்ணத்தின்படி நீங்கள் துக்கமடைந்தீர்கள். இதனால், எங்கள் மூலமாய் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
10 ஸ ஈஸ்²வரீய: ஸோ²க: பரித்ராணஜநகம்’ நிரநுதாபம்’ மந: பரிவர்த்தநம்’ ஸாத⁴யதி கிந்து ஸாம்’ஸாரிக: ஸோ²கோ ம்ரு’த்யும்’ ஸாத⁴யதி|
ஏனெனில், இறைவன் ஏற்படுத்தும் துக்கம் மனமாறுதலைக் கொண்டுவந்து, நம்மை இரட்சிப்புக்குள் வழிநடத்துகிறது. அது தொடர்ந்து மனவருத்தத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், உலகப்பிரகாரமான துக்கம் மரணத்தையே கொண்டுவரும்.
11 பஸ்²யத தேநேஸ்²வரீயேண ஸோ²கேந யுஷ்மாகம்’ கிம்’ ந ஸாதி⁴தம்’? யத்நோ தோ³ஷப்ரக்ஷாலநம் அஸந்துஷ்டத்வம்’ ஹார்த்³த³ம் ஆஸக்தத்வம்’ ப²லதா³நஞ்சைதாநி ஸர்வ்வாணி| தஸ்மிந் கர்ம்மணி யூயம்’ நிர்ம்மலா இதி ப்ரமாணம்’ ஸர்வ்வேண ப்ரகாரேண யுஷ்மாபி⁴ ர்த³த்தம்’|
இறைவன் ஏற்படுத்திய இந்தத் துக்கம், உங்களில் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாருங்கள்: நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க உங்களுக்கு எவ்வளவு ஆர்வம்! எவ்வளவு வாஞ்சை! அதைப்பற்றி எவ்வளவு கோபம்! எவ்வளவு அச்சம்! நியாயப்படுத்துதலைக் காண எவ்வளவு ஆவல்! எவ்வளவு அக்கறை! எவ்வளவு ஆயத்தம்! இவ்வாறு இவ்விஷயத்தில் எல்லாவிதத்திலும் நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.
12 யேநாபராத்³த⁴ம்’ தஸ்ய க்ரு’தே கிம்’வா யஸ்யாபராத்³த⁴ம்’ தஸ்ய க்ரு’தே மயா பத்ரம் அலேகி² தந்நஹி கிந்து யுஷ்மாநத்⁴யஸ்மாகம்’ யத்நோ யத்³ ஈஸ்²வரஸ்ய ஸாக்ஷாத்³ யுஷ்மத்ஸமீபே ப்ரகாஸே²த தத³ர்த²மேவ|
எனவே நான் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதியபோதும்கூட, அந்தத் தீமை செய்தவனுக்காகவோ, அந்தத் தீமையினால் பாதிக்கப்பட்டவனுக்காகவோ எழுதவில்லை. இறைவனுடைய பார்வையில், நீங்கள் எங்களுக்காக உங்களை எவ்வளவாய் அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே அறியும்படியாகவே நான் அதை எழுதினேன்.
13 உக்தகாரணாத்³ வயம்’ ஸாந்த்வநாம்’ ப்ராப்தா: ; தாஞ்ச ஸாந்த்வநாம்’ விநாவரோ மஹாஹ்லாத³ஸ்தீதஸ்யாஹ்லாதா³த³ஸ்மாபி⁴ ர்லப்³த⁴: , யதஸ்தஸ்யாத்மா ஸர்வ்வை ர்யுஷ்மாபி⁴ஸ்த்ரு’ப்த: |
இவை எல்லாவற்றினாலும் நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம். நாங்கள் இவ்விதம் உற்சாகம் அடைந்ததினாலே, தீத்து எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறான் என்பதைக் கண்டு, நாங்கள் இன்னும் அதிகமாய் மகிழ்ச்சியடைந்தோம். ஏனெனில், நீங்கள் எல்லோரும் தீத்துவை ஆவியில் உற்சாகப்படுத்தினீர்கள்.
14 பூர்வ்வம்’ தஸ்ய ஸமீபே(அ)ஹம்’ யுஷ்மாபி⁴ர்யத்³ அஸ்²லாகே⁴ தேந நாலஜ்ஜே கிந்து வயம்’ யத்³வத்³ யுஷ்மாந் ப்ரதி ஸத்யபா⁴வேந ஸகலம் அபா⁴ஷாமஹி தத்³வத் தீதஸ்ய ஸமீபே(அ)ஸ்மாகம்’ ஸ்²லாக⁴நமபி ஸத்யம்’ ஜாதம்’|
நான் உங்களைக்குறித்து பெருமைக்குரிய விதமாகவே, அவனுக்குச் சொல்லியிருந்தேன். நீங்களும் என்னை அவற்றில் வெட்கப்படுத்தவில்லை. நாங்கள் எப்பொழுதும், உங்களுடன் உண்மையையேப் பேசினோம். அதுபோலவே, தீத்துவுடன் நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமையாகப் பேசியதும் உண்மையாயிற்று.
15 யூயம்’ கீத்³ரு’க் தஸ்யாஜ்ஞா அபாலயத ப⁴யகம்பாப்⁴யாம்’ தம்’ க்³ரு’ஹீதவந்தஸ்²சைதஸ்ய ஸ்மரணாத்³ யுஷ்மாஸு தஸ்ய ஸ்நேஹோ பா³ஹுல்யேந வர்த்ததே|
நீங்கள் எவ்விதம் கீழ்ப்படிந்து, பயத்தோடும், நடுக்கத்தோடும் அவனை வரவேற்றீர்கள் என்பதை அவன் நினைவில்கொள்ளும்போது, உங்கள்மேல் அவனுக்கு அன்பு பெருகுகிறது.
16 யுஷ்மாஸ்வஹம்’ ஸர்வ்வமாஸ²ம்’ஸே, இத்யஸ்மிந் மமாஹ்லாதோ³ ஜாயதே|
உங்கள்மேல் எனக்கு ஒரு முழுமையான மனவுறுதி உண்டாயிருக்கிறதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.